இளம்பெண்ணை கத்தி முனையில் பலாத்காரம் செய்த இந்தி பாடகர் அங்கித் திவாரி கைது
மும்பை: பிரபல இந்தி பின்னணி பாடகர் அங்கித் திவாரி பாலியல் பலாத்கார வழக்கில் இன்று காலை கைது செய்யப்பட்டுள்ளார்.
2013ம் ஆண்டில் வெளியான ஆஷிகி 2 ஹிட் இந்தி படத்தில் சுன் ரஹா ஹை என்ற பாடலை பாடி பிரபலம் ஆனவர் அங்கித் திவாரி. அவருக்கு நண்பர்கள் மூலம் 28 வயது பெண் ஒருவர் அறிமுகமாகியுள்ளார். இந்நிலையில் அங்கித் மற்றும் அவரது சகோதரர் அன்கூர் திவாரி ஆகியோர் கடந்த 6ம் தேதி அந்த பெண்ணின் வீட்டுக்கு சென்றுள்ளனர்.

அங்கு வைத்து அங்கித் அந்த பெண்ணை கத்தி முனையில் பாலியல் பலாத்காரம் செய்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது குறித்து அந்த பெண் அளித்த புகாரின்பேரில் மும்பை வெர்சோவா போலீசார் வழக்குப் பதிவு செய்து அங்கித் மற்றும் அவரது சகோதரர் அன்கூர் ஆகியோரை இன்று காலை கைது செய்தனர். அந்த பெண்ணை மிரட்டியதற்காக அன்கூர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த மாதம் 25ம் தேதி நடிகர் சல்மானின் கானின் நண்பரான நடிகர் இந்தர் குமார் 22 வயது பெண்ணை பலாத்காரம் செய்ததாகக் கூறி கைது செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











