10 வயது சிறுமியை தங்கையாகத் தத்தெடுத்த அபி சரவணன்!

By Shankar

Recommended Video

ஜல்லிக்கட்டில் பலியான அண்ணனின் தங்கைக்கு அண்ணனாக மாறிய அபி சரவணன்

அலங்காநல்லூருக்கு அடுத்தபடியாக ஜல்லிக்கட்டுக்கு பெயர் பெற்ற கிராமம் பாலமேடு. இங்கு கடந்த ஜன-15 மாட்டுப் பொங்கலன்று அமர்க்களமாக ஜல்லிக்கட்டு நடந்தது. இந்த நிகழ்வின்போது அங்கு வேடிக்கை பார்க்க நின்றிருந்தவர்களை நோக்கி ஆவேசமாக சீறிப் பாய்ந்த ஒரு காளை முட்டியதில் திண்டுக்கல் மாவட்டம், சாணார்பட்டி கிராமத்தை சேர்ந்த காளிமுத்து (19) என்ற இளைஞர் மருத்துவமனை செல்லும் வழியிலேயே மரணம் அடைந்தார்.

இறுதிச் சடங்கிற்கு ஆதரவு தரவேண்டிய ஜல்லிக்கட்டு பேரவையோ விழா கமிட்டியோ அல்லது லட்சகணக்கில் கார் பைக் தங்க வெள்ளி நாணயங்களைப் பரிசாகத் தந்த உபயதார்களோ அவரது உடலைக் கொண்டு செல்ல ஆம்புலன்ஸ் வசதியை கூட செய்து தர முன்வரவில்லை. அவர் உடலை போஸ்ட்மாடர்ம் செய்து உரியவர்களிடம் ஒப்படைப்பதற்கு சில அரசு மருத்துவ ஊழியர்கள் லஞ்சம் கேட்ட அவலமும் நடந்தது.

Abhi Saravanan adopts 10 years old girl

இந்த நிலையில் அதே தினம் அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டை கொண்டாடிக்கொண்டு இருந்த நடிகர் அபிசரவணன் இந்த செய்தியைக் கேள்விப்பட்டு உடனடி காளிமுத்துவின் இறுதிச் சடங்கிற்கான உதவியாக ஜந்தாயிரம் ரூபாயை நேரில் சென்று தந்துவிட்டு, மறைந்த காளிமுத்துவின் உடலுக்கு அஞ்சலி செலுத்திவிட்டு திரும்பினார்.

மேலும் தனது அண்ணனை இழந்து படிப்பும் எதிர்காலமும் கேள்விக்குறியான நிலையில் உள்ள காளிமுத்துவின் தங்கை பத்து வயது சிறுமிக்கு இனி அண்ணன் ஸ்தானத்தில் இருந்து அவளின் படிப்புச் செலவை ஏற்றுக்கொண்டு படிப்பைத் தொடர உதவுவேன் என அறிவித்து நெகிழ வைத்துள்ளார் இந்த இளம் நடிகர்.

Abhi Saravanan adopts 10 years old girl

இதற்குமுன் விவசாயிகள் போராட்டத்தின்போது டெல்லியிலேயே தங்கி அவர்களுடன் போராட்டத்தில் கலந்துகொண்ட நடிகர் அபிசரவணன், தற்கொலை செய்துகொண்ட சில விவசாயிகளின் குடும்பங்களுக்கும் தன்னால் இயன்ற உதவியை செய்ததுடன், மற்ற சில நல்ல உள்ளங்களிடமும் இருந்து அவர்களது வாழ்வாதாரத்திற்கான நிதி உதவியையும் பெற்று தந்துள்ளார். இதுபோன்ற உதவிகளை தன்னால் இயன்றவரை தொடர்ந்து செய்வேன் என்றும் உறுதி கூறியுள்ளார் அபி சரவணன்.

Abhi Saravanan adopts 10 years old girl

குட்டிப்புலி, பட்டதாரி, சாகசம் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள அபி சரவணன், அடுத்து நான்கு புதிய படங்களில் நாயகனாக நடித்து வருகிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X