ரவி மோகன் வெளியேறிவிட்டார்..ஆர்த்திக்கு இரண்டாவது திருமணமா?..விரைவில் அறிவிப்பாம்..பிரபலம் ஓபன் டாக்
சென்னை: சினிமா பின்னணியுள்ள குடும்பத்திலிருந்து வந்த ரவி ஜெயம் படத்தில் ஹீரோவாக அறிமுகமானார். முதலில் உதவி இயக்குநராக இருந்து பிறகுதான் அவர் ஹீரோவாக நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. முதல் படமே மெகா ப்ளாக் பஸ்டர் ஆனது. தொடர்ந்து தனது அண்ணன் ராஜாவின் இயக்கத்தில் ரீமேக் படங்களில் நடித்துவந்தார். பிறகு மற்ற இயக்குநர்களின் இயக்கத்தில் நடித்து நல்ல நடிகர் என்ற பெயரையும் பெற்றார் அவர். கடைசியாக அவரது நடிப்பில் காதலிக்க நேரமில்லை திரைப்படம் வெளியானது. இப்போது ஜீனி என்கிற படத்தில் நடித்துவருகிறார். இந்தச் சூழலில் அவர் தனது மனைவி ஆர்த்தியை விவாகரத்து செய்வதாக கடந்த வருடம் அறிவித்தார். சூழல் இப்படி இருக்க அவருக்கும் பாடகி கெனிஷாவுக்கும் இருக்கும் உறவு உறுதியாகிவிட்டதாக பலரும் ஆணித்தரமாக பேச ஆரம்பித்திருக்கிறார்கள்.
ஜெயம் படத்தில் ஹீரோவாக அறிமுகமானார் ரவி மோகன். முதலில் ஜெயம் ரவி என்றுதான் இத்தனை வருடங்களாக அவரை அழைத்துவந்தார்கள். ஆனால் தன்னை இனி ஜெயம் ரவி என அழைக்க வேண்டாம்; ரவி மோகன் என்று அழையுங்கள் என கேட்டுக்கொண்டதற்கிணங்க ரசிகர்களால் அவர் ரவி மோகன் என்று அழைக்கப்படுகிறார். ஆரம்பத்தில் வரிசையாக வெற்றி படங்களை கொடுத்து நம்பிக்கை நட்சத்திரமாக மாறிய அவர் ஒருகட்டத்தில் தோல்வி முகத்தை பார்த்தார். இருப்பினும் அவருக்கென்று தனி மார்க்கெட் இருக்கத்தான் செய்கிறது. கடைசியாக அவர் காதலிக்க நேரமில்லை திரைப்படத்தில் நடித்தார். இப்போது ஜீனி என்ற ஹை பட்ஜெட் படத்தில் நடித்துவருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

நோ கிசுகிசு, சர்ச்சை: சினிமாவில் பிரபலமாக இருந்தாலே அவர்களை சுற்றி கிசுகிசுவும், சர்ச்சையும் எழுவது வழக்கமான ஒன்றுதான். ஆனால் அதிலிந்து அப்பாற்பட்டவர் ரவி மோகன். தான் உண்டு தனது வேலையுண்டு குடும்பம் உண்டு என்று இருந்தவர். முக்கியமாக மிஸ்டர் க்ளீன் என்ற இமேஜையும் பெற்றார். அப்படிப்பட்ட நிலைமையில்தான் கடந்த வருடம் ஒரு அறிவிப்பை வெளியிட்டார் அவர். அதாவது தனது மனைவி ஆர்த்தியை பிரிவதாக அறிவித்தார். அவர் எதற்காக அந்த முடிவை எடுத்தார் என்று பலரும் அதிர்ச்சி கலந்த ஆச்சரியத்துடன் அதனை பார்த்தார்கள். ஆர்த்தியோ, இந்த விவாகரத்து முடிவு தனக்கு தெரியாது என்றும்; ரவியிடம் பேச முயன்றபோதெல்லாம் அவருடன் பேசவே முடியவில்லை என்றும் விளக்கமளித்தார்.
ஆர்த்திதான் காரணமா?: அதேசமயம் ஆர்த்தியும் அவரது தாயாரும் ரவியை ரொம்பவே கன்ட்ரோலில் வைத்திருந்ததாகவும் ஒரு பேச்சு ஓடியது. ரவியும் அந்த சமயத்தில் கொடுத்த பேட்டிகளில், 'வீட்டில் வேலை செய்பவர்களுக்கு தரப்படும் மரியாதைகூட தனக்கு தரப்படவில்லை. நான் வீட்டை வெளியேறும்போது ஒரே ஒரு கார் மட்டுமே என்னிடம் இருந்தது' என்று கூறினார். அதுமட்டுமின்றி தன்னுடைய பாஸ்போர்ட் உள்ளிட்டவைகளை ஆர்த்தியிடமிருந்து மீட்டு தருமாறு காவல் துறையில் புகாரும் அளித்தார். ரவியின் அந்த செயல்பாடுகள் உச்சக்கட்ட அதிர்ச்சியை கிளப்பின. மேலும் ரவி ரொம்பவே கொடுமையை அனுபவித்திருக்கிறாரோ என்றே பலரும் ஓபனாக பேச ஆரம்பித்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
கெனிஷாவுடன் தொடர்பு: இதற்கிடையே இந்த பிரிவுக்கு ஆர்த்தி காரணம் இல்லை. கெனிஷா என்கிற பின்னணி பாடகியுடன் ரவிக்கு தொடர்பு ஏற்பட்டுவிட்டது; அதனால்தான் அவர் இந்த முடிவுக்கு வந்தார் என்றும் ஒருதரப்பினர் சொன்னார்கள். ஆனால் அதனை ரவியோ திட்டவட்டமாக மறுத்தார். மேலும் தானும் கெனிஷாவும் நண்பர்கள் மட்டுமே; நாங்கள் இருவரும் இணைந்து ஆன்மீகம் தொடர்பான ஆசிரமம் ஒன்றை ஆரம்பிக்க திட்டமிட்டிருக்கிறோம். தயவு செய்து அதனை கெடுத்துவிடாதீர்கள் என்றெல்லாம் கூறினார். ரவி அவ்வாறு கூறியதைத் தொடர்ந்து அனைவருமே அமைதியானார்கள். அவசரப்பட்டு ரவியை கெனிஷாவுடன் தொடர்புப்படுத்தி பேசியிருக்கக்கூடாது என்பதுதான் அனைவரது எண்ண ஓட்டமாகவும் அப்போது இருந்தது.

கெனிஷாவுடன் வந்த ரவி: நிலைமை இப்படி இருக்க சமீபத்தில் தயாரிப்பாளர் ஐசரி கணேஷின் மகள் திருமணம் நடைபெற்றது. அதில் திரையுலக நட்சத்திரங்கள் கலந்துகொண்டார்கள். அதன்படி ரவியும் கலந்துகொண்டார். ஆனால் செம ட்விஸ்ட்டாக கெனிஷாவுடன் அந்தத் திருமண விழாவுக்கு வந்திருந்தார் அவர். இரண்டு பேரும் ஒரே நிற உடை அணிந்தும், கைகளை கோர்த்தபடி வந்தது, ஜோடியாக ஃபோட்டோவுக்கு போஸ் கொடுத்தது என அதிர்ச்சி வைத்தியம் கொடுத்தார்கள். இதனால் மீண்டும் ரவி - கெனிஷா - ஆர்த்தி ஆகிய மூன்று விவாத பொருளாகியிருக்கிறார்கள். ஆர்த்தியை பொறுத்தவரை ரவி - கெனிஷா ஜோடியாக வந்ததைத் தொடர்ந்து நீண்ட அறிக்கை ஒன்றையும் வெளியிட்டிருந்தார். அந்த அறிக்கைக்கு பிறகு குஷ்பூ, ராதிகா உள்ளிட்டோர் ஆர்த்திக்கு தங்களது ஆதரவை கொடுக்க ஆரம்பித்திருக்கிறார்கள்.
பயில்வான் ரங்கநாதன் பேட்டி: இந்நிலையில் மெட்ரோ மெயில் என்ற யூடியூப் சேனலுக்கு இதுதொடர்பாக விஷயங்களை பேசியிருக்கிறார் பிரபல பத்திரிகையாளரான பயில்வான் ரங்கநாதன். அந்தப் பேட்டியில் அவர் பேசுகையில், "கெனிஷாவுடன் ரவி மோகன் லிவிங் டூ கெதரில்தான் இருக்கிறார். தன்னுடைய மன உளைச்சலை போக்கியவர் கெனிஷாதான் என்று ரவி ஏற்கனவே சொல்லியிருக்கிறார். இரண்டு பேரும் தியான மண்டபம் கட்டப்போவதாக கூறியிருக்கிறார்கள். எப்படிப்பட்ட தியானம் செய்யப்போகிறார்களோ என்று தெரியவில்லை. அதேசமயம் ரவி மோகன் இந்த விஷயத்தி கொஞ்சம் அவசரப்பட்டுவிட்டாரோ என்றுதான் தோன்றுகிறது.
அறிகுறியை கொடுத்துவிட்டார்: நான் கெனிஷாவைத்தான் திருமணம் செய்துகொள்ளப்போகிறேன் என்று ரவி அறிகுறி கொடுத்துவிட்டார்.மறுபக்கம் ஆர்த்தியிடமிருந்து விவாகரத்து வேண்டுமென்ற வழக்கும் நீதிமன்றத்தில் போய்க்கொண்டிருக்கிறது. ஆர்த்தி வெளியிட்ட அறிக்கை ரொம்ப இலக்கிய நயமாகத்தான் இருந்தது. கெனிஷாவுடன் ரவி வந்தது சட்டப்படியெல்லாம் குற்றம் இல்லை. ஆர்த்தியின் அம்மா சாதாரண ஆள் இல்லை. கிட்டத்தட்ட 150 கோடி ரூபாய் சொத்து இருக்கிறது. அந்த அத்தனை சொத்துக்கும் ஆர்த்திதான் ஒரே வாரிசு.ஆர்த்தியை பொறுத்தவரை ரவியிடம் அவர் கேட்டிருப்பது ஒன்றுதான். இரண்டு மகன்களுக்கும் தந்தை என்கிற ரீதியில் என்ன செய்யப்போகிறீர்கள் என்பதைத்தான் கேட்டிருக்கிறார்.
ஆர்த்திக்கு இரண்டாவது திருமணம்: அதேபோல் சுஜாதாவை பொறுத்தவரை தனது மகளுக்கு இரண்டாவது திருமணம் செய்து வைக்கவும் தயாராக இருக்கிறார். விரைவில் அதுகுறித்த அறிவிப்பு வரலாம். ஜீவனாம்சத்தை பொறுத்தவரை நீதிமன்றம்தான் தீர்மானிக்கும். அப்பாவிடம் இருக்கிறீர்களா இல்லை அம்மாவிடம் இருக்கிறீர்களா என்று இரண்டு மகன்களிடமும் நீதிபதி கேட்பார்.அவர்களோ அம்மாவுடன் இருக்கிறேன் என்று சொல்ல வாய்ப்புகள் அதிகம் உள்ளன. எனவே ஜீவனாம்சமாக சொத்தோ, பணமோ கொடுக்க ரவி தயாராகத்தான் இருப்பார். ஏனெனில் அவருக்கும் தன்னுடைய மகன்கள் என்ற உணர்வு இருக்கத்தான் செய்யும்" என்றார். பயில்வானின் இந்தப் பேட்டி சமூக வலைதளங்களில் நெட்டிசன்களின் கவனத்தை ஈர்த்திருக்கிறது.


Click it and Unblock the Notifications











