மாற்றாந்தந்தை தவறான எண்ணத்தில் தொட்டாரா?: நடிகையின் மகள் விளக்கம்
மும்பை: தனது மாற்றான் தந்தையான நடிகர் அபிநவ் கோஹ்லி தன்னிடம் மோசமாக பேசியதாக நடிகை ஸ்வேதா திவாரியின் மகள் பாலக் தெரிவித்துள்ளார்.
இந்தி தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வரும் ஸ்வேதா திவாரி நடிகர் ராஜா சவுத்ரியை திருமணம் செய்து பாலக் என்ற மகளுக்கு தாயானார். ராஜாவை பிரிந்த ஸ்வேதா தொலைக்காட்சி நடிகர் அபிநவ் கோஹ்லியை 3 ஆண்டுகள் காதலித்து திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு ஒரு மகன் உள்ளார்.

இந்நிலையில் அபிநவ் பாலக் திவாரிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் எழுந்தது. இது குறித்து பாலக் சமூக வலைதளத்தில் கூறியிருப்பதாவது,
அபிநவ் கோஹ்லி எனக்கு பாலியல் தொல்லை கொடுத்தது இல்லை. மேலும் தவறான எண்ணத்தில் அவர் என்னை தொட்டதும் இல்லை. ஆனால் தொடர்ந்து மோசமாக பேசியுள்ளார். அதன் தாக்கம் எனக்கும், என் அம்மாவுக்கும் தான் தெரியும். கோஹ்லி பேசியதை வேறு எந்த பெண்ணாவது கேட்டால் மிகவும் வெட்கப்படுவார், வேதனைப்படுவார்.

பெண்ணின் கண்ணியத்தை கேள்விக்குறியாக்கும் வகையில் கோஹ்லி பேசியிருக்கிறார். அதுவும் ஒரு தந்தை பேசியிருக்கிறார் என்பது தான் வேதனை. சமூக வலைதளம் மற்றும் செய்திகளில் படித்து தான் எங்களின் பிரச்சனை குறித்து மற்றவர்களுக்கு தெரியும். என் அம்மா மிகவும் மரியாதைக்குரிய பெண் என்பதை பெருமையுடன் தெரிவித்துக் கொள்கிறேன் என்று பாலக் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே அபிநவ் கோஹ்லி தனது மகள் பாலக்கை அடித்ததாக ஸ்வேதா திவாரி மும்பை போலீசில் புகார் அளித்தார். அபிநவ் மது அருந்திவிட்டு ஸ்வேதா மற்றும் பாலக்கை அடித்து கொடுமைப்படுத்தியதாக புகார் எழுந்துள்ளது.
அபிநவ் கோஹ்லி, ஸ்வேதா இடையே கடந்த 2 ஆண்டுகளாக பிரச்சனையாக உள்ளது என்று அவர்களுக்கு நெருக்கமானவர்கள் தெரிவித்துள்ளனர்.


Click it and Unblock the Notifications











