ஆர்த்தி ரவியின் இரண்டாவது மகனுக்கு பிறந்தநாள்.. நெஞ்சம் உருக வாழ்த்திய ஆர்த்தி.. ரவி என்ன செஞ்சாரு?

சென்னை: நடிகர் ரவி மோகன் மற்றும் ஆர்த்தி பிரிந்து வாழ்வதாக அறிவித்ததில் இருந்து அவர்களின் ஒவ்வொரு நடவடிக்கையும் ரசிகர்கள் கவனித்து வருகிறார்கள். இந்நிலையில் இவர்களின் குழந்தைகள் ஆர்த்தியுடன் தான் இருக்கிறார்கள். இன்று அதாவது, ஆகஸ்ட் 10ஆம் தேதி அவர்களின் இரண்டாவது மகனுக்கு பிறந்தநாள் என்பதால், ஆர்த்தி வாழ்த்து தெரிவித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இதனால் ரசிகர்கள் பலரும் ரவி மோகனின் இன்ஸ்டாகிராம் பக்கத்தை அடிக்கடி செக் செய்து வருகிறார்கள்.

ஆர்த்தி - ரவி மோகனின் இரண்டாவது மகன் அயானின் பிறந்த நாள் தொடர்பாக ஆர்த்தி பதிவிட்டுள்ள வாழ்த்தில், " என் பாண்டா குட்டி, என் பாண்டா குட்டி, கடினமாக இருக்கும் போது சிரிப்பது, அநியாயம் நடக்கும் போது, பொறுமையாக இருப்பது, ஒளி ஒருபோதும் விலகாதது எனக் கூறுவது போல சிரிப்பது. உன்னுடைய ஸ்பிரிட் அனிமல் வேறு எதுவாக இருக்கும்? 100% பாண்டா.

Aarti Ravi wished her Second Son Ayaan Birthday Instagram PostTrending Fans Experting Ravi Mohan Wish
Photo Credit:

செருப்பின் அளவு: பாண்டா மென்மையானது. வேடிக்கையானது, அசைக்க முடியாதது. நீ இப்போது நான் அணியும் நெருப்பின் அளவு கொண்ட செருப்பை அணியும் அளவுக்கு ஆளாகிவிட்டாய். என் காலணி சேகரிப்பை "பகிர்ந்து" கொள்ளும் உன்னுடைய பிரமாண்டமான திட்டம் அப்போது இருந்துதானே வந்தது. ஒரு காவல் போரை எதிர் கொள்வேன் என நான் எதிர்பார்க்காதது. உலகம் நம்க்கு கஷ்ட காலத்தை கொடுக்க முயற்சிக்கும்போதும் மிகவும் நிதானமாக மென்மையாக இருக்கும் அரிய திறனை நீ வைத்திருக்கிறாய்.

பிறந்த நாள்: அந்த நிதானமும் மென்மையும்? அதுதான் உன்னுடைய மந்திரம். நான் என்ன சரியாக செய்தேன் என்று தெரியவில்லை, ஆனால் ஏதோ ஒன்றைச் செய்திருக்கிறேன் என்பதை மட்டும் என்னால் புரிந்து கொள்ள முடிகிறது. ஏனெனில் நான் ஒவ்வொரு நாளும் உன்னை நீ ஒரு அழகான, வேடிக்கையான, உறுதியான மனிதனாக வளர்வதைப் பார்க்கிறேன். விளையாட்டுத்தனமாக இரு. உறுதியாக இரு. நீ இப்போது இருப்பதைப் போலவே எப்போதும் இரு. பாண்டாக்கள் எப்படி மூங்கிலை விரும்புவதை விட உன்னை அதிகமாக நேசிக்கிறேன். பிறந்தநாள் வாழ்த்துகள் என் ஆயானு" என பதிவிட்டுள்ளார். இவரது இந்த பதிவு ரசிகர்கள் மத்தியில் வேகமாக பரவி வருகிறது. மேலும் பலரும் அயானுக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.

ரவி மோகன்: அதே நேரத்தில் ரவி மோகனின் இன்ஸ்டாகிராம் பக்கத்தையும் ரசிகர்கள் அடிக்கடி தேடி வருகிறார்கள். ரவி மோகன் ஏதாவது வாழ்த்து தெரிவித்துள்ளரா இல்லையா என்று எல்லாம் தேடி வருகிறார்கள். கடந்த ஜூன் மாதம் 29 ஆம் தேதி தனது மூத்த மகனுக்கு பிறந்த நாள் வந்தபோது கூட, ஆர்த்தியின் வாழ்த்தும் இன்ஸ்டாகிராம் பதிவு ரசிகர்கள் மத்தியில் வேகமாக பரவியது. ஆனால் தனது முதல் மகனின் பிறந்த நாளுக்கு ரவி மோகன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வாழ்த்து எதுவும் கூறவில்லை. ஆனால் அவர் தனிப்பட்ட முறையில் தனது மகனுக்கு பிறந்தநாள் பரிசு கொடுத்திருக்கலாம் எனவும் கூறினார்கள். அதேபோல், இரண்டாவது மகனின் பிறந்த நாளுக்கும் ரவி மோகன் அவ்வாறு செய்திருக்கலாம் எனக் கூறப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X