கோடியில் ஒருவன் படக்குழுவுடன் எடுத்த ஸ்பெஷல் புகைப்படத்தை பகிர்ந்த ஆத்மிகா!

சென்னை : நடிகை ஆத்மிகா இப்பொழுது கோடியில் ஒருவன் திரைப்படத்தில் விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக நடித்து வருகிறார்.

ஆள்,மெட்ரோ என சூப்பர் ஹிட் படங்களை கொடுத்த ஆனந்தகிருஷ்ணன் இந்த படத்தை இயக்கி உள்ளார்.

பக்கா கமர்சியல் திரைப்படமாக உருவாகியிருக்கும் கோடியில் ஒருவன் படக்குழுவுடன் எடுத்த மறக்கமுடியாத ஸ்பெஷல் புகைப்படத்தை ஆத்மிகா தற்பொழுது பகிர்ந்துள்ளார்.

விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக

விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக

ஆத்மிகா மீசைய முறுக்கு படத்திற்கு பிறகு நரகாசூரன்,காட்டேரி உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். இந்த படங்கள் பல்வேறு பிரச்சினைகளால் இன்றுவரை வெளியாகாமல் உள்ளது. இந்த நிலையில் விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக கோடியில் ஒருவன் படத்தில் நடித்து முடித்துள்ளார்.

டியூஷன் மாஸ்டராக

டியூஷன் மாஸ்டராக

ஆள்,மெட்ரோ என இரண்டு சூப்பர் ஹிட் படங்களைக் கொடுத்த இயக்குனர் ஆனந்தகிருஷ்ணன் இயக்கியிருக்கும் கோடியில் ஒருவன் திரைப்படம் முழுக்க முழுக்க சென்னையில் கண்ணகி நகர் உள்ளிட்ட சில பகுதிகளில் படப்பிடிப்பு நடத்தி முடிக்கப்பட்டது . இதில் ஆண்டனி டியூஷன் மாஸ்டராக நடித்துள்ளார்.

Recommended Video

அப்பாவ ரொம்ப MISS பண்றேன் | ACTRESS AATHMIKA CHAT | FILMIBEAT TAMIL
ரொமான்டிக் காட்சிகளில்

ரொமான்டிக் காட்சிகளில்

ஆக்ஷன், காதல்,காமெடி, சென்டிமென்ட் என அனைத்து அம்சங்களும் கலந்த இந்த திரைப்படத்தின் டீஸர் வெளியாகி இணையதளத்தில் சக்கைபோடு போட்டதுமட்டுமல்லாமல் இதில் இடம்பெற்றிருந்த ரொமான்டிக் காட்சிகளில் ஆத்மிகா,விஜய் ஆண்டனி இருவரும் படு நெருக்கமாக நடித்திருந்தனர் .

அங்கீகாரமும் இல்லாமல்

அங்கீகாரமும் இல்லாமல்

நரகாசூரன், காட்டேரி ஆகிய படங்களுக்கும் முன்பு கோடியில் ஒருவன் ரிலீஸ் ஆக தயாராகிக் கொண்டுள்ள நிலையில் ஆத்மிகா கோடியில் ஒருவன் படப்பிடிப்பில் படக்குழுவுடன் எடுத்த ஸ்பெஷல் புகைப்படம் ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில் ஒவ்வொரு சினிமாவிலும் கேமராவுக்கு பின்னால் யாராலும் அறிய முடியாமல் பெரிதாக எந்த ஒரு அங்கீகாரமும் இல்லாமல் உழைப்பைக் கொடுத்து கொண்டிருக்கும் இயக்குனர், ஒளிப்பதிவாளர், கோரியோகிராஃபர், போட்டோகிராஃபர் மற்றும் பல டெக்னீஷியன்கள் என அனைவருக்கும் நன்றி கூறி ஸ்பெஷல் செல்பி புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X