தினமும் 15 நிமிடம் முகத்தை தேய் தேய்னு தேய்த்து கழுவிய கார்த்தி வில்லன்: ஏன் தெரியுமா?

By Siva

சென்னை: தீரன் அதிகாரம் ஒன்று ஷூட்டிங்கின்போது தினமும் முகத்தை கழுவ 15 நிமிடங்கள் ஆனதாக வில்லன் நடிகர் அபிமன்யு தெரிவித்துள்ளார்.

வினோத் இயக்கத்தில் கார்த்தி போலீஸ் அதிகாரியாக நடித்த படம் தீரன் அதிகாரம் ஒன்று. நீண்ட நாட்கள் கழித்து கார்த்தியின் படத்திற்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

படத்தில் வில்லனாக நடித்த அபிமன்யு சிங் கூறியிருப்பதாவது,

வினோத்

வினோத்

இயக்குனர் வினோத் என்னிடம் கதை சொன்னபோது எனக்கு பிடித்திருந்தது. தீரன் உண்மை கதையை மையமாக வைத்து எடுக்கப்படுகிறது என்பதை நினைத்தபோது மகிழ்ச்சியாக இருந்தது.

வில்லன்

வில்லன்

என் கதாபாத்திரம் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. ரசித்து ரசித்து நடித்தேன். கார்த்தி ஒரு அருமையான மனிதர். மேலும் மேலும் சிறப்பாக நடிக்க வேண்டும் என்று நினைப்பார்.

நடிப்பு

நடிப்பு

கார்த்தி தனது நடிப்பை மேம்படுத்துவதில் அதிக கவனம் செலுத்துவார். சிறப்பான நடிப்பை வெளிப்படுத்துவார். ஒழுக்கமானவர், கடுமையான உழைப்பாளி அதே சமயம் அனைவரிடமும் எளிதில் பழகுவார்.

அடக்கம்

அடக்கம்

இயக்குனர் வினோத் மிகவும் அடக்கமான மனிதர். அவர் தன் பட நடிகர்கள் அனைவரிடமும் பவ்யமாக பேசுவார். உண்மையாக நடந்து கொள்ளும் அவரின் குணம் எனக்கு பிடிக்கும்.

குளியல்

குளியல்

தீரன் பட ஷூட்டிங் நடந்த இடத்தில் தூசியாக இருக்கும். ஷூட்டிங் முடிந்து நாள் இறுதியில் குளிக்கும்போது முகத்தில் உள்ள தூசியை தேய்த்து கழுவ மட்டும் 15 நிமிடங்கள் ஆகும். படத்தின் வெற்றியை பார்த்ததும் அந்த கஷ்டம் எல்லாம் மறந்துவிட்டது என்றார் அபிமன்யு.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X