»   »  என்னாது, தல படத்தில் ஆத்மிகாவா?: உண்மை என்ன?

என்னாது, தல படத்தில் ஆத்மிகாவா?: உண்மை என்ன?

Posted By:
Subscribe to Oneindia Tamil
அஜித்தின் விசுவாசம் படத்தில் மீசைய முறுக்கு ஆத்மிகா..!!

சென்னை: விசுவாசம் படத்தில் ஆத்மிகா நடிப்பதாக வெளியான செய்திகள் குறித்து உண்மை தெரிய வந்துள்ளது.

சிவா இயக்கத்தில் அஜீத் நடிக்கும் படம் விசுவசாம். வரும் 22ம் தேதி படப்பிடிப்பு துவங்கும் என்று கூறப்படுகிறது. விசுவாசம் படத்தை தீபாவளிக்கு ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளார் சிவா.

இந்நிலையில் படம் குறித்து ஒரு தகவல் தீயாக பரவியது.

மீசைய முறுக்கு

மீசைய முறுக்கு

மீசைய முறுக்கு நாயகி ஆத்மிகா விசுவாசம் படத்தில் நடிக்கப் போவதாக தகவல் வெளியானது. இதை கேட்ட தல ரசிகர்களுக்கு ஒரு நிமிஷம் தலையே சுத்திருச்சு.

ட்விட்டர்

ட்விட்டர்

தன்னை பற்றிய செய்தி ஒன்று தீயாக பரவியதை அறிந்த ஆத்மிகா ட்வீட்டர் மூலம் விளக்கம் அளித்துள்ளார். என்னது? எப்படி? எப்போ? என்று ட்வீட்டியுள்ளார்.

வேண்டாம் தல

வேண்டாம் தல

விசுவாசம் படத்தில் கீர்த்தி சுரேஷ் நடிக்கக்கூடும் என்று பேச்சு கிளம்பியது. இதை கேட்ட அஜீத் ரசிகர்களோ, வேண்டாம் தல தயவு செய்து கீர்த்தி வேண்டாம் தல என்று கெஞ்சுகிறார்கள்.

ஹீரோயின்

ஹீரோயின்

சிவா வழக்கமாக படத்தின் தலைப்பை தான் சொல்லாமல் இழுத்தடிப்பார். இந்த முறை ஹீரோயினை தெரிவிக்காமல் படுத்துகிறாரே என்று தல ரசிகர்கள் லைட்டா கடுப்பில் உள்ளனர்.

English summary
Aathmika has made it clear that she is not part of Ajith starrer Viswasam to be directed by Siva. This is Siva's fourth outing with Ajith. Ajith is reportedly going to work with Vishnuvardhan after Viswasam.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil