ஆர்யா - சாயிஷா திருமணம்.. ‘எங்க வீட்டு மாப்பிள்ளை’ அபர்ணதி என்ன சொல்றார் தெரியுமா?

ஆர்யா - சாயிஷா திருமணம் செய்து கொள்ளப் போவதாக இணையத்தில் வெளியான செய்தி 99 சதவீதம் வதந்தி தான் என்கிறார் நடிகை அபர்ணதி.

Recommended Video

ஆர்யா-சாயிஷா திருமணம் செய்தி உண்மை அல்ல- அபர்ணதி கருத்து- வீடியோ

சென்னை: ஆர்யா - சாயிஷா திருமணம் செய்து கொள்ளப் போவதாக இணையத்தில் வெளியான செய்தி குறித்து நடிகை அபர்ணதி கருத்து தெரிவித்துள்ளார்.

நடிகர் ஆர்யாவிற்கு மணப்பெண் தேடுவதற்காக தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான எங்க வீட்டு மாப்பிள்ளை நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மக்களிடையே அதிக பிரபலமானவர் அபர்ணதி. அந்த நிகழ்ச்சியில் இறுதிச் சுற்று வரை அமைதியாக இருந்த ஆர்யா, கடைசி வரை யாரையும் தேர்வு செய்யவில்லை.

இறுதிச் சுற்றுக்கு முன்னர் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய அபர்ணதிக்கு வசந்தபாலன் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் ஜோடியாக ஜெயில் படத்தில் நாயகியாகும் வாய்ப்பு அமைந்தது, ' நிச்சயம் தன்னைத் தான் ஆர்யா காதலிப்பதாக' ஊடகங்களில் அப்போது தெரிவித்திருந்தார். இதனால் அவர்கள் இருவரும் திருமணம் செய்து கொள்ளலாம் என ரசிகர்கள் எதிர்பார்த்தனர்.

திருமணம்:

திருமணம்:

ஆனால், வழக்கம்போல் அமைதியாக இருந்த ஆர்யா, சமீபகாலமாக தன்னுடன் கஜினிகாந்த் படத்தில் நடித்த சாயிஷாவைக் காதலிப்பதாக கூறப்பட்டது. அதன் தொடர்ச்சியாக இருவீட்டார் சம்மதத்துடன் அவர்களது திருமணம் வரும் மார்ச் மாதம் 10ம் தேதி ஹைதராபாத்தில் நடைபெற இருப்பதாக கடந்த சில தினங்களுக்கு முன்னர் ஒரு செய்தி வைரலானது.

அமைதி காக்கும் ஆர்யா:

அமைதி காக்கும் ஆர்யா:

இது தொடர்பாக ஆர்யாவோ அல்லது சாயிஷாவோ இதுவரை அதிகாரப்பூர்வமாக உண்மை என்றோ , மறுப்பு தெரிவித்தோ அறிக்கை எதனையும் வெளியிடவில்லை. இதனால் இந்தச் செய்தி உண்மையாக இருக்க அதிக வாய்ப்புள்ளதாகக் கருதப்படுகிறது.

அபர்ணதி:

அபர்ணதி:

இந்நிலையில், இது தொடர்பாக அபர்ணதி ஆங்கில ஊடகம் ஒன்றிற்கு அளித்த பேட்டியில், ‘ஆர்யா-சாயிஷா திருமணம் தொடர்பாக வெளியான தகவல் வதந்தி' எனத் தெரிவித்துள்ளார். மேலும், நடிகர் விஷாலைப் போல் ஆர்யாவோ அல்லது சாயிஷாவோ இத்தகவலை தங்களது சமூகவலைதளப் பக்கத்தில் பதிவிட்டால் மட்டுமே இதனை உண்மையென நம்ப முடியும். மற்றபடி இது 99 சதவீதம் பொய்யான தகவல் என அவர் கூறியுள்ளார்.

எதிர்பார்ப்பு

எதிர்பார்ப்பு

அபர்ணதியின் இந்தப் பேட்டியால் மீண்டும் ஆர்யாவின் திருமணம் பற்றி குழப்பம் அதிகமாகியுள்ளது. இது குறித்து ஆர்யாவோ அல்லது சாயிஷாவோ பேசினால் மட்டுமே உண்மையினை தெரிந்து கொள்ளமுடியும். எப்போது அவர்கள் இதுபற்றி பேசுவார்கள் என ஆர்யா, சாயிஷா மற்றும் அபர்ணதி ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X