Breaking: ஜெயில் படத்தில் அபர்ணதியின் கதாபாத்திரம்... என்னன்னு தெரிஞ்சா அசந்துபோய்டுவீங்க!

வசந்தபாலனின் ஜெயில் படத்தில் லேடி தாதாவாக நடிக்கிறார் அபர்ணதி.

Recommended Video

ஜி.வி.பிரகாஷ் ஜோடியாக நடிக்கும் அபர்ணதியின் கதாபாத்திரம்

சென்னை: வசந்தபாலன் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் நடிக்கும் ஜெயில் படத்தில் அபர்ணதியின் கதாபாத்திரம் என்ன என்பது தெரியவந்துள்ளது.

வெயில், அங்காடி தெரு, காவிய தலைவன் உள்ளிட்ட தரமான படங்களை இயக்கியவர் வசந்தபாலன். ஓரு சிறு இடைவெளிக்கு பிறகு அவர் இயக்கும் படம் ஜெயில். சென்னை கண்ணகி நகரில் வாழும் மக்களை பற்றிய படம் இது.

இந்த படத்தில் ஜி.வி.பிரகாஷ் ஹீரோவாக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக அபர்ணதி நடிக்கிறார். இருவருமே கண்ணகி நகர் பகுதி மக்களாக நடிக்கின்றனர்.

அபர்ணதியின் கதாபாத்திரம்

அபர்ணதியின் கதாபாத்திரம்

ஜெயில் படத்தில் அபர்ணதி கதாபாத்திரத்தின் தன்மை குறித்து தெரியவந்துள்ளது. இந்த படத்தில் அவர் லேடி தாதாவாக நடிக்கிறாராம். யாருக்கும் பயப்படாத, ஆண்களை புரட்டி எடுக்கும் தைரியமான பெண் கதாபாத்திரம் அவருக்கும்.

நிஜ குணம்

நிஜ குணம்

அபர்ணதியின் நிஜ குணமும் கிட்டத்தட்ட அதுபோல தான் இருக்கும். யாருக்கும் பயப்படாமல் தனது கருத்து தெளிவாக முன்வைக்கும் குணம் படைத்தவர் அவர். ஆர்யாவின் 'எங்க வீட்டு மாப்பிள்ளை' நிகழ்ச்சியில் கூட தனது கருத்தை ஓப்பனாக பேசினார். இதன் காரணமாகவே அவருக்கு கெட்டப் பெயர் ஏற்பட்டது.

பயப்படமாட்டார்

பயப்படமாட்டார்

ஊடகங்களுக்கு பேட்டி அளிக்கும் போது கூட மிக சகஜமாக பேசி பழகுவார். எந்த கேள்விக்கும் பயப்படாமல், தயங்காமல் பதில் அளிப்பார். எனவே தான் ஜெயில் படத்தில் அவருக்கு, லேடி ரவுடி ரோல் கிடைத்திருக்கிறது என்ற பேச்சும் ஒருபக்கம் இருக்கிறது.

அதிரடி பெண்

அதிரடி பெண்

நிஜத்திலேயே அதிரடி நபரான அபர்ணதி ஜெயில் படத்தில் என்ன மாதிரியான அடாவடிகளை செய்திருக்கப் போகிறார் என்று நினைக்கும் போது எதிர்பார்ப்பு கூடுகிறது. சாதுவான குணம் படைத்த ஜி.வி.பிரகாஷை, லேடி தாதா அபர்ணதி என்ன பாடுபடுத்தியிருக்கிறாரோ என கோலிவுட் வட்டாரங்கள் முணுமுணுக்கின்றன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X