எங்கே இருக்க வேண்டுமென தெரியும்.. ஆர்த்தி ரவி சூப்பரா சொல்லிருக்காங்களே ப்பா.. ட்ரெண்டாகும் பதிவு
சென்னை: காதலித்து திருமணம் செய்துகொண்டு இரண்டு ஆண் குழந்தைகளை பெற்ற ஆர்த்தியுடன் பிரிவதாக ரவி மோகன் கடந்த வருடம் அறிவித்தார். அந்த அறிவிப்பு பலருக்கு அதிர்ச்சியை கிளப்பியது. இப்போது கெனிஷாவுடன் பழக்கத்தில் இருக்கும் ரவி விரைவில் அவரை திருமணம் செய்துகொள்ள வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில் ஆர்த்தி ரவி இன்ஸ்டாகிராமில் போட்டிருக்கும் போஸ்ட் ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்திருக்கிறது.
ஜெயம் திரைப்படத்தில் ஹீரோவாக அறிமுகமான ரவி பெரிதாக எந்த பிரச்சனையிலும் சிக்காதவர். தன் சமகால நடிகர்களிடமும் ஈகோ பார்க்காமல் பழகக்கூடியவர். அதனை நடிகர் விக்ரமே ஒரு விழா மேடையில் ஓபனாக சொல்லியிருந்தார் என்பது நினைவுகூரத்தக்கது. அப்படிப்பட்ட ரவி சமீபமாக சர்ச்சைகளில் சிக்கினார். காதலித்து திருமணம் செய்துகொண்ட ஆர்த்தியை பிரிந்த அவர்; கெனிஷாவுடன் ஏற்பட்ட பழக்கத்தை திருமணத்துக்கு கொண்டு செல்லும் முடிவில் இருப்பதாக தெரிகிறது.
ஆர்த்தி அறிக்கை: அவர்கள் இருவரும் தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் மகள் திருமணத்துக்கு வந்ததை பார்த்த ஆர்த்தி வெளியிட்டிருந்த அறிக்கையில், "எனது மௌனத்தை நான் கலைக்கிறேன். என்னுடைய குழந்தைகளுக்காக இந்த விஷயத்தில் கடந்த ஒருவருடமாக நான் மௌனத்தை விரதமாகவே இருந்துவருகிறேன். அதனால் நான் பலகீனமானவள் என்பது இல்லை.

அந்த நிலை வந்துவிடக்கூடாது என்று நினைத்தேன்: எனது பேச்சைவிடவும் குழந்தைகளின் அமைதியான வாழ்க்கை முக்கியம் என்று கருதிதான் அப்படி மௌனமாக இருந்தேன். என் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்கள், பழி சொற்கள், வசைகள் அனைத்தையுமே நான் தாங்கிக்கொண்டேன். என் பக்கம் உண்மையும், நியாயமும் இருந்தது. இருந்தாலும் தந்தை மற்றும் தாய் இருவரில் யாரை தேர்ந்தெடுப்பது என்ற குழப்பம் எனது குழந்தைகளுக்கு வந்துவிடக்கூடாது என்று நினைத்தேன்.
தூக்கி எறிந்துவிட்டார்: உலகம் இன்று பார்க்கும் நாடகங்களும், காட்சிகளும் வேறு. நடந்த உண்மையே வேறு. எங்கள் விவாகரத்து வழக்கு இன்னமும் நடந்துகொண்டிருக்கிறது. ஆனால் 18 வருடங்களாக நான் காதல் மற்றும் நம்பிக்கையோடு கைகோர்த்து நடந்த ஒரு மனிதனின்று எனது கைகளை மட்டுமில்லை தன்னுடைய பொறுப்புகளையும் துச்சமாக தூக்கி எறிந்துவிட்டு சென்றிருக்கிறார். கடந்த பல மாதங்களாக அந்தக் குழந்தைகளின் பொறுப்பை நான் எனது தோள்களில் சுமந்துகொண்டிருக்கிறேன். இப்போது அவர் புதிய உறவை உருவாக்கிக்கொண்டார்" என பல விஷயங்களை தெரிவித்திருந்தார்.
நீதிமன்றத்தில் கறார்: தொடர்ந்து மாறி மாறி அறிக்கைகளாக வந்துகொண்டிருந்தன. இப்படிப்பட்ட நிலைமையில் இரண்டு பேருக்கும் மத்தியஸ்த பேச்சுவார்த்தை முடிந்ததை அடுத்து விவாகரத்து வழக்கில் அவர்கள் ஆஜரானார்கள். அப்போது தனக்கு மாதம் 40 லட்சம் ரூபாயை ரவி மோகன் ஜீவனாம்சமாக கொடுக்க வேண்டும் என்று ஆர்த்தி கோரிக்கையும் வைத்திருக்கிறார். இந்நிலையில் அவரது இன்ஸ்டாகிராம் போஸ்ட்டுகள் ட்ரெண்டாகியிருக்கின்றன.
ஆர்த்தியின் இன்ஸ்டா: அவர் தனது புகைப்படங்களை இன்ஸ்டாவில் பகிர்ந்து, "என்னை சுற்றி அனைத்தும் வளர்ந்துகொண்டிருக்கின்றன. அதனால் நானும் வளர்கிறேன்" என ஒரு வாசகத்தையும், "எங்கே இருக்க வேண்டுமென சில இதயங்களுக்கு தெரியும், அமைதிக்கு சத்தம் தேவையில்லை" என்ற வாசகங்களையும் குறிப்பிட்டிருக்கிறார். இதனைப் பார்த்த ரசிகர்கள் ஆர்த்தி ஏன் இப்போது திடீரென இப்படி போஸ்ட்டுகளை போடுகிறார் என்று கேள்விகள் எழுப்பி ட்ரெண்டாக்கிவருகின்றனர்.


Click it and Unblock the Notifications











