அபிநந்தனை கலாய்ச்சீங்கல்ல, வேணும்: பாகிஸ்தானுக்கு ஜெனிலியா கணவர் நச் ட்வீட்
மும்பை: உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் அணியை தோற்கடித்த இந்திய அணிக்கு திரையுலக பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகள் இங்கிலாந்தில் நடந்து வருகிறது. நேற்று இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதிய ஆட்டம் நடைபெற்றது. ரோஹித் சர்மா வெளுத்து வாங்கி 140 ரன்கள் எடுத்து அணியின் வெற்றிக்கு வழி வகுத்தார்.
இந்திய ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்தது போன்றே இந்திய அணி வெற்றி பெற்றது. இந்த போட்டியை பார்க்க பல இந்தியர்கள் இங்கிலாந்து சென்றிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. நம்ம சிவகார்த்திகேயன் மற்றும் அனிருத்தும் போட்டியை நேரில் கண்டு ரசித்தனர். இந்நிலையில் பாகிஸ்தான் அணியை வென்ற கோஹ்லி தலைமையிலான இந்திய அணிக்கு திரையுலக பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
சல்மான் கான்
பாரத அணிக்கு பாரத்தின் வாழ்த்துக்கள் என்று சல்மான் கான் வாழ்த்தியுள்ளார். முன்னதாக கிரிக்கெட் வீரர்கள் தோனி, ஷிகர் தவான், கேதர் ஜாதவ் உள்ளிட்டோர் நாட்டிங்ஹாமில் உள்ள தியேட்டர் ஒன்றில் சல்மான் கான் நடித்த பாரத் படத்தை பார்த்து ரசித்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
ரித்தேஷ்
இந்திய அணி பாகிஸ்தான் அணியை தோற்கடித்ததை பார்த்த பாலிவுட் நடிகர் ரித்தேஷ் தேஷ்முக் அபிநந்தன் இந்துஸ்தான் என்று ட்வீட் செய்துள்ளார். விமானப்படை வீரர் அபிநந்தனை கிண்டல் செய்து பாகிஸ்தான் வீடியோ வெளியிட்டிருந்தது. இந்நிலையில் தான் ரித்தேஷ் அப்படி ட்வீட் செய்து பாகிஸ்தானை கலாய்த்துள்ளார்.
அனில் கபூர்
அனைத்து கண்களும் டிவியின் மீது தான். அருமையான போட்டி, சிறப்பான வெற்றி. இந்திய அணிக்கு வாழ்த்துக்கள் என்று ட்வீட் செய்துள்ளார் பாலிவுட் நடிகர் அனில் கபூர். அவர் தெரிவித்தது போன்று நேற்று இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் டிவி முன்பு தான் இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
டாப்ஸி
இந்தியா, பாகிஸ்தான் அணிகள் மோதும் கிரிக்கெட் போட்டியை இரு நாட்டவரும் வெறும் போட்டியாக மட்டும் பார்ப்பது இல்லை. இந்நிலையில் நேற்றைய போட்டியை டிவியில் பார்த்த இந்தியர்கள் பலரும் டாப்ஸியை போன்று தான் கடவுளே, கடவுளே என்று பிரார்த்தனை செய்து கொண்டிருந்தனர்.


Click it and Unblock the Notifications











