முடிவுக்கு வந்தது கொண்டாட்டம்.. பிக் பாஸ் டைட்டிலை ஆர்ப்பாட்டமாக வென்ற நடிகர்.. குவியும் வாழ்த்து!
ஐதராபாத்: தெலுங்கு பிக் பாஸ் டைட்டிலை பிரபல நடிகர் வென்றுள்ளார். அவருக்கு சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவி பரிசை வழங்கினார்.
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி சுவாரஸ்யமாகச் சென்று கொண்டிருக்கிறது.
நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் கமல், ஒவ்வொரு வாரமும் ரணகளப்படுத்தி வருகிறார்.

முடிவை நோக்கி
தமிழைப் போலவே, தெலுங்கு பிக் பாஸ் நிகழ்ச்சியும் சுவாரஸ்யமாக சென்று கொண்டிருந்தது. தமிழ் பிக் பாஸ், தொடங்குவதற்கு முன்பே தெலுங்கு பிக் பாஸ் நிகழ்ச்சி தொடங்கி விட்டது. நிகழ்ச்சியை பிரபல தெலுங்கு ஹீரோ, நாகார்ஜுனா ஆர்பாட்டமாகத் தொகுத்து வழங்கி வந்தார்.

அசத்தல் கிண்டல்
தெலுங்கு பிக் பாஸ் வீட்டில் இருந்த மோனல் கஜ்ஜாரும் போட்டியாளர் அகிலும் காதலிப்பதாகக் கூறப்பட்டது. இதனால் நிகழ்ச்சி சூடு பிடித்தது. இந்நிலையில் மோனல் கஜ்ஜார், பிக் பாஸ் வீட்டியில் இருந்து சில வாரங்களுக்கு முன்பே வெளியேறி விடுவார் என ரசிகர்கள் எதிர்பார்த்தனர். ஆனால் கடந்த வாரம்தான் அவர் வெளியேற்றப்பட்டார்.

வெளியேறிய மோனல்
தெலுங்கு பிக் பாஸ் வீட்டில் இருந்த ஒரே மோனல் கஜ்ஜாரும் போட்டியாளர் அகிலும் காதலிப்பதாகக் கூறப்பட்டது. இதனால் நிகழ்ச்சி சூடு பிடித்தது. இந்நிலையில் மோனல் கஜ்ஜார், பிக் பாஸ் வீட்டியில் இருந்து சில வாரங்களுக்கு முன்பே வெளியேறி விடுவார் என ரசிகர்கள் எதிர்பார்த்தனர். ஆனால் கடந்த வாரம்தான் அவர் வெளியேற்றப்பட்டார்.

பிரமாண்ட முறை
இந்நிலையில் பிக் பாஸ் பைனல் லிஸ்ட்டில் ஐந்து பேர் இருந்தனர். இதில் டைட்டிலை யார் வெல்வார்கள் என்று அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்தனர். அபிஜித் வெல்வார் என்று பலரும் கணித்திருந்தனர். இந்நிலையில, 106 நாட்கள் நடந்த இந்த நிகழ்ச்சியின் ஃபைனல் பிரமாண்ட முறையில் நேற்று நடைபெற்றது.

பிக் பாஸ் வின்னர்
இதில் நடிகை பிரணிதா சுபாஷ், மெஹ்ரின், ராய் லட்சுமி ஆகியோரின் நடன நிகழ்ச்சிகள் நடந்தது. இசை அமைப்பாளர் தமனும் கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியில் பிக் பாஸ் வின்னராக பலத்த ஆரவாரத்துடன், நடிகர் அபிஜித் அறிவிக்கப்பட்டார்.

மெகா ஸ்டார் சிரஞ்சீவி
ரசிகர்களின் வாக்குகள் மூலம் அவர் வெற்றியாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இரண்டாவது இடத்தை அகில் பிடித்தார். அவருக்கு பிரபல தெலுங்கு ஹீரோ, மெகா ஸ்டார் சிரஞ்சீவி கையால் பிக் பாஸ் கோப்பையையும் பரிசு தொகை ரூ.25 லட்சத்தையும் வழங்கினார்.

லைஃப் இஸ் பியூட்டிபுல்
பிக் பாஸ் டைட்டிலை வென்றுள்ள அபிஜித், தெலுங்கில் சேகர் காமுலா இயக்கிய லைஃப் இஸ் பியூட்டிபுல் என்ற படம் மூலம் நடிகராக அறிமுகமானவர். அடுத்து ராம் லீலா, மிர்ச்சி லண்டி குர்ராடு உட்பட சில படங்களில் நடித்துள்ளார். கடைசியாக 2015 ஆம் ஆண்டு வெளியான அரேரே என்ற படத்தில் நடித்திருந்தார்.


Click it and Unblock the Notifications











