Abbas: அட! நம்ம ‘காதல் தேசம்’ அப்பாஸா இது..? எப்படி இருந்த மனுஷன் இப்ப இப்படி ஆயிட்டாரே!

சென்னை: 1996ம் ஆண்டு வெளியான காதல் தேசம் படம் மூலம் ஹீரோவாக அறிமுகமானவர் அப்பாஸ்.

அதனைத் தொடர்ந்து பூச்சூடவா, படையப்பா, மின்னலே உள்ளிட்ட பல படங்களில் ஹீரோவாகவும் கெஸ்ட் ரோலிலும் நடித்துள்ளார்.

தற்போது நியூசிலாந்து நாட்டின் ஆக்லாந்து பகுதியில் தனது குடும்பத்தினருடன் வசித்து வருகிறாராம்.

இந்நிலையில், அவரது லேட்டஸ்ட் போட்டோ வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

 Abbas: The 90s leading actor Abbass latest photo trending now

அப்பாஸ் லேட்டஸ்ட் க்ளிக்:1996ல் கதிர் இயக்கிய காதல் தேசம் படம் மூலம் ஹீரோவாக அறிமுகமானவர் அப்பாஸ். விளம்பர மாடலாக வலம் வந்த அப்பாஸை இப்படத்தில் ஹீரோவாக்கினார் இயக்குநர் கதிர். வினீத், தபு ஆகியோருடன் நடித்த அப்பாஸ், ரசிகர்களால் சாக்லெட் ஹீரோவாக கொண்டாடப்பட்டார். இதனால் பேண்டசியான படங்களுக்கான ஹீரோவாக நடிக்க பல இயக்குநர்கள் அப்பாஸை தான் டிக் செய்தனர்.

தொடர்ந்து VIP, பூச்சூடவா, இனி எல்லாம் சுகமே, பூவேலி என பல படங்களில் நடித்தார். இதனால் கோலிவுட்டின் முன்னணி நடிகராக வலம் வருவார் என எதிர்பார்க்கப்பட்ட அப்பாஸ், திடீரென மார்க்கெட் இல்லாமல் தடுமாறாத் தொடங்கினார். ஒருகட்டத்தில் மின்னலே படத்தில் செகண்ட் ஹீரோவாகவும், சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் படையப்பா, கமலுடன் பம்மல் கே சம்பந்தம், சத்யராஜுடன் மலபார் போலீஸ், மம்முட்டியுடன் ஆனந்தம் போன்ற படங்களில் நடித்திருந்தார்.

அதன்பின்னர் விளம்பரங்களில் நடித்து வந்த அப்பாஸ், சினிமாவில் வாய்ப்பில்லாததால் வெளிநாட்டில் செட்டில் ஆகிவிட்டார். நியூசிலாந்தின் ஆக்லாந்து நகரில் தனது குடும்பத்தினருடன் செட்டிலான அப்பாஸ், தற்போது பைக் மெக்கானிக்காக வேலை பார்த்து வருகிறாராம். சமீபத்தில் கூட ஒரு பேட்டியில் பேசியிருந்த அப்பாஸ், கடந்த காலத்தை நினைக்கும் போது தற்கொலை செய்து கொள்ளும் எண்ணம் வந்ததாகக் கூறியிருந்தார்.

முன்னதாக அவருக்கு விபத்தில் எலும்பு முறிவு ஏற்பட்டு சர்ஜரி செய்யப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், தற்போது சென்னை வந்துள்ள அப்பாஸ், பிரபல சினிமா விமர்சகர் பரத்வாஜ் ரங்கனுடன் ஒரு நேர்காணலில் பங்கேற்றுள்ளார். அப்போது எடுக்கப்பட்ட போட்டோ டிவிட்டரில் பயங்கரமாக ட்ரெண்டாகி வருகிறது. அதில், அப்பாஸின் முகம் சோர்வாக இருந்தாலும் அந்த சாக்லெட் பாய் லுக் குறையவே இல்லை என ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

 Abbas: The 90s leading actor Abbass latest photo trending now

அதேபோல், விரைவில் சினிமாவில் இன்னொரு ரவுண்டு வர வேண்டும் எனவும் அவர்கள் அப்பாஸுக்கு வாழ்த்துத் தெரிவித்துள்ளனர். பரத்வாஜ் ரங்கனின் நேர்காணலில் அப்பாஸ் தனது பிளாஷ்பேக் குறித்து அதிகம் பேசியிருப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. அப்பாஸின் மனைவி சிறந்த ஆடை வடிவமைப்பாளராக இருந்தாலும், அவர் தற்போது பைக் மெக்கானிக்காக வேலை பார்ப்பது குறிப்பிடத்தக்கது.

காதலுக்கு மரியாதை, ஜீன்ஸ் போன்ற படங்களில் ஹீரோவாக நடிக்கும் வாய்ப்பை மிஸ் செய்த அப்பாஸ், இப்போது இப்படி ஆனது அவரது ரசிகர்களிடம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X