துப்பறிவாளன் இரண்டாம் பாகம் பல புதிய யுக்திகளுடன் லண்டனில் ஷூட்டிங் துடங்கும்
சென்னை : துப்பரிவாளன் படம் விஷாலின் சினிமா வரலாற்றில் மிக முக்கியமான படமாக கருதப்படுகிறது. துப்பறிவாளன் படத்தை இயக்குனர் மிஷ்கின் இயக்கி இருப்பார் . இந்த படத்தின் கதை பிரபல ஆங்கில நாவலான 'ஷெர்லாக் ஹோம்ஸ்'ல் இருந்து தழுவபட்டு எடுக்கபட்டிருக்கும் .
இந்த படத்தில் விஷால், பிரசன்னா, வினய்,ஆன்ட்ரியா, பாக்கியராஜ்,ஜான் விஜய், அனு இமானுவேல், தலைவாசல் விஜய் ஆகியோர் நடித்து இருந்தனர். இந்த படத்திற்கு இசை அமைத்திருப்பார் ஆரோல் கொரள்லி .படத்தை தானே நடித்தும் தயாரித்து இருந்தார் நடிகர் விஷால் .

இந்த படத்திற்கு பிறகு நடிகர் விஷால் .வெங்கட மோகன் இயகத்தில் 'அயோக்யா' படத்தில் நடித்திருந்தார்,அந்த படம் விஷாலுக்கு வெற்றி படமாக அமைந்தது ,அயோக்யா தெழுங்கு படமான டெம்பர் படத்தின் அதிகார பூர்வ ரீமேக்காகும்.
தற்போது துப்பறிவாளன் ரசிகர்களை உற்சாகம் ஊட்டும் வகையில் மீண்டும் விஷாலும் மிஸ்கினும் இனைந்து துப்பறிவாளன் 2 படத்தை எடுக்க உள்ளனர் . இந்த படத்திற்காக இயக்குனர் மிஸ்கின் 'ஷெர்லாக் ஹோம்ஸ்'ன் பிறப்பிடமான லண்டனுக்கு சென்று படத்திற்கான சில விவரங்களை சேகரித்தாகவும் மேலும் இரண்டாம் பாகத்தை லண்டனில் எடுக்க போவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்காக துப்பறிவாளன் 2 படக்குழுவினர் 40 நாட்களுக்கு லண்டன் செல்ல உள்ளார்கள் ,அங்கு 40 நாட்கள் படப்பிடிப்பு நடக்க போகிறது .இரண்டாம் பாகத்திலும் கனியன் பூங்குன்றனாக விஷாலும் அவருடன் நடிகர் பிரசன்னா மற்றும் நாசரும் இனைந்து நடிக்க உள்ளனர் . இதற்கு பின் படத்தின் கதாநாயகியாக அறிமுக நாயகி ஆஸ்யா தேர்வாகி உள்ளார் .இந்த படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைக்க உள்ளார்.
தற்போது மிஸ்கின் சைக்கோ பட வேலைகளை முடித்துவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சைக்கோ படத்தில் உதயநிதி ,அதிதி ராவ் ஹைதரி,நித்யா மேனன்,ரேனுகா,சிங்கம் புலி மற்றும் இயக்குனர் ராம் ஆகியோர் நடித்துள்ளனர்.இந்த படத்திற்கும் இசை ஞானியே இசையமைத்துள்ளார்.
தற்போது மிஸ்கின் சைக்கோ பட வேலைகளை முடித்துவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சைக்கோ படத்தில் உதயநிதி ,அதிதி ராவ் ஹைதரி,நித்யா மேனன்,ரேனுகா,சிங்கம் புலி மற்றும் இயக்குனர் ராம் ஆகியோர் நடித்துள்ளனர்.இந்த படத்திற்கும் இசை ஞானியே இசையமைத்துள்ளார்.
இசைஞானி மற்றும் மிஷ்கின் எப்போதுமே புதுமையான முயற்ச்சிகளை செய்வார்கள். விஷாலும் ஒரு மிக பெரிய வெற்றியை எதிர் பார்த்துக்கொண்டு இருக்கிறார். பல புதிய யுக்திகளை கையாண்டு துப்பறிவாளன் 2 வெற்றி பெற நிறைய முயற்ச்சிகள் செய்யும் இந்த ஒட்டு மொத கூட்டணி வெற்றி பெற வாழ்த்துவோம் .


Click it and Unblock the Notifications











