சுந்தர்.சியின் புதிய அவதாரம்.. வாழ்த்திய ஆர்த்தி ரவி.. உரிமையோடு அதை சொல்லிருக்காங்களே

சென்னை: இயக்குநரும், நடிகருமான சுந்தர்.சி நடக்கவிருக்கும் தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் மதுரை மத்திய தொகுதியில் போட்டியிடவிருக்கிறார். திமுகவின் பிடிஆர் பழனிவேல் தியாகராஜனும் போட்டியிடுவதால்; சுந்தருக்கு வெற்றி வாய்ப்பு கண்டிப்பாக கிடைக்காது என ஓபனாகவே பேச்சுக்கள் கேட்கின்றன. சூழல் இப்படி இருக்க சோஷியல் மீடியாவில் தனக்கென அதிகாரப்பூர்வ கணக்கை ஆரம்பித்திருக்கிறார் அவர். அதற்கு ரசிகர்கள் தங்களது வரவேற்பை கொடுத்திருக்கிறர்கள்.

மணிவண்ணனிடம் உதவி இயக்குநராக இருந்து முறைமாமன் படத்தை இயக்கி இயக்குநராக அறிமுகமானவர் சுந்தர்.சி. அந்தப் படத்தில் ஜெயராம், குஷ்பூ உள்ளிட்டோர் நடித்திருந்தார்கள். படம் மெகா ப்ளாக் பஸ்டர் ஆனது. அப்படத்துக்கு பிறகு அவர் இயக்கிய மேட்டுக்குடி, உள்ளத்தை அள்ளித்தா உள்ளிட்ட படங்கள் எல்லாம் மெகா ப்ளாக் பஸ்டர் ஆகின. முக்கியமாக சுந்தரின் படங்களில் இருக்கும் காமெடி காட்சிகள் அனைவருக்கும் ஆல் டைம் ஃபேவரைட்டாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

Aarti Ravi Welcomes Sundar C to Social Media Amid Political Entry
Photo Credit:

குஷ்பூவுடன் திருமணம்: இதற்கிடையே முறைமாமன் படத்தில் நடித்தபோது நடிகை குஷ்பூவுக்கும், சுந்தருக்கும் காதல் மலர்ந்தது. அந்தக் காதலுக்கு வீட்டில் சம்மதம் கிடைத்ததை அடுத்து இரண்டு பேரும் கடந்த 2000ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார்கள். அவர்களுக்கு இரண்டு மகள்கள் இருக்கிறார்கள். திருமணத்துக்கு பிறகும் இரண்டு பேரும் தங்களது துறைகளில் பிஸியாகவே இருந்தார்கள். குஷ்பூ மட்டும் அரசியலுக்கு சென்றார். சுந்தர் இயக்குவதோடு மட்டுமின்றி நடிகராகவும் பிஸியானார்.

ரஜினி படத்தை இயக்கும் வாய்ப்பு: அவரது இயக்கத்தில் கடைசியாக மதகஜராஜா திரைப்படம் வெளியானது. 12 வருடங்கள் கழித்து வெளியானாலும் படம் மெகா ஹிட். அதனைத் தொடர்ந்து ரஜினியை வைத்து கமல்ஹாசன் தயாரிக்கும் படத்தை முதிலில் சுந்தர்தான் இயக்குவதாக இருந்தார். ஆனால் சில காரணங்களால் அவர் வெளியேறிவிட்டார். அதற்கு பதிலாக விஷால், தமன்னா, யோகிபாபு உள்ளிட்டோரை வைத்து புருஷன் என்ற படத்தை இயக்கிவருகிறார். கண்டிப்பாக இதுவும் ஹிட்டாகும் என்ற எதிர்பார்ப்பு திரைத்துறையில் பலமாகவே இருக்கிறது.

Also Read
குடும்பத்துக்கே கடன் கொடுத்த விஜய்.. சிவகார்த்திகேயன் படத்தை ஒப்பிட்டு விளாசல்.. நிலைமை கை மீறி போகுதே
குடும்பத்துக்கே கடன் கொடுத்த விஜய்.. சிவகார்த்திகேயன் படத்தை ஒப்பிட்டு விளாசல்.. நிலைமை கை மீறி போகுதே

புதிய அவதாரம்: சூழல் இப்படி இருக்க யாரும் எதிர்பார்க்காத சர்ப்ரைஸாக; நடக்கவிருக்கும் தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் மதுரை மத்திய தொகுதியில் போட்டியிடுகிறார். இரட்டை இலை சின்னத்தில் புதிய நீதி கட்சி சார்பில் களமிறங்குகிறார். அங்கே திமுக சார்பில் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் களமிறங்கியிருக்கிறார். எனவே அவரை தாண்டி சுந்தர்.சி வெல்வது அவ்வளவு எளிதில்லை என்பதுதான் எதார்த்தம். எனவே வெல்வாரா இல்லை டெபாசிட்டை இழப்பாரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

ஆர்த்தி ரவியின் வாழ்த்து: அவர் தேர்தலில் களமிறங்குவது அவரது ரசிகர்களுக்கு கொஞ்சம் அப்செட்தான். தேவையில்லாமல் இறங்கி பெயரை கெடுத்துக்கொள்ளாமல் இருந்தால் சரி என்பது அவர்களது நிலைப்பாடு. இந்நிலையில் சோஷியல் மீடியாவில் புதிதாக அதிகாரப்பூர்வமான அக்கவுண்ட்டை ஆரம்பித்து வீடியோவை போஸ்ட் செய்திருக்கிறார்.

அந்த வீடியோவில், 'இத்தனை வருடங்கள் உங்களை இயக்குநராக, நடிகராக, தயாரிப்பாளராக சந்தோஷப்படுத்தியிருப்பதாக நம்புகிறேன். இப்போது அரசியலிலும் இறங்கியிருக்கிறேன். மதுரை மத்திய தொகுதியில் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடும் எனக்கு உங்கள் ஆதரவு இருக்கும் என நம்புகீறேன்' என குறிப்பிட்டிருந்தார். இதனை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்திருக்கும் ஆர்த்தி ரவி, 'சோஷியல் மீடியா உலகத்துக்கு உங்களை வரவேற்கிறேன் அண்ணா. உங்கள் புதிய அவதாரம் எனக்கு ஆச்சரியம் கொடுக்கிறது. எப்போதும் வெற்றிதான்' என குறிப்பிட்டுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X