ஹீரோயின் ஆகிறாரா..? வைரலாகும் வெளிநாட்டில் செட்டிலான பிரபல முன்னாள் ஹீரோவின் மகள் போட்டோ!

By

சென்னை: வெளிநாட்டில் வேலை பார்க்கும் முன்னாள் ஹீரோவின் மகள் போட்டோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

Recommended Video

நடிகர் Abbas 90's Hero விற்கு நடந்த சோகம்

தமிழில், கதிர் இயக்கிய 'காதல் தேசம்' படம் மூலம் ஹீரோவாக அறிமுகமானவர், பெங்களூரைச் சேர்ந்த அப்பாஸ்.

வினித், தபு உட்பட பலர் நடித்திருந்த இந்தப் படத்துக்கு ஏ.ஆர்.ரகுமான் இசை அமைத்திருந்தார்.

அதிக ரசிகைகள்

அதிக ரசிகைகள்

பாடல்கள் சூப்பர் ஹிட்டாகின. கே.வி.ஆனந்த் ஒளிப்பதிவு செய்திருந்த இந்தப் படம் 1996 ஆம் ஆண்டு வெளியானது. இந்தப் படத்தில் கவனிக்கப்பட்ட நடிகர் அப்பாஸுக்கு பிறகு ஏகப்பட்ட வாய்ப்புகள் கிடைத்தன. அவருக்கு அதிகமான ரசிகர்கள் உருவாகினர். ரசிகர்களை விட ரசிகைகள் அதிகம். இந்தப் படத்துக்குப் பிறகு, தமிழ் மட்டுமின்றி, தெலுங்கு, இந்தி, தெலுங்கு பட வாய்ப்புகளும் அவரைத் தேடி வந்தன.

பம்மல் கே சம்மந்தம்

பம்மல் கே சம்மந்தம்

பிரபுதேவாவுடன் விஐபி, பூச்சூடவா, இனி எல்லாம் சுகமே, ஜாலி, பூவேலி, ரஜினிகாந்துடன் படையப்பா, ராஜீவ் மேனன் இயக்கிய கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன், கமல்ஹாசனின் பம்மல் கே சம்மந்தம் உட்பட பல படங்களில் நடித்தார். கடைசியாக, ராமானுஜம் என்ற படத்தில் சின்ன கேரக்டரில் நடித்திருந்தார். இவர், எரும் அலி (Erum Ali) என்பவரை காதலித்து 1999 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.

ஆடை வடிவமைப்பாளர்

ஆடை வடிவமைப்பாளர்

எரும் அலி, ஃபேஷன் டிசைனர். ஆயிரத்தில் ஒருவன், குரு என் ஆளு உட்பட பல படங்களுக்கு ஆடை வடிவமைப்பாளராகப் பணியாற்றியுள்ளார். இவர்களுக்கு எமிரா, அய்மான் ஆகிய குழந்தைகள் உள்ளன. தொடர்ந்து தமிழில் நடித்து வந்த அப்பாஸுக்கு வாய்ப்புகள் குறைந்தன. இதையடுத்து அவர் தனது குடும்பத்துடன் நியூசிலாந்து சென்றார். அங்கு ஆக்லாந்து நகரில் செட்டில் ஆகிவிட்டார்.

சினிமாவில் மீண்டும்

சினிமாவில் மீண்டும்

அங்கு அப்பாஸின் மனைவி ஆடை வடிவமைப்பாளராகப் பணியாற்றி வருகிறார். அப்பாஸும் அங்கு பிரபல நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வருகிறார். அவர்கள் குழந்தைகள் அங்கு படித்து வருவதாக சமீபத்தில் செய்தி வெளியாகின. 'அப்பாஸ் நியூசிலாந்தில் செட்டிலாகி சில வருடங்கள் ஆகின்றன. அவர் சினிமாவில் மீண்டும் நடிப்பதற்காக, இப்போது இங்கு வர வாய்ப்பில்லை என்று அவருக்கு நெருங்கியவர்கள் தெரிவித்திருந்தனர்.

எமிரா புகைப்படங்கள்

எமிரா புகைப்படங்கள்

இந்நிலையில், நடிகர் அப்பாஸின் 21 வயது மகள் எமிராவின் புகைப்படங்கள் இணையத்தில் திடீரென வைரலாகி வருகின்றன. அவரை சினிமாவில் ஹீரோயினாக நடிக்க அப்பாஸூம், அவர் மனைவியும் முடிவு செய்துள்ளதாகவும் அதனால் அவர் புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பரப்பி வருவதாகவும் சொல்கிறார்கள். ஆனால், இதுபற்றி அப்பாஸோ, எரும் அலியோ எதையும் தெரிவிக்கவில்லை.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X