2010ல் வெளியாகி தமிழ் ரசிகர்களால் கொண்டாட மறந்த திரைப்படம்.. ஆயிரத்தில் ஒருவன்.. இன்று வயது 10!

By staff

சென்னை: செல்வராகவனின் ஆயிரத்தில் ஒருவன் திரைப்படம் இன்று உடன் பத்து ஆண்டுகளை நிறைவு செய்கிறது.

இதே நாள் பத்து வருடங்களுக்கு முன்பு பொங்கல் சமயத்தில் கார்த்தி, ரிமாசென், பார்த்திபன் மற்றும் அழகம் பெருமாள் நடித்து செல்வராகவன் இயக்கி ஜி.வி.பிரகாஷ் இசை அமைத்து வெளிவந்த திரைப்படம் தான் ஆயிரத்தில் ஒருவன்.

Aayirathil oruvan movie celebrates its 10th birthday today

இப்படத்திற்கு கலவையான விமர்சனங்களே அதிகம் கிடைத்தன. தற்போது இப்படத்தை தூக்கி வைத்து கொண்டாடுகின்றனர் தமிழ் ரசிகர்கள். இப்படத்தை அப்போது அப்படி விமர்சனம் செய்தவர்கள் எல்லாம் தற்போது இப்படத்தினை கொண்டாடுகிறார்களே என்ற கேள்வி பலருக்கு உண்டு.

கார்த்தி பருத்திவீரன் என்ற தனது முதல் படத்திலேயே தான் யார் தன் நடிப்பு எப்படி இருக்கும் என்று அனைவருக்கும் சொல்லாமல் சொல்லிவிட்டார். இவர் இரண்டாவதாக நடித்த திரைப்படம் தான் ஆயிரத்தில் ஒருவன். இதில் இவர் ஏற்ற கதாபாத்திரம் வேறு எவராலும் ஏற்று இருக்க முடியாது.

படத்தில் பார்த்திபனின் நடிப்பு அனைவரையும் பூரிப்பு அடைய செய்தது. ஒரு சோழ அரசனாக வரும் கதாபாத்திரம். இன்றளவும் மக்களிடையே அந்த கதாபாத்திரத்திற்கு ஒரு தனி இடம் உண்டு.

படத்தில் கார்த்தி மற்றும் ரீமாசென், ஆண்ட்ரியா மூவரும் தொலைந்து சென்ற ஆண்டிரியாவின் அப்பாவை தேடி செல்லும் காட்சிகள் ரசிக்க வைத்தது. சோழ மன்னர்கள் தாங்கள் செல்லும் பாதையில் யாரும் வர கூடாது என்று ஏழு ஆபத்துக்களை வைத்து செல்வர். அதனை கடந்து செல்லும் இந்த மூவரின் செயல்கள் பிரம்மிப்பு அடைய செய்தது.

கிளைமாக்ஸில் நடக்கும் அனைத்து காட்சிகளும் நம்மை உறைய வைக்கும். ஒரு மன்னர் இப்படியெல்லாம் கஷ்டப்பட்டாரா என்று எல்லாம் நினைக்க வைத்தன. எத்தனை படங்கள் இவர் எடுத்தாலும் இது தான் இவரின் மாஸ்டர் பீஸ் என்று ரசிகர்களால் சொல்லப்படுகிறது.

இந்த ஆயிரத்தில் ஒருவன் திரைப்படம் ரிலீஸ் ஆகி இன்றுடன் 10 ஆண்டுகள் நிறைவடைந்துவிட்டது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X