ரொம்ப கிளாமர் வேண்டாம்மா... மீசையமுறுக்கு நடிகைக்கு ரசிகர்கள் அட்வைஸ்!

சென்னை : கிளாமராக புகைப்படங்களை வெளியிட்ட மீசைய முறுக்கு நடிகைக்கு ரசிகர்கள் அட்வைஸ் செய்துள்ளனர்.

விஜய் ஆண்டனியின் கோடியில் ஒருவன் படத்தை தொடர்ந்து உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் கண்ணை நம்பாதே என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார் ஆத்மிகா.

சமீபகாலமாகவே எக்கச்சக்கமான கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வரும் ஆத்மிகா இப்பொழுது ஜன்னலில் முட்டுக் கொடுத்து தொப்புள் தெரிய வெளியிட்டுள்ள புகைப்படத்தை வாய்பிளந்து பார்த்து வருகின்றனர் ரசிகர்கள்.

கதாநாயகியாக

கதாநாயகியாக

சினிமாவில் இயக்குனர்கள், ஒளிப்பதிவாளர்கள், இசையமைப்பாளர்கள் என பல துறைகளிலும் வெற்றிகரமாக வலம் வந்து கொண்டிருப்பவர்கள் இப்பொழுது படங்களில் கதாநாயகனாக நடிக்க ஆரம்பித்து இருக்க அவ்வாறு தமிழ் சினிமாவிற்கு இசையமைப்பாளராக அறிமுகமான ஹிப்ஹாப் ஆதி மீசைய முறுக்கு படத்தில் கதாநாயகனாக நடித்திருந்தார். நடிகை ஆத்மிகாவும் இதில் கதாநாயகியாக அறிமுக படுத்தப்பட்டார்.

கல்லூரி பெண்ணாக

கல்லூரி பெண்ணாக

முதல் படத்திலேயே நேர்த்தியான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களை வெகுவாக கவர்ந்த ஆத்மிகா இதில் கவர்ச்சி காட்டாமல் அடக்க ஒடுக்கமான கல்லூரி பெண்ணாக வந்து சென்ற இவருக்கு மிகப்பெரிய ரசிகர்கள் முதல் படத்திலேயே உருவாகினர்.

வெளியாகாமல் உள்ளது

வெளியாகாமல் உள்ளது

துருவங்கள் பதினாறு திரைப்படத்தை தொடர்ந்து இயக்குனர் கார்த்திக் நரேன் இயக்கிய நரகாசுரன் திரைப்படத்திலும் ஒப்பந்தமாகி நடித்துள்ள ஆத்மிகா உடன் அரவிந்த்சாமி, சந்தீப்கிஷான், ஸ்ரேயா சரண் ஆகியோர் நடித்துள்ளனர். இந்த படத்தை இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன் தயாரித்து இருக்க பணப் பிரச்சனை காரணமாக இன்று வரை வெளியாகாமல் உள்ளது.

கவர்ச்சியில் தாறுமாறாக

கவர்ச்சியில் தாறுமாறாக

இந்த நிலையில் மெட்ரோ இயக்குனர் ஆனந்தகிருஷ்ணன் இயக்கியிருக்கும் கோடியில் ஒருவன் திரைப்படத்தில் விஜய் ஆண்டனியுடன் முதன் முறையாக இணைந்து ஜோடி போட்டுள்ள ஆத்மிகாவுக்கு இந்த படம் மிக விரைவிலேயே வெளியாக உள்ளது. இருப்பினும் கைவசம் எந்த ஒரு திரைப்படமும் நடிகை இல்லாததால் இப்பொழுது கவர்ச்சியில் தாறுமாறாக இறங்கி அனைவரது கவனத்தையும் ஈர்த்து வருகிறார்.

கொஞ்சம் குறைச்சிகோங்க

கொஞ்சம் குறைச்சிகோங்க

அரைகுறை டிரஸ் போடுவது, டைட்டான டிரஸ்ஸில் வந்து ஸ்டைலாக போஸ் கொடுப்பது என தொடர்ந்து சோசியல் மீடியாவை கதிகலங்க வைத்த வரும் ஆத்மிகா இப்பொழுது ஜன்னலில் முட்டுக் கொடுத்து தொப்புள் தெரிய வெளியிட்டுள்ள புகைப்படத்தை வாய்பிளந்து பார்த்து விட்டு ரொம்ப கிளாமர் வேண்டாம்மா கொஞ்சம் குறைச்சிகோங்க என அட்வைஸ் செய்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X