புதியதோர் உலகம் செய்வோம் படத்துக்கு அப்துல் கலாம் ஆலோசகர் பாராட்டு!

By Shankar

அப்துல் கலாமின் வழிகாட்டல்களின் அடிப்படையில் ஒரு புதிய படத்தை உருவாக்கியுள்ளார் ரஜினியின் நண்பரும் தயாரிப்பாளருமான நாகராஜன் ராஜா.

இந்தப் படத்துக்கு புதியதோர் உலகம் செய்வோம் என்று தலைப்பிட்டுள்ளார்.

லஞ்ச ஊழலை தடுத்து மாற்றத்தைக் கொண்டு வர முயற்சிக்கும் சிறுவர்களை மையப்படுத்தி இந்தப் படத்தை உருவாக்கியுள்ளார்கள்.

நித்தியானந்தம் இயக்கியுள்ள இந்தப் படத்துக்கு பிரவீன் இசையமைத்திருக்கிறார்.

அப்துல் கலாம் வழிகாட்டல்

அப்துல் கலாம் வழிகாட்டல்

இந்தப் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சமீபத்தில் நடந்தது. நிகழ்ச்சியில் நாகராஜன் ராஜா பேசுகையில், "அப்துல் கலாமின் எழுச்சிமிகு வழிகாட்டல்களை பின்பற்றி வருபவன் நான். அவரது வார்த்தைகள் மீது மிகுந்த மதிப்பு வைத்துள்ளேன். அந்த அடிப்படையில்தான் இந்த புதியதோர் உலகம் செய்வோம் படத்தை எடுத்துள்ளேன்.

லஞ்சத்தை ஒழிக்க

லஞ்சத்தை ஒழிக்க

லஞ்சத்தை ஒழிக்க வேண்டும் என்றால் இளைஞர்கள் தங்கள் வீட்டில் இருந்தே அதை தொடங்கவேண்டும் என்றும், அதன் மூலம் நாட்டில் குற்றங்கள் குறையும் என்றும் கலாம் சொன்னார். அதை மையப்படுத்தி, தொலைக்காட்சியில் சூப்பர் சிங்கர் போட்டியில் வெற்றி பெற்ற குழந்தைகளை வைத்து படத்தை எடுத்துள்ளோம்," என்றார்.

பொன்ராஜ்

பொன்ராஜ்

சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட அப்துல் கலாமின் ஆலோசகர் பொன்ராஜ் பேசியபோது, "இப்படத்தை நான் பார்த்தேன். முழுக்க முழுக்க இது ஜனரஞ்சகமான படம். படத்தில் உள்ள சிறப்பம்சங்களை அப்துல் கலாமிடம் சொல்லப் போகிறேன்.

கனவு

கனவு

இந்தப் படத்தைப் பார்த்துவிட்டு போகும் குழந்தைகள், தங்கள் வீட்டில் இருக்கும் பெரியவர்கள் செய்யும் தவறுகளை சுட்டிக்காட்டி தடுக்கும் அளவுக்கு காட்சிகளை எடுத்திருக்கிறார்கள்.

‘உறங்கும்போது வருவதல்ல கனவு; உன்னை உறங்கவிடாமல் செய்வதுதான் கனவு' என்று சொல்வார் அப்துல் கலாம்.

அனைவரும் பார்க்கணும்

அனைவரும் பார்க்கணும்

அதற்கேற்ப ஊழலை ஒழிக்க வேண்டும் என்ற லட்சியத்தில் இருந்து பின்வாங்கக் கூடாது என்ற மையக்கருத்து கொண்ட இப்படத்தைப் பார்க்கும் குழந்தைகள் அறிவுபூர்வமாக செயல்படுவார்கள். எல்லா தரப்பினரும் பார்க்கும் படமாக இது இருக்கும்," என்றார்.

வில்லன்

வில்லன்

இப்படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளவர் கமலா தியேட்டர் உரிமையாளர் கணேசன் என்பது குறிப்பிடத்தக்கது.,

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X