பாலியல் புகாரில் சிக்கிவிட்டு திமிராக பேசும் பாடகர், நடிகர்
மும்பை: பாலியல் புகார் சுமத்தப்பட்டுள்ள பாடகர் அபிஜித் பட்டாச்சார்யாவும், நடிகர் ஆலோக் நாத்தும் திமிர்தனமாக பேசி வருகிறார்கள்.
தனுஸ்ரீ தத்தாவை அடுத்து பல நடிகைகள் தங்களுக்கு நடந்த பாலியல் கொடுமைகள் பற்றி தைரியமாக பேசத் துவங்கியுள்ளனர். பாலிவுட்டில் பாலியல் புகார்கள் அதிகரித்துக் கொண்டிருக்கிறது.
இந்நிலையில் பாடகர் அபிஜித் பட்டாச்சார்யாவின் திமிர் பேச்சு பலரையும் எரிச்சல் அடைய செய்துள்ளது.
[ வட சென்னை அன்பு யார் தெரியுமா?: இன்று மாலை ஆறு மணிவரை காத்திருங்க தெரிஞ்சுக்கலாம் ]

பாலியல் தொல்லை
அபிஜித் மீது முன்னாள் விமான பணிப்பெண் ஒருவர் பாலியல் புகார் தெரிவித்துள்ளார். அந்த புகாரை மறுத்துள்ள அபிஜித் ரொம்பவே திமிராக பேசியுள்ளார். அதாவது குண்டாக, அசிங்கமாக இருக்கும் பெண்கள் தான் ஆண்கள் மீது பாலியல் புகார் கூறுவார்கள் என்று தெரிவித்துள்ளார். 60 வயதாகும் அவர் தான் 20 ஆண்டுகளுக்கு முன்பு பிறக்கவே இல்லை என்று அகராதி வேறு. அவர் அந்த பெண்ணுக்கு 20 ஆண்டுகளுக்கு முன்பு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.
நினைப்பு
செய்வதையும் செய்துவிட்டு கொஞ்சம் கூட மனசாட்சி இல்லாமல் பெண்களை தரக்குறைவாக பேசியுள்ளார் அபிஜித். இவரை போன்றவர்கள் தான் தவறான முன்னுதாரணமாக இருக்கிறார்கள். அவரின் பதிலை கேட்ட ரசிகர்கள் கோபம் அடைந்துள்ளனர். நீங்கள் பெரிய மன்மத ராசா என்று நினைப்பாக்கும். அடுத்தவர்களின் அழகை குறை கூற என்று விளாசியுள்ளனர்.

பலாத்காரம்
நடிகர் ஆலோக் நாத் தன்னை பலாத்காரம் செய்துவிட்டார் என்று பெண் இயக்குனரும், தயாரிப்பாளருமான வின்டா நந்தா தெரிவித்துள்ளார். அதற்கு ஆலோக் நாத்தோ பலாத்காரம் நடந்திருக்கலாம். அதை வேறு யாராவது செய்திருக்கலாம் என்று திமிராக பேசியுள்ளார். அப்பா கதாபாத்திரங்களில் நடித்து வரும் அவர் தனக்கு மகளாக நடித்தவருக்கு கூட பாலியல் தொல்லை கொடுத்திருக்கிறார்.

கேலி
பெண்களிடம் கேவலமாக நடந்துவிட்டு இந்த அபிஜித் மற்றும் ஆலோக் நாத் எகத்தாளமாக பேசி வருகிறார்கள். தவறு செய்துவிட்டோம் என்று வருந்தாமல் நக்கலும், நையாண்டியுமாக பேசிக் கொண்டிருக்கிறார்கள். ஆலோக் நாத் மீது தினம் தினம் ஒரு பெண் பாலியல் புகார் தெரிவித்து வருகிறார். ஆனால் அவர் அதற்காக வருந்துவதாக தெரியவில்லை. பெண்களிடம் சில்மிஷம் செய்வது அவரது உரிமை என்பது போன்று பேசுகிறார்.


Click it and Unblock the Notifications











