»   »  ஆசி... இந்தப் படத்தைப் பத்தி என்ன சொல்றதுன்னே தெரியலையே!

ஆசி... இந்தப் படத்தைப் பத்தி என்ன சொல்றதுன்னே தெரியலையே!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: மாசின்னு ஒரு படம் வந்தது. காசின்னு கூட ஒரு படம் வந்தது. இப்போது ஆசின்னு ஒரு படம் வரப் போகிறது.

படத்திற்கு பட்ஜெட் போட ரொம்பக் கஷ்டப்பட்டிருக்க மாட்டர்கள் என்றே தெரிகிறது. அந்த அளவுக்கு ஸ்டார்கள் யாரும் இப்படத்தில் இருப்பதாக தெரியவில்லை.

ராஜ்கபூருக்கு நிறைய சீன்கள் வைத்திருப்பதிலிருந்தே இந்தப் படம் எவ்வளவு பெரிய படம் என்பதைப் புரிந்து கொள்ளலாம்.

ராஜ்கபூரும்.. குண்டு ஆர்த்தியும்

ராஜ்கபூரும்.. குண்டு ஆர்த்தியும்

படத்தில் தெரிந்த முகங்கள் என்று பார்த்தால் அது ராஜ் கபூர், குண்டு ஆர்த்தி, தளபதி தினேஷ் ஆகியோர்தான். ஹீரோயின் பெயர் பிரியா அஸ்மிதா.

கதை என்னன்னு தெரியலையே

கதை என்னன்னு தெரியலையே

படத்தின் கதை என்னவாக இருக்கும் என்பதை படம் வெளியாகும் வரை தாராளமாக அமர்ந்து நிறுத்தி நிதானமாக யோசிக்கலாம். அவசரமே இல்லை.

ஆனா அது இருக்கு பாஸ்!

ஆனா அது இருக்கு பாஸ்!

படத்தில் கதை இருக்கிறதோ இல்லையோ கலகலப்பான காமெடியும், கவர்ச்சியும் தூக்கலாகவே இருக்கும் என்று தாராளமாக நம்பலாம்.

ஹீரோயினே

ஹீரோயினே

ஹீரோயினே கவர்ச்சியில் துணிச்சலாக களம் இறங்கியுள்ளாராம். கூடுதலாக ஒரு கவர்ச்சி நடிகை வேறு. படத்தில் குத்துப் பாட்டுக்கும் நிறைய ஸ்லாட் கொடுத்திருக்கிறார்கள்.

சிலுமிஷ ராஜ்கபூர்

சிலுமிஷ ராஜ்கபூர்

படத்தில் ஒரு சிலுமிஷக் காட்சி. அதாவது ராஜ்கபூர் பெண் வேடத்தில் சுடிதார் போட்டு சுரீர் ஷாக் கொடுக்கிறார். தலையில் ஒரு செம்பருத்திப் பூ வேறு...!

தாடி எடுத்தா நல்லாருக்குமே

தாடி எடுத்தா நல்லாருக்குமே

அட ஹீரோவைப் பத்தி எதுவுமே சொல்லலையே.. ஹீரோவை தாடியை எடுத்து விட்டுப் பார்த்தால் கொஞ்சம் முகம் தெளிவாகத் தெரியலாம். ஆனால் கதைப்படி அவர் தாடி வைத்தாக வேண்டும் என்று டைரக்டர் சொல்லி விட்டாரோ என்னவோ.. !

ரசிகர்களின் ஆசி கிடைக்கட்டும்.. வேற என்ன சொல்றது!

Read more about: tamil cinema
English summary
Aasi is the movie which has more new comers than seniors. It has Raj Kapoor, Priya Asmitha and others.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil