Abbas: ஒரு காலத்தில் சாக்லேட் பாய்... இப்போ பைக் மெக்கானிக்... அப்பாஸுக்கா இப்படியொரு நிலை?
ஆக்லாந்து: 1996ம் ஆண்டு வெளியான காதல் தேசம் திரைப்படத்தில் ஹீரோவாக அறிமுகமானவர் அப்பாஸ்.
கதிர் இயக்கத்தில் வினீத், தபு ஆகியோருடன் நடித்திருந்த அப்பாஸ், முதல் படத்திலேயே ரசிகர்களால் கொண்டாடப்பட்டார்.
தொடர்ந்து பல படங்களில் ஹீரோவாக நடித்திருந்த அப்பாஸ், அதன் பின்னர் பீல்ட் அவுட் ஆகி சினிமாவில் இருந்தே விலகிவிட்டார்.
தற்போது நியூசிலாந்து நாட்டின் ஆக்லாந்து பகுதியில் தனது குடும்பத்தினருடன் வசித்து வரும் அப்பாஸ், பைக் மெக்கானிக்காக வேலை பார்த்து வருகிறாராம்.

பைக் மெக்கானிக் அப்பாஸ்:1996ம் ஆண்டில் கதிர் இயக்கத்தில் ஏஆர் ரஹ்மான் இசையில் வெளியான காதல் தேசம் திரைப்படம், ரசிகர்களிடம் மிகப் பெரிய வரவேற்பைப் பெற்றது. வினீத், தபு ஆகியோருடன் அப்பாஸும் ஹீரோவாக அறிமுகமான இப்படம் அவருக்கு சாக்லேட் பாய் என்ற இமேஜை கொடுத்தது. ஸ்டைலிஷான ஹேர் ஸ்டைல் என ஹேண்ட்ஸம் ஹீரோ மெட்டீரியலாக மாஸ் காட்டிய அப்பாஸுக்கு பேன்ஸ் அதிகமாகவே இருந்தனர்
இதனால் பேண்டசியான படங்களுக்கான ஹீரோவாக பல இயக்குநர்கள் அப்பாஸ்ஸை தான் டிக் செய்தனர். VIP, பூச்சூடவா, இனி எல்லாம் சுகமே, பூவேலி என பல படங்களில் பிஸியாக நடித்து வந்தார். இதனால் கோலிவுட்டின் முன்னணி நடிகராக அப்பாஸ் வலம் வருவார் என்ற எதிர்பார்க்கப்பட்ட நிலையில், பிரபலமான அதேவேகத்தில் மார்க்கெட் இல்லாமல் தடுமாறாத் தொடங்கினார். ஒருகட்டத்தில் மின்னலே படத்தில் செகண்ட் ஹீரோவாக நெகட்டிவ் ஷேடில் நடித்திருந்தார்.

பின்னர் சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் படையப்பா, கமலுடன் பம்மல் கே சம்பந்தம், சத்யராஜுடன் மலபார் போலீஸ், மம்முட்டியுடன் ஆனந்தம் படங்களிலும் நடித்திருந்தார். இதனிடையே, காதலுக்கு மரியாதை, ஜீன்ஸ் போன்ற படங்களில் ஹீரோவாக நடிக்கும் வாய்ப்பையும் தனது கவனக்குறைவால் மிஸ் செய்திருந்தார். இதன் காரணமாகவே சீக்கிரமாக திரையுலகில் இருந்து ஓரம்கட்டப்பட்டார்.
இதனையடுத்து தனது குடும்பத்துடன் நியூசிலாந்தின் ஆக்லாந்து நகரில் செட்டிலாகிவிட்டார் அப்பாஸ். சில தினங்களுக்கு யூடியூப் சேனலுக்கு பேட்டிக் கொடுத்திருந்த அப்பாஸ், கடந்த காலத்தை நினைக்கும் போது தற்கொலை செய்து கொள்ளும் எண்ணம் வந்ததாக அப்பாஸ் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது. அப்பாஸின் மனைவி சிறந்த ஆடை வடிவமைப்பாளராக இருந்தாலும் அவரோ தற்போது ஒரு பைக் மெக்கானிக்காக வேலை பார்த்துக்கொண்டு வாழ்கிறாராம். ஒரு காலத்தில் சாக்லேட் ஹீரோவாக இருந்த அப்பாஸ் நிலைமை இப்போ இப்படியாகிவிட்டதே என ரசிகர்கள் புலம்பி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











