Aarti Ravi: மல்லிப்பூ வெச்சு வெச்சு வாடுது.. ஆர்த்தி ரவியின் இந்த போட்டோஸை மிஸ் பண்ணாதீங்க!
சென்னை: நடிகை குஷ்புவின் மூத்த மகள் அவந்திகாவின் திருமணக் கொண்டாட்டங்கள் கடந்த வாரம் கோலாகலமாக நடைபெற்றன. மெஹந்தி, சங்கீத், திருமணம் என ஒவ்வொரு நிகழ்விலும் குடும்பத்தினர் மற்றும் நெருங்கிய நண்பர்கள் மட்டுமே கலந்து கொண்ட நிலையில், அந்த விழாவில் தொடர்ந்து பங்கேற்றிருந்த ஆர்த்தி ரவி தற்போது வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வேகமாக வைரலாகி வருகின்றன.
"எங்க வீட்டு கல்யாணம்" என்ற கேப்ஷனுடன், "Mehendi Outfit" என குறிப்பிட்டு ஆர்த்தி ரவி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நான்கு புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். மஞ்சள் நிற லெஹங்காவும், இளஞ்சிவப்பு துப்பட்டாவும் அணிந்து டிரெடிஷ்னல் லுக்கில் இருக்கும் அவரது புகைப்படங்களுக்கு ரசிகர்கள் பலரும் லைக்குகளை வாரி வழங்கி வருகிறார்கள்.

"எங்க வீட்டு கல்யாணம்" என்ற ஒரு வரியிலேயே பல வருட நட்பின் ஆழத்தை சொல்லிவிட்டார் ஆர்த்தி ரவி. குஷ்புவின் மகள் அவந்திகாவின் திருமணக் கொண்டாட்டத்தில் எடுத்த மெஹந்தி புகைப்படங்களை அவர் இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ள நிலையில், அந்த புகைப்படங்களே தற்போது சமூக வலைதளங்களில் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளன.
மஞ்சள் நிற லெஹங்கா, இளஞ்சிவப்பு துப்பட்டா, காதோரம் ஜிமிக்கி, கைகளில் மருதாணி, கூந்தலில் மல்லிப்பூ... எந்தவித ஆடம்பரமும் இல்லாமல் பாரம்பரிய அழகை மட்டும் முன்னிறுத்திய தோற்றத்தில் ஆர்த்தி ரவி காட்சியளித்துள்ளார்.
குறிப்பாக பின்னால் கட்டப்பட்ட கூந்தலில் சூடியிருக்கும் மல்லிப்பூவும், அதனுடன் இணைந்த சிறிய பூ அலங்காரமும் ரசிகர்களின் கவனத்தை அதிகமாக கவர்ந்துள்ளது. "மெஹந்தி லுக் என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும்", "அதிக மேக்கப் இல்லாமலே இவ்வளவு அழகா?" என்று ரசிகர்கள் தொடர்ந்து பதிவிட்டு வருகின்றனர்.

குஷ்பு குடும்பத்துடன் ஆர்த்தி ரவியின் நட்பு நேற்று, இன்று உருவானதல்ல. பல ஆண்டுகளாக குடும்ப நிகழ்ச்சிகள், பண்டிகை கொண்டாட்டங்கள், பிறந்தநாள் விழாக்கள், சினிமா சார்ந்த சந்திப்புகள் என ஏராளமான தருணங்களில் இரு குடும்பத்தினரும் ஒன்றாகவே உறுதுணையாக இருந்துள்ளனர். அந்த நெருக்கத்தின் தொடர்ச்சியாகவே, அவந்திகாவின் திருமண விழாவின் மெஹந்தி, சங்கீத், திருமணம் என முக்கிய நிகழ்வுகளிலும் ஆர்த்தி ரவி கலந்து கொண்டு அசத்தினார்.
அதனால்தான், "எங்க வீட்டு கல்யாணம்" என்ற அவரது ஒரு வரி கேப்ஷன் ரசிகர்களிடமும் தனி வரவேற்பைப் பெற்றுள்ளது. வெறும் திருமண புகைப்படங்களாக அல்லாமல், பல வருட குடும்ப நட்பின் நினைவுகளை தாங்கிய தருணங்களாகவே இந்த படங்களை இணையவாசிகள் பகிர்ந்து வருகின்றனர். அவந்திகாவின் திருமண விழாவில் கலந்து கொண்ட பிரபலங்களின் புகைப்படங்கள் தொடர்ந்து வெளியாகி வரும் நிலையில், ஆர்த்தி ரவியின் இந்த மெஹந்தி ஆல்பமும் தற்போது சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டு வரும் பதிவுகளில் ஒன்றாக மாறியுள்ளது.


Click it and Unblock the Notifications