அந்த போட்டோவுக்கு மட்டும் கமெண்ட்டுகளை பிளாக் செய்த ஆத்மிகா.. என்ன விஷயமுன்னு தெரியுமா?
Recommended Video
சென்னை: 'மீசையை முறுக்கு' நாயகி ஆத்மிகா தனது இன்ஸ்டாகிராம் பக்க கமெண்ட் செக்ஷனை பிளாக் செய்துள்ளார்.
ஹிப் ஹாப் தமிழாவின் மீசையை முறுக்கு படத்தில் நடித்து தமிழ் இளைஞர்கள் மனங்களை கொள்ளை கொண்டுள்ள நடிகை ஆத்மிகா, செக்ஸியான புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தொடர்ந்து பதிவிட்டு வருகிறார்.
அந்த புகைப்படங்களுக்கு ரசிகர்கள் படு மோசமாகவும் ஆபாசமாகவும் கமெண்ட் செய்து வர கமெண்ட் செக்ஷனை பிளாக் செய்துள்ளார்.
கிளாமர் பக்கம்
மீசையை முறுக்கு, நரகாசூரன் படங்களில் நடித்துள்ள ஆத்மிகா, புதுப்பட வாய்ப்புகளை தேடி வருகிறார். ஹோம்லியாக நடித்து வந்த ஆத்மிகா, தன்னால் கிளாமராகவும் நடிக்க முடியும் என தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கவர்ச்சியான புகைப்படங்களை களம் இறக்கி வருகிறார்.
செம்ம வைரல்
அண்மையில் ப்ளூ கலர் க்ளிட்டர் டிரெஸ்சில், முன்னழகு தெரியும்படி செம்ம செக்ஸியாக ஆத்மிகா வெளியிட்ட புகைப்படங்கள் செம்ம வைரலானது.
யோகா போஸ்
அந்த புகைப்படத்தை தொடர்ந்து, தற்போது ஆத்மிகா வெளியிட்டுள்ள யோகா போஸ் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. ரெட் கலர் டாப் மற்றும் ப்ளூ கலர் லெக்கின்ஸ் அணிந்து தலையில் ரெட் பேண்ட் போட்டு செம்ம செக்ஸியாக ஆத்மிகா யோகா செய்யும் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
கமெண்டுகளுக்கு தடை
மேலும், யோகா போஸ் புகைப்படத்தில் ரசிகர்கள் கமெண்ட் செய்ய முடியாதபடி பிளாக் செய்துள்ளார் ஆத்மிகா. 1.56 லட்சம் லைக்குகளை பெற்றுள்ள அந்த போட்டோவுக்கு கீழே ஒரு கமெண்ட் கூட இல்லை. மேலும், ஏற்கனவே நீல நிற க்ளிட்டர் உடையில் முன்னழகு எடுப்பாக தெரியும்படி ஆத்மிகா வெளியிட்டுள்ள புகைப்படங்களுக்கு கீழும் கமெண்ட்டுகளை காணவில்லை.
ஆபாச கமெண்ட்டுகள்
படு கவர்ச்சியான புகைப்படங்களை நடிகைகள் வெளியிடும் போது நெட்டிசன்கள் படு மோசமாகவும், ஆபாசமாகவும் தொடர்ந்து கமெண்ட் செய்து வருவதை வழக்கமாக கொண்டிருக்கின்றனர். அதனால் தான் இந்த ஏற்பாடை ஆத்மிகா செய்துள்ளதாக கூறப்படுகிறது.
இதுக்கு மட்டும் அனுமதி
அதே சமயம் ஆத்மிகா வெளியிடும் க்யூட் புகைப்படங்களுக்கு கீழே ரசிகர்கள் கமெண்ட் செய்ய எந்தவொரு தடையும் இல்லை. தொடர்ந்து ஆத்மிகா க்யூட் மற்றும் ஹாட் புகைப்படங்களை வெளியிட்டு தனது ரசிகர்களை குஷி படுத்தி வருகிறார்.


Click it and Unblock the Notifications