தனுஷ் பாட்டுக்கு அம்மாவுடன் சூப்பர் டான்ஸ்.. அபிநய் எவ்வளவு ஜாலியா இருந்திருக்காரு.. ச்ச இப்படி இறந்துட்டாரே
சென்னை: துள்ளுவதோ இளமை படத்தில் அறிமுகமான அபிநய் நடிப்பு வாய்ப்புகள் குறைந்த பிறகு டப்பிங்கும் பேசிக்கொண்டிருந்தார். ஒருகட்டத்தில் அதுவும் இல்லாமல் போக சினிமாவிலிருந்து ஒட்டுமொத்தமாக ஒதுங்கிவிட்டார். மேலும் கல்லீரல் பிரச்னையாலும் பாதிக்கப்பட்டிருந்த அவர் சில நாட்களுக்கு முன்பு பரிதாபமாக உயிரிழந்தார். அவரது உயிரிழப்பு அனைவரையுமே சோகத்தில் ஆழ்த்தியது.
மலையாள நடிகை ராதாமணியின் மகனான அபிநய் துள்ளுவதோ இளமை படத்தில் நடித்து நடிப்பு பயணத்தை ஆரம்பித்தது அனைவருமே அறிந்ததுதான். அழகு, திறமை இருந்தாலும் ஏனோ அவரால் சினிமாவில் வெல்ல முடியவில்லை. அவருக்கு பட வாய்ப்புகள் கிடைத்தாலும் பெரிய வெற்றியையோ, திருப்புமுனையையோ தரவில்லை. ஆனாலும் அவர் விடாமல் திரைத்துறையில் போராடிகொண்டுதான் இருந்தார்.
விளம்பர படங்கள், டப்பிங்: வெள்ளித்திரையில் வாய்ப்புகள் வராவிட்டாலும் த்ரீ ரோஸஸ் உள்ளிட்ட விளம்பர படங்களில் வாய்ப்பு கிடைத்தது. அவ்வப்போது சினிமாவில் சின்ன சின்ன ரோல்கள் கிடைத்தன. இவை ஒருபக்கம் இருக்க மறுபக்கம் டப்பிங்கும் பேசிக்கொண்டிருந்தார். துப்பாக்கி படத்தில் வில்லன் வித்யூத் ஜம்வாலுக்கு பின்னணி குரல் கொடுத்தது அபிநய்தான் என்பது நினைவுகூரத்தக்கது. அதேபோல் பையா படத்திலும் டப்பிங் பேசியிருந்தார்.

உதவிய பாலா: ஒருகட்டத்தில் அத்தனை வாய்ப்புகளும் அவருக்கு வற்றி போயின. போதாக்குறைக்கு கல்லீரல் பிரச்னையும் வந்தது. வறுமையும், நோயும் அவரை ஆட்கொண்ட சமயத்தில்தான், ஆளே உருக்குலைந்து போன ஒரு புகைப்படமும், வீடியோவும் வெளியானது. அதனைப் பார்த்து பதறியடித்து கலக்கப்போவது யாரு பாலா நேரடியாக சென்று அவரை சந்தித்து உதவி செய்து ஆறுதல் கூறிவிட்டு வந்தார். பாலா உதவி செய்ததை அடுத்து திரைத்துறையிலிருந்து வேறு சிலரும் உதவி செய்தார்கள்.
அபிநய்க்கு தெம்பு: அதிலிருந்து மீண்டும் அபிநய்க்கு கொஞ்சம் தெம்பு வர ஆரம்பித்தது. அதன் காரணமாக யூடியூப் சேனல்களில் பேட்டி கொடுப்பது, திரைப்பட விழாக்களில் கலந்துகொள்வது என வெளியுலகத்துக்கு வரவும் செய்தார். எப்படியாவஹ்டு உடல்நலம் தேறி, தன்னை ஒதுக்கிய இதே சினிமாவில் மீண்டும் ஒரு ரவுண்டு வர வேண்டும் என திட்டவட்டமாக இருந்தார். ஆனால் நாளுக்கு நாள் அவருடைய உடல்நிலை மோசமடையத்தான் செய்தது.
உயிரிழந்த அபிநய்: சூழல் இப்படி இருக்க சில நாட்களுக்கு முன்பு தான் குடியிருந்த வீட்டில் துணைக்கு யாருமே இல்லாதபோது பரிதாபமாக உயிரிழந்தார். செய்தியை கேள்விப்பட்டதும் பாலா நேராக சென்று இறுதி சடங்குக்குரிய அத்தனை ஏற்பாடுகளையும் கவனித்துக்கொண்டார். அபிநய்யின் உறவினர்கள் யாருமே வரவில்லை என்பது மேற்கொண்டு அவரது நிலைமையை நினைத்து கலங்க செய்தது.
ஜாலியான வீடியோ: இந்நிலையில் அவர் தொடர்பான வீடியோ ஒன்று ட்ரெண்டாகியிருக்கிறது. அதாவது 3 படத்தில் வரும் ஒய் திஸ் கொலவெறி டி பாடலுக்கு சில வருடங்கள் முன்பு தனது தாய் ராதாமணியுடன் நடனம் ஆடிய வீடியோதான் அது. அந்த வீடியோவில் இரண்டு பேருமே செம ஜாலியாக நடனமாடியிருக்கிறார்கள். தற்போது இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் எவ்வளவு ஜாலியாக அம்மாவோடு இருந்திருக்கிறார். அவரது இறப்பு இப்படியா அமைய வேண்டும் என்று கலங்கியபடி கமெண்ட்ஸ் செய்கின்றனர்.


Click it and Unblock the Notifications











