twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    இது தான் சமூக விலகலா.. ரெம்டெசிவர் மருந்து வாங்க முண்டியடித்த கூட்டம்.. மீசையை முறுக்கிய நடிகை!

    |

    சென்னை: ரெம்டெசிவர் மருந்து வாங்க சென்னையில் உள்ள நேரு ஸ்டேடியத்தில் கூட்டம் அலைமோதிய செய்தியை பகிர்ந்த நடிகை ஆத்மிகா இதுதான் சமூக விலகலா? என சாடியுள்ளார்.

    Recommended Video

    Corona Vaccine தொடர்பான சந்தேகங்கள் | Doctor Dilipan விளக்கம்

    கொரோனா பரவலை தடுக்க முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு இருக்கும் சூழலில் இப்படி மருந்து வாங்க கூட்டம் முண்டியடித்துக் கொண்டு இருந்தால், கொரோனா பரவல் எப்படி கட்டுக்குள் வரும் என்கிற கேள்வியும் எழுந்துள்ளது.

    இதுவரை கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் செயல்பட்டு வந்த ரெம்டெசிவர் மருந்து விற்பனை இன்று முதல் நேரு ஸ்டேடியத்திற்கு மாற்றப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    அடங்காத கொரோனா

    அடங்காத கொரோனா

    நாள்தோறும் தமிழ்நாட்டில் 33 ஆயிரத்திற்கும் அதிகமான மக்கள் கொரோனா பாதிப்புக்கு ஆளாகி வருகின்றனர். கடந்த மே 10ம் தேதி கொரோனா பரவலை தடுக்க ஊரடங்கு போடப்பட்ட நிலையிலும், கொரோனா பாதிப்பு கட்டுக்குள் வரவில்லை. பாதிப்பு எண்ணிக்கையும் இறப்பு எண்ணிக்கையும் அதிகரித்துள்ளன.

    ரெம்டெசிவர்

    ரெம்டெசிவர்

    நெருங்கிய சொந்தங்களின் உயிர்களை காப்பாற்ற மருத்துவர்கள் பரிந்துரைக்கும் ரெம்டெசிவர் மருந்துகளை வாங்க இதுவரை சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் கூட்டம் கூட்டமாக மக்கள் காத்துக் கொண்டு இருந்தனர். பல மாவட்டங்களில் இருந்தும் ரெம்டெசிவர் மருந்து வாங்க மக்கள் சென்னைக்கு படையெடுத்து வருகின்றனர்.

    நேரு ஸ்டேடியத்தில்

    நேரு ஸ்டேடியத்தில்

    இதுவரை கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் இயங்கி வந்த ரெம்டெசிவர் மருந்து விற்பனை இன்று முதல் நேரு ஸ்டேடியத்தில் செயல்படும் என அறிவிக்கப்பட்ட நிலையில், இன்று அதிகாலை முதலே ஆயிரக் கணக்கான மக்கள் நேரு ஸ்டேடியத்தை முற்றுகையிட்டனர்.

    முண்டியத்த கூட்டம்

    முண்டியத்த கூட்டம்

    தினமும் 300 பேருக்கு மட்டுமே மருந்து வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டு இருந்தாலும், 1000 கணக்கான மக்கள் அந்த மருந்தை வாங்க முண்டியடித்துக் கொண்டு கூட்டமாக திரண்டது பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. போலீசார் வரிசையில் நிற்க பணித்தும் பலரும் எப்படியாவது ரெம்டெசிவர் மருந்தை வாங்கி விட வேண்டும் என்று முனைப்புக் காட்டி வருகின்றனர்.

    இதுதான் சமூக விலகலா

    இந்நிலையில், இதுதொடர்பான தனியார் செய்தி வீடியோ ஒன்றை ஷேர் செய்த மீசையை முறுக்கு பட நடிகை ஆத்மிகா இதுதான் சமூக விலகலா என்கிற கேள்வியை எழுப்பி சாடியுள்ளார். இப்படி கூட்டம் சேர்வதன் மூலம் மேலும், பலருக்கு தொற்று பரவும் அபாயம் ஏற்படும் என்று பலரும் கூறி வருகின்றனர்.

    அந்த வலி புரியாது

    அந்த வலி புரியாது

    வீட்டில் சொகுசாய் இருந்துக் கொண்டு டிவி பார்த்துக் கொண்டு இப்படி ட்வீட் போட மட்டும் தான் உங்களால் முடியும் என்றும், உயிருக்காக போராடும் உறவுகளை காப்பாற்ற தவிக்கும் அந்த மக்களின் வலி உங்களுக்கு தெரியாது என்றும் சிலர் ஆத்மிகாவை திட்டி கமெண்ட் செய்துள்ளனர். சிலர், சமூக விலகலை கட்டாயம் கடை பிடிக்க வேண்டும் என்றும், ரெம்டெசிவர் மருந்துகளை மருத்துவமனைகளுக்கே விற்பனை செய்தால், பொதுமக்கள் இப்படி அல்லாட மாட்டார்கள் என்றும் கமெண்ட் செய்து வருகின்றனர்.

    English summary
    Aathmika slams people who mass crowding to buy Remdesivir and no social distancing in her twitter page.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X