Aarti Ravi: மகனுக்கு பிறந்த நாள் வாழ்த்து சொன்ன ஆர்த்தி.. ரவிமோகன் என்ன செய்தார் தெரியுமா?

சென்னை: நடிகர் ரவி மோகன் - ஆர்த்தி விவாகரத்து வழக்கு இன்னும் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. திருமண உறவில் இருந்து வெளியேறுவதாக ரவி மோகன் கடந்த ஆண்டு அறிவித்திருந்தார். இது மட்டுமல்லாமல் இவர்களின் விவாகரத்து விவகாரம் தொடர்பாக பாடகி கெனிஷாவையும் வம்புக்கு இழுப்பது போல இழுத்து பலரும் விமர்சித்தார்கள். அதன் பின்னர் ரவி மோகன் மற்றும் கெனிஷா தரப்பில் வக்கீல் நோட்டீஸ் வெளியிட்ட பின்னர்தான் சர்ச்சைகள் அடங்கியுள்ளது.

விவாகரத்து பெறப்போவதாக தெரிவித்த பின்னர் ஆர்த்தி ரவி மற்றும் ரவி மோகனின் மூத்த மகனுக்கு, இன்று அதாவது ஜூன் 29 ஆம் தேதி பிறந்த நாள். ஆர்த்தி ரவி தனது மகனுக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார். ஆனால் ரவி மோகனின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மகனின் பிறந்த நாள் வாழ்த்து குறித்து எந்த பதிவும் இல்லாததால், ரசிகர்கள் ரவி மோகன் மகனின் பிறந்த நாளுக்கு என்ன செய்தார் என்ற கேள்வியை கேட்டு வருகிறார்கள்.

ஆர்த்தி ரவி தனது மகனுக்கு தெரிவித்துள்ள வாழ்த்து குறிப்பில், " எப்படியோ ஒரே இரவில் நீ என்னை விட வளர்ந்துவிட்டாய். நீ எனக்கு பல விஷயங்களை நியாபகப்படுத்துவதை நிறுத்தப்போவதில்லை. உனது உயரம் மட்டும் மாறவில்லை, உனது இதயம், உனது பலம், உனது அமைதியான குணம் என எல்லாமே வளர்ந்துவிட்டது. இந்த வருடம் வழக்கமான வருடமாக இல்லை என்பது எனக்குத் தெரியும். ஆனால் நாம் எதிர் கொண்ட ஒவ்வொரு தருணத்தையும் பல மூத்தவர்களைவிடவும் திறமையாக கையாண்டாய்.

மகன் பிறந்த நாள்: அதுவும் நீ பெரியவர்களை விடவும் கருணையோடு எதிர்கொண்டாய். உனது நிதானம், வலிமை, நல்லதை மட்டுமே தேர்வு செய்யும் இதயம் என இவற்றுடன் தான் நீ கடந்த ஆண்டைக் கடந்தாய். பிறந்த நாள் வாழ்த்துகள் ஆரவ். நான் நினைத்துப் பார்க்காத அளவுக்கு வளர்ந்துவிட்டாய். நீ எவ்வளவு உயரமாக வளர்ந்தாலும், நான் உயரம் குறைவாக இருக்கிறேன் என கிண்டல் செய்தாலும் சரி. நீ எப்போதும் எனது சின்னப்பையனாகவேதான் இருப்பாய். நான் உனக்கு எப்போதும் மிகப்பெரிய மகிழ்ச்சியை கொடுப்பவளாக இருப்பேன்" என பதிவிட்டுள்ளார்.

Aarti Ravi Wished Her Son Aarav Birthday Netizens Asking Ravi Mohan Wished or Not
Photo Credit:

குஷ்பு & த்ரிஷா: இவரது இந்த பதிவுக்கு நடிகை த்ரிஷா, நடிகை குஷ்பு சுந்தர் உள்ளிட்ட பலரும் கமெண்ட் செக்‌ஷனில் ஆரவிற்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்கள். குஷ்பு தனது வாழ்த்துப் பதிவில், " நம்ம சின்னப் பையன் இப்போ பெரிய பையன். ரொம்ப பெருமையா இருக்கு. உனை நினைத்தும் பெருமையாக இருக்கு ஆர்த்தி, அவன் வளர்ந்து நல்ல பையனா இருக்கான். கடவுள் அவனை எப்பவும் ஆசீர்வதிப்பாராக" என பதிவிட்டுள்ளார்.

ரவி மோகன் என்ன செய்தார்: ரவி மோகன் தனது இன்ஸ்டாகிராமில் வாழ்த்து எதுவும் பதிவிடாததால், அதனை ரசிகர்களும் இணையவாசிகளும் கேள்வி எழுப்பி வருகிறார்கள். மேலும் பலர் ஏற்கனவே ரவி மோகன் தனது குழந்தைகளை பார்க்க கேட்டபோது, குழந்தைகளை பார்க்க அனுமதிக்கவில்லை என்பதால், பிறந்த நாளுக்கு வாழ்த்து சொல்ல அவர் முயற்சித்திருந்தாலும் அவை அவருக்கு கைகொடுத்ததா இல்லையா என்பது அவருக்கு மட்டுமே தெரியும் எனவும் பேசி வருகிறார்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X