Abbas: “மம்முட்டி அப்படி ரியாக்ட் பண்ணுவார்ன்னு நினைக்கல..” ஷூட்டிங்கில் மொக்கை வாங்கிய அப்பாஸ்
சென்னை: கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் படத்தில் நடித்த போது மம்முட்டியிடம் மொக்கை வாங்கியது குறித்து நடிகர் அப்பாஸ் மனம் திறந்துள்ளார்.

மம்முட்டியிடம் மொக்கை வாங்கிய அப்பாஸ்
கோலிவுட்டில் சாக்லெட் ஹீரோவாக வலம் வந்தவர் அப்பாஸ். காதல் தேசம் திரைப்படத்தில் அறிமுகமான அவர் பூச்சூடவா, பூவேலி, கண்டுகொண்டேன், கண்டுகொண்டேன், ஆனந்தம், மலபார் போலீஸ், படையப்பா, பம்மல் கே சம்பந்தம், மின்னலே உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். அதன்பிறகு படங்களில் நடிக்க அதிகம் வாய்ப்பில்லாமல் வெளிநாடு சென்றுவிட்டார்.
தற்போது நியூசிலாந்து நாட்டில் குடும்பத்துடன் செட்டிலான அப்பாஸ், அங்கு பைக் மெக்கானிக்காக வேலைப் பார்த்து வ்ருகிறார். இந்நிலையில் சில தினங்களுக்கு முன்னர் சென்னை திரும்பிய அப்பாஸ், தனது சினிமா கேரியர் குறித்து பேசியிருந்தார். அப்போது மம்முட்டியுடன் நடித்தது பற்றியும் அப்பாஸ் மனம் திறந்துள்ளார். மம்முட்டியுடன் ஆனந்தம், கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் என இரண்டு படங்களில் நடித்துள்ளார் அப்பாஸ்.
இதில், ராஜீவ் மேனன் இயக்கிய கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் 2000ம் ஆண்டு வெளியானது. அஜித், மம்முட்டி, அப்பாஸ், ஐஸ்வர்யா ராய், தபு, மணிவண்ணன் உள்ளிட்ட பலர் நடித்த இந்தப் படம் ஃபீல் குட் மூவியாக உருவாகியிருந்தது. இந்தப் படத்தில் முதலில் அப்பாஸ் - ஐஸ்வர்யா இருவரும் காதலிப்பார்கள். ஆனால் க்ளைமேக்ஸில் மம்முட்டி - ஐஸ்வர்யா ராய் ஆகியோர் இணைவதாக இருக்கும்.
இதுகுறித்து பேசிய அப்பாஸ், ஒரு காட்சியில் மம்முட்டியுடன் நடிக்க வேண்டி இருந்தது. அவர் சீனியர் நடிகர் என்பதால் முதலிலேயே பயம் வந்துவிட்டது. அந்த பயத்தோடு நான் சரியாக நடிக்கவில்லை, இதனைப் பார்த்த மம்முட்டி என்னைப் பார்த்து அலட்சியமாக ஒரு லுக் விட்டார். படப்பிடிப்பில் அது எனக்கு ரொம்பவே அசிங்கமாகிவிட்டது. அதன்பிறகு ரொம்பவே கஷ்டப்பட்டு அந்த சீனில் நடித்ததாக அப்பாஸ் கூறியுள்ளார்.
ஆனால், ஆனந்தம் படத்தில் நடித்த போது மம்முட்டியுடன் நெருங்கி பழகிவிட்டேன். அவருக்கு கேட்ஜெட்ஸ், வீடியோ கேம்ஸ் எல்லாம் ரொம்பவே பிடிக்கும் என்பதால், நானும் அது பற்றி பேசி பேசி மம்முட்டியுடன் பழகிவிட்டேன். அதன்பின்னர் நான், மம்முட்டி, முரளி அண்ணா மூவருமே ஷூட்டிங் முடிந்ததும் ஒன்றாக விளையாட சென்றுவிடுவோம் என அப்பாஸ் கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications











