இணையதள விமர்சகரை மிரட்டினாரா ஆஸ்கார் ரவிச்சந்திரன்?

By Shankar

அர்னால்டை வரவழைத்து அவமரியாதை செய்துவிட்டார்கள் என ஐ படக்குழு மற்றும் தயாரிப்பாளர் ஆஸ்கர் ரவிச்சந்திரனை வெளுத்துக் கொண்டிருக்கிறார்கள் அத்தனை பேரும்.

இன்னொரு பக்கம் இந்தப் படத்தின் டீஸரை யாரோ திருடி யு ட்யூபில் வெளியிட்டுவிட்டதாகக் கூறி, அலப்பறை பண்ணிக்கொண்டிருக்கிறார் ஆஸ்கார் ரவிச்சந்திரன்.

இது தொடர்பாக தன்னை அலுவலகத்துக்கு அனுப்பி மிரட்டியதாக ஆஸ்கார் ரவிச்சந்திரன் மீது குற்றம்சாட்டியுள்ளார் இணையதள விமர்சகர் பிரசாந்த் என்பவர்.

டீசர் பார்த்தோம்

டீசர் பார்த்தோம்

இதுகுறித்து பிரசாந்த் கூறுகையில், "விக்ரமோட ரசிகர்கள் சிலருக்கு 'ஐ' படத்தின் டீஸரை திரையிட்டுக் காட்டினார் தயாரிப்பாளர் ரவிச்சந்திரன். அந்த ரசிகர்களுடன் நானும் சில மீடியாக்காரர்களும் பார்த்தோம். இந்த டீசர் குறித்து ரவிச்சந்திரனிடம் பேசிக் கொண்டிருந்தோம்.

அழைப்பு

அழைப்பு

நான்கு நாள் கழித்து ஆஸ்கார் ஃபிலிம்ஸ் அலுவலகத்துக்கு வரச்சொன்னார்கள். அங்கே ரவிச்சந்திரனோட தம்பி ரமேஷ் உள்பட பலர் இருந்தாங்க. 'கடைசியா நீங்க நாலு பேர்தான் டீஸரைப் பார்த்தீங்க. உங்கள்ல யாரோ ஒருத்தர்தான் வெளியிட்டிருக்காங்க. யாருனு சொல் லுங்க?' எங்க மேல பழியைப் போட்டார்கள்.

மிரட்டல்

மிரட்டல்

ஒரு கட்டத்தில் என்னை கடுமையா மிரட்டினார். நான் சொன்ன எந்த விளக்கத்தையும் அவர் கேட்கவே இல்லை. நியாயமாக இவர் போயிருக்க வேண்டிய இடம் போலீஸ் ஸ்டேஷன்தான். அங்கே போயிருந்தால் உண்மை தெரிந்திருக்கும்.

ஆறு மாசமா இதே வேல..

ஆறு மாசமா இதே வேல..

இன்று நேற்றல்ல.. கடந்த ஆறு மாதங்களாகவே அவர் அலுவலகத்துக்கு வருகிற எல்லோரிடமும் இந்த டீசரைப் போட்டுக் காட்டிக்கிடிருக்கார். திடீர்னு என் மேல குறை சொல்றார்.

பப்ளிசிட்டிக்காக..

இதெல்லாம் தெரியாம, நானும் ரவிச்சந்திரனும் சேர்ந்து பேசி வச்சிக்கிட்டு பப்ளிசிட்டிக்காக ஸ்டன்ட் அடிக்கிறதா சமூக வலைத் தளங்கள்ல செய்தி வருது. அதுக்காகத்தான் நடந்தது என்னன்னு ஒரு வீடியோவை வெளியிட்டிருக்கிறேன்," என்றார்.

ஆபீஸ் பூட்டை உடைத்து

ஆபீஸ் பூட்டை உடைத்து

ஆனால் ஆஸ்கர் ரவிச்சந்திரனோ, இந்த பிரசாந்த் யார் என்றே தெரியாது என்கிறார், எல்லா பிரபலங்களும் வழக்கமாகச் சொல்வது போல!

தனது அலுவலக பூட்டை உடைத்து யாரோ டீசரை திருடி வெளியிட்டுள்ளதாக புதிய குற்றச்சாட்டைக் கூறியுள்ளார். விசாரணை நடந்து கொண்டிருக்கிறதாம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X