காங்கிரஸ் கட்சிக்காரர் சம்யுக்தாவை தாக்கிய சம்பவம்.. டிரெண்டாகும் #ThisIsWrong.. ஆத்மிகா ஆதரவு!
பெங்களூரு: ஜெயம் ரவியின் கோமாளி, பப்பி உள்ளிட்ட படங்களில் நாயகியாக நடித்த சம்யுக்தா ஹெக்டேவை, காங்கிரஸ் கட்சியை சேர்ந்த கவிதா ரெட்டி தாக்கிய சம்பவம் பரபரப்பை கிளப்பி இருக்கிறது.
Recommended Video
கர்நாடகாவில் ஒரு பக்கம் போதைப் பொருள் விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில், பார்க் ஒன்றில் உடற்பயிற்சி செய்த போது நடத்தப்பட்ட இந்த தாக்குதல் சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தி இருக்கிறது.
ஸ்போர்ட்ஸ் பிரா அணிந்தது ஒரு குற்றமா என பலரும் சம்யுக்தாவுக்கு சப்போர்ட் செய்து வருகின்றனர்

ஸ்போர்ட்ஸ் பிரா அணிந்து
இளம் நடிகை சம்யுக்தா ஹெக்டே தனது 2 தோழிகளுடன் அகாரா ஏரிக்கு அருகே இருக்கும் பார்க் ஒன்றில் உடற்பயிற்சி செய்துள்ளனர். ஸ்போர்ட்ஸ் பிரா அணிந்து கொண்டு நடிகை சம்யுக்தா ஹெக்டே உடற்பயிற்சி செய்துள்ளார். உள்ளாடையுடன் வொர்க்கவுட் செய்கிறார் என பொதுமக்கள் பார்த்து அவரை தாக்கியதாக முதலில் தகவல்கள் வெளியாகின.

காங்கிரஸ் கட்சிக்காரர்
ஆனால், ஸ்போர்ட்ஸ் பிரா அணிந்து அவர்கள் உடற்பயிற்சி செய்ததை பார்த்து, படம் எடுத்த காங்கிரஸ் கட்சியை சேர்ந்த கவிதா ரெட்டி என்பவர் நடிகை சம்யுக்தா ஹெக்டேவையும் அவரது நண்பர்களையும் சரமாரியாக தாக்கும் வீடியோவை இன்ஸ்டா லைவ்வில் போட்டு அதிர்ச்சியை கிளப்பி இருந்தார் சம்யுக்தா ஹெக்டே.

போலீசார் விசாரணை
பிரச்சனை பெருசானதும் உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் காங்கிரஸ் கட்சிக்காரர் கவிதா ரெட்டி மற்றும் நடிகை சம்யுக்தா ஹெக்டே மற்றும் அவரது நண்பர்களையும் விசாரித்தனர். அப்போதும், கவிதா ரெட்டியுடன் இருக்கும் நபர்கள், கொதித்தெழுந்து அவர்களை மிரட்டும் வீடியோக்களும் வெளியாகி வைரலாகின.

ஹாஷ்டேக் டிரெண்டிங்
சம்யுக்தா ஹெக்டேவின் இந்த பிரச்சனை பூதாகரமான நிலையில், #ThisIsWrong இந்தியளவில் டிரெண்டாகி வருகிறது. பெண்கள் ஸ்போர்ட்ஸ் பிரா அணிவதை எதிர்த்து அவர்களை தாக்குவதா? என்கிற கேள்வியை பல பிரபலங்களும் எழுப்பி, சம்பந்தப்பட்டவர்கள் யாராக இருந்தாலும், சரியான தண்டனையை கொடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்து வருகிறது.

ஆத்மிகா ஆதரவு
நடிகை சம்யுக்தா ஹெக்டேவுக்கு நடந்த சம்பவத்தை பார்த்து பல பிரபலங்களும் நடிகைகளும் ஷாக் ஆகி உள்ளனர். மீசையை முறுக்கு ஹீரோயின் ஆத்மிகா தனது ட்விட்டர் பக்கத்தில், ஷார்ட் அணிந்து கொண்டு வீதியில் அலையும் கவிதா ரெட்டி, ஸ்போர்ட்ஸ் பிரா அணிந்ததற்காக நடிகை சம்யுக்தாவை தாக்குவது நகை முரணாக உள்ளது. பெண்கள் தங்களுக்கு பிடித்த எந்தவொரு ஆடையையும் அணிய அவர்களுக்கு முழு சுதந்திரம் உள்ளது என ட்வீட் போட்டுள்ளார்.


Click it and Unblock the Notifications











