Abbas: “சிம்ரனுடன் நல்ல கெமிஸ்ட்ரி இருந்தது... நாங்கள் அப்படித்தான் பழகினோம்..” மனம் திறந்த அப்பாஸ்

சென்னை: 1996ல் ரிலீஸான காதல் தேசம் திரைப்படம் மூலம் ஹீரோவாக என்ட்ரி கொடுத்தவர் அப்பாஸ்.

மாடலிங்கில் இருந்து திரையுலகில் அறிமுகமான அப்பாஸ், தமிழ் சினிமாவில் சாக்லேட் ஹீரோவாக கலக்கி வந்தார்.

பூச்சூடவா, விஐபி, படையப்பா, மின்னலே உள்ளிட்ட பல படங்களில் ஹீரோவாகவும் கெஸ்ட் ரோலிலும் நடித்துள்ளார்.

இந்நிலையில், நடிகை சிம்ரன் குறித்தும் அவருடன் இணைந்து நடித்தது பற்றியும் அப்பாஸ் மனம் திறந்துள்ளார்.

 Abbas: Actor Abbas opened up about his relationship with actress Simran

சிம்ரன் குறித்து மனம் திறந்த அப்பாஸ்:கதிர் இயக்கத்தில் ஏஆர் ரஹ்மான் இசையமைத்த திரைப்படம் காதல் தேசம். 1996ம் ஆண்டு வெளியான இந்தப் படத்தில் அப்பாஸ் ஹீரோவாக அறிமுகமானார். அவருடன் வினீத், தபு, சின்னி ஜெயந்த் உள்ளிட்ட பலர் காதல் தேசம் படத்தில் நடித்திருந்தனர். ஏஆர் ரஹ்மானின் இசையில் பாடல்கள் அனைத்தும் ஹிட் அடிக்க, படமும் ப்ளாக்ஸ் பஸ்டர் ஹிட் ஆனது.

காதல் தேசம் படத்தில் நடித்த அப்பாஸ், ரசிகர்களால் சாக்லேட் ஹீரோவாக கொண்டாடப்பட்டார். முக்கியமாக அவரது ஹேர் ஸ்டைல் அப்போது மிகப் பெரிய ட்ரெண்டானது. காதல் தேசம் படத்தைத் தொடர்ந்து பிரபுதேவாவுடன் VIP, பூச்சூடவா, இனி எல்லாம் சுகமே, பூவேலி என பல படங்களில் நடித்தார் அப்பாஸ். இதில் விஐபி, பூச்சூடவா இரண்டு படங்களிலும் அப்பாஸுடன் சிம்ரனும் நடித்திருந்தார். முக்கியமாக பூச்சூடவா படத்தில் அப்பாஸ் - சிம்ரன் ஜோடிக்கு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு இருந்தது.

ஒருகட்டத்தில் அப்பாஸும் சிம்ரனும் காதலிப்பதாகவும் சொல்லப்பட்டது. அதேநேரம் அப்பாஸை விடவும் சிம்ரன் மெல்ல மெல்ல தனது கேரியரில் உச்சம் தொட்டார். ஹீரோவாக நடித்து வந்த அப்பாஸ், செகண்ட் ஹீரோ, மேகியோ ரோல் என மார்க்கெட்டை இழந்துவிட்டார். ஆனால், சிம்ரனோ அனைத்து முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து கோலிவுட்டின் டாப் ஹீரோயின்களில் ஒருவராகிவிட்டார்.

அதன்பின்னர் அப்பாஸ், சிம்ரன் இருவரும் இணைந்து நடிக்கவில்லை. ஆனால், சிம்ரன் தயாரித்த ஒரு படத்தில் அவருக்காக கெஸ்ட் ரோலில் நடித்திருந்தார் அப்பாஸ். இந்நிலையில் தற்போது அப்பாஸ் கொடுத்த ஒரு பேட்டியில் சிம்ரன் குறித்து மனம் திறந்து பேசியுள்ளார். அதில், "சிம்ரன் எனக்கு நல்ல நண்பர், ஸ்கிரீனில் நல்ல ஜோடியாக தெரிந்தோம். ஆனாலும் இருவரும் சேர்ந்து அதிக படங்கள் பண்ணவில்லை. சிம்ரனுடன் தமிழில் இண்டு படங்களும் தெலுங்கில் ஒரு படமும் நடித்தேன் என அப்பாஸ் கூறியுள்ளார்.

 Abbas: Actor Abbas opened up about his relationship with actress Simran

மேலும், எங்கள் இருவருக்கும் இடையே இருந்த நல்ல கெமிஸ்ட்ரி ரசிகர்களுக்கு பிடித்திருந்ததாகவும் அப்பாஸ் தெரிவித்துள்ளார். இப்போதும் அவருடன் நட்பாக இருப்பதையும் நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார். அப்பாஸின் இந்த பேட்டி ரசிகர்களிடம் ட்ரெண்டாகி வருகிறது. கோலிவுட்டின் முன்னணி நடிகராக வலம் வருவார் என எதிர்பார்க்கப்பட்ட அப்பாஸ், நியூசிலாந்தின் ஆக்லாந்து நகரில் தனது குடும்பத்தினருடன் செட்டிலாகிவிட்டார்.

அதுமட்டும் இல்லாமல் தற்போது நடிப்பதற்கு வாய்ப்புகள் கிடைக்கவில்லை என்பதால், பைக் மெக்கானிக்காக வேலை பார்த்து வருகிறாராம் அப்பாஸ். ஆனால், அவர் சினிமாவில் இன்னொரு ரவுண்டு வர வேண்டும் என ரசிகர்கள் அப்பாஸுக்கு வாழ்த்துத் தெரிவித்துள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X