Abbas: பிரசாந்த் மேல அப்பாஸுக்கு என்ன இப்படியொரு கோபம்.. ஜீன்ஸ் படம் தான் இதுக்கெல்லாம் காரணமா..?

சென்னை: கோலிவுட்டில் 1990களில் சாக்லெட் ஹீரோவாக வலம் வந்தவர் நடிகர் அப்பாஸ்.

காதல் தேசம், பூச்சூடவா, விஐபி, மின்னலே உள்ளிட்ட பல படங்களில் ஹீரோவாகவும் கெஸ்ட் ரோலிலும் நடித்துள்ளார்.

 Abbas: Actor Abbas criticizes Prashants acting and dance

அதே காலக்கட்டத்தில் நடிகர் பிரசாந்தும் தமிழில் முன்னணி ஹீரோவாக வலம் வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் நடிகர் பிரசாந்த் குறித்து அப்பாஸ் விமர்சனம் செய்துள்ளது ரசிகர்களிடம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பிரசாந்த் நடிப்பை விமர்சித்த அப்பாஸ்: 1996ம் ஆண்டு வெளியான காதல் தேசம் திரைப்படம் மூலம் ஹீரோவாக அறிமுகமானவர் அப்பாஸ். கதிர் இயக்கத்தில் ஏஆர் ரஹ்மான் இசையமைத்த காதல் தேசம், அப்பாஸுக்கு சிறப்பான ஓபனிங் கொடுத்தது. இந்தப் படம் கொடுத்த அறிமுகத்தால் அப்பாஸுக்கு அடுத்தடுத்து பல படங்களில் ஹீரோவாக நடிக்கும் வாய்ப்புக் கிடைத்தது.

 Abbas: Actor Abbas criticizes Prashants acting and dance

VIP, பூச்சூடவா, இனி எல்லாம் சுகமே, பூவேலி, படையப்பா, பம்மல் கே சம்பந்தம் என பல படங்களில் நடித்த அப்பாஸ், ஒருகட்டத்தில் ஃபீல்ட் அவுட்டானார். இதனால் தற்போது நியூசிலாந்தின் ஆக்லாந்து நகரில் தனது குடும்பத்தினருடன் செட்டிலாகிவிட்டார் அப்பாஸ். அதுமட்டும் இல்லாமல் பைக் மெக்கானிக்காகவும் வேலை பார்த்து வருகிறாராம். இந்நிலையில் சில தினங்களுக்கு முன்னர் சென்னை வந்த அப்பாஸ், பிரபல யூடியூப் சேனலுக்கு பேட்டிக் கொடுத்திருந்தார்.

அதில், தனது சினிமா கேரியரின் ஆரம்பம் முதல் அதிலிருந்து வெளியேறியவது வரை அனைத்தையும் மனம் திறந்து பேசியிருந்தார். நடிகை சிம்ரன் உடனான நட்பு உட்பட பல உண்மைகள் குறித்து அப்பாஸ் பேசினார். அதில் நடிகர் பிரசாந்த் பற்றியும் அப்பாஸ் பேசியது ரசிகர்களிடம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது பிரசாந்த் எனக்கு நல்ல நண்பர் தான் எனக் கூறியுள்ள அப்பாஸ், அவரது நடிப்பை விமர்சித்துள்ளார்.

"பிரசாந்தின் நடனம் எனக்கு ரொம்பவே பிடித்திருந்தாலும் அவரது நடிப்பு பெரிதாக கவரவில்லை. பிரசாந்த் அப்பா ஏற்கனவே திரையுலகில் பிரபலமாக இருந்தார். அதனால் அவருக்கு சினிமாவில் நடிக்க எளிதாக வாய்ப்புகள் கிடைத்தது, தன்னைப் போல் கஷ்டப்பட்டு வரவில்லை" என்றும் அப்பாஸ் கூறியுள்ளார். திடீரென பிரசாந்த் மீது அப்பாஸ் இப்படி கோபம் கொள்ள என்ன காரணமோ என ரசிகர்கள் குழப்பத்தில் இருந்தனர்.

 Abbas: Actor Abbas criticizes Prashants acting and dance

அதாவது பிரசாந்துக்கு மிகப்பெரிய கம்பேக் கொடுத்த திரைப்படம் ஜீன்ஸ். ஷங்கர் இயக்கத்தில் பிரசாந்த், ஐஸ்வர்யா ராய், நாசர், ராதிகா, ராஜூ சுந்தரம் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். பிரசாந்த் டபுள் ஆக்டிங்கில் நடித்திருந்த இந்தப் படம் சூப்பர் ஹிட் அடித்தது. முன்னதாக ஜீன்ஸ் படத்தில் நடிக்க முதலில் அப்பாஸுக்கு தான் சான்ஸ் சென்றுள்ளது. ஆனால், அப்போது அப்பாஸின் மேனேஜர் செய்த குளறுபடியால் அதில் பிரசாந்த் நடித்துள்ளார்.

ஒருவேளை ஜீன்ஸ் படத்தில் அப்பாஸ் நடித்திருந்தால் அவரது கேரியர் இன்னும் உச்சம் சென்றிருக்கும். இந்த கடுப்பில் தான் பிரசாந்த்தின் நடிப்பை அப்பாஸ் ட்ரோல் செய்துள்ளாரோ என ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X