கொரோனா வெறும் டிரைலர் தான்.. இதுக்கு மேல பெரிய பிரச்சனைகள் வரப் போகுதாம்.. எச்சரிக்கும் ஆத்மிகா!
சென்னை: மீசையை முறுக்கு படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை ஆத்மிகா.
சமூக வலைதளங்களில் அடிக்கடி போட்டோக்களை போட்டு ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வரும் இவர், சமூகம் சார்ந்த கருத்துக்களையும் ட்வீட் போட்டு வருகிறார்.
இந்நிலையில், தற்போது கொரோனா வெறும் டிரைலர் தான் என்றும் பெரிய பிரச்சனைகள் இனிமேல் தான் வரப் போகிறது என்றும் எச்சரித்துள்ளார்.

கோடியில் ஒருவன்
ஹிப் ஹாப் ஆதியின் மீசையை முறுக்கு படத்தில் ஹீரோயினாக நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை ஆத்மிகா. விஜய் ஆண்டனியின் கோடியில் ஒருவன் படத்தின் ரிலீசுக்காக காத்திருக்கிறார். ஆத்மிகா நடித்து நீண்ட நாட்களாக ரிலீசாகாமல் காத்திருக்கும் நரகாசூரன் திரைப்படமும் ரிலீசாகப் போகிறது.

கும்முனு இருக்காரு
ட்விட்டர் மற்றும் இன்ஸ்டாகிராம் பக்கங்களில் அடிக்கடி போட்டோஷூட் நடத்தி செம ஹாட்டாக இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு வரும் ஆத்மிகாவை பார்த்து சும்மா கும்முனு இருக்காரே என ரசிகர்கள் ஜொள்ளு விட்டு வருகின்றனர்.

தாதா செயின்
சட்டையை கழட்டி உள்ளாடையுடன் இருக்கும் போஸ் கொடுத்து இருக்கும் ஆத்மிகாவின் கழுத்தில் மின்னும் தாதா செயினை பார்த்து ரசிகர்கள் என்னம்மா இப்படி போஸ் கொடுத்து நிக்குறியே என திணறிப் போய் கமெண்ட்டுகளை தெறிக்கவிட்டு வந்தனர்.

சகிக்க முடியாது
கிளாமராக மட்டுமின்றி சமூக அக்கறைகளுடன் ஏகப்பட்ட போஸ்ட்டுகளையும் போட்டு வருகிறார் ஆத்மிகா. சமீபத்தில், கல்ஃப் ஆஃப் மெக்ஸிகோ கடலில் தீப்பிடித்து எரிந்த அரிதான காட்சி உலகம் முழுவதும் பரபரப்பை கிளப்பியது. மனிதர்களின் சுயநலத்தால் சுற்றுச் சூழல் மாசுபடுவதை ஒரு போதும் சகித்துக் கொள்ள முடியாது என ட்வீட் போட்டிருந்தார் ஆத்மிகா.

கொரோனா டிரைலர் தான்
உலகையே போட்டு உலுக்கி எடுத்து வரும் கொரோனா வைரஸ் நோய் வெறும் டிரைலர் மட்டும் தான். பனிப்பாறைகள் உருகி வருவது உலகிற்கே பேராபத்தாக முடியும் என்கிற மீமை ஷேர் செய்துள்ள ஆத்மிகா எல்லாத்துக்கும் தொடர்பு இருக்கு என எச்சரிக்கை விடுத்துள்ளார்.
Recommended Video

சூப்பர் செல்லம்
இன்னும் சில ஆண்டுகளில் உலகின் பல இடங்கள் நீரில் மூழ்கி விடும் என சொல்றாங்க ஆத்மிகா என்றும் சூப்பர் செல்லம் என்றும் பாத்து ரொம்ப பத்திரமா இருங்க என்றும் ஏகப்பட்ட கமெண்ட்டுகளை ஆத்மிகாவின் ரசிகர்கள் போட்டுத் தாக்கி வருகின்றனர். சிலர் ஆத்மிகாவின் இந்த ட்வீட்டை ட்ரோல் செய்தும் வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











