தமிழ் சினிமாவின் புது வில்லன்… ஹிந்தி நடிகரின் மகன்!

சென்னை: சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவர இருக்கும் திரைப்படம் ஹீரோ. இதில் தர்மேந்திராவின் மகன் அபய் தியோல் வில்லனாக நடித்துள்ளார். இப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா பிரம்மாண்டமாக நடைபெற்றது.

2005ம் ஆண்டு இந்தி திரையுலகில் "சோசா நா தா" என்ற படத்தின் மூலம் கலைத்துறையில் கால் பதித்தார் அபய் தியோல். இவர் பழம் பெரும் நடிகர் தர்மேந்திராவின் மகன் ஆவார். இவர் குடும்பமே கலைக்குடும்பம் என்று சொல்லலாம், தர்மேந்திரா, ஹேமமாலினி, சன்னி தியோல், பாபி தியோல் இவர்கள் அனைவரையும் தெரியாதவர்கள் பாலிவுட்டில் இருந்து இருக்க முடியாது.

Abhay deol is the villain in the movie Hero

இருந்தாலும் தனக்கென்று ஒரு இடம் வேண்டும் ஆசைப்பட்ட அபய் டியோல், பாலிவுட்டில் தற்போது கலக்கி வருகிறார். இதனால் இவருக்கு என்று ஒரு தனி ரசிகர் கூட்டமே உள்ளது. அபய் தியோல், சிறந்த நடிகருக்கான விருதை இரண்டு முறை பெற்றுள்ளார். ரான்ஜனா என்ற படத்தின் மூலம் பாலிவுட்டில் தனுஷ் கால் பதித்த போது அந்த படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் நடித்திருந்தார் அபய் டியோல்.

Abhay deol is the villain in the movie Hero

இவர் தற்போது தமிழில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதுவும் நம்ம சிவகார்த்தியேன் நடித்துள்ள ஹீரோ படத்தில் இவர் தான் வில்லனாம். இப்படத்திற்காக அவர் மிகவும் கஷ்டப்பட்டு தமிழ் கற்றுக்கொண்டு இருக்கிறாராம். ஒவ்வொரு வசனத்தையும் சூட்டிங் ஸ்பாட்டிற்கு வந்த பிறகும் கூட அதை படித்துப்பார்த்தும், எழுதி பார்த்தும் தன்னை தயார்ப்படுத்திக் கொண்டுள்ளார்.

Abhay deol is the villain in the movie Hero

இப்படத்திற்கான டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் இன்று நடைபெற்றது. இதில் பேசிய சிவகார்த்திகேயன் அபயுடன் நடித்தது நல்ல அனுபவமாக இருந்தது என்றார். இவர், பாலிவுட்டில் சாதித்ததைப் போன்று தமிழ் துறையில் சாதிக்க வேண்டும் என்று கூறினார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X