தனுஷின் ஷமிதாப் மூலம் பாலிவுட் போகும் அபிநயா
நடிகை அபிநயாவிற்கு தனுஷின் இந்திப் படமான ஷமிதாப்பில் நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது. இது அவருடைய முதல் இந்திப் படம்.
நாடோடிகள் படத்தில் அறிமுகமானவர் அபிநயா. மாற்றுத் திறனாளி நடிகை. அதன் பிறகு ஈசன் படத்தில் நடித்தார். இங்கு போதிய வாய்ப்புகள் இல்லாமல் மலையாள படங்களில் நடிக்கத் தொடங்கினார். இப்போது பூஜை படத்தின் மூலம் மீண்டும் தமிழுக்கு வந்துள்ளார்.
தமிழில் மேலும் பல படங்களில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளாராம். இப்போது பாலிவுட் படவாய்ப்பும் வந்துள்ளது.

ஷமிதாப்பில் அபிநயா
ஷமிதாப்பில் அபிநயாவுக்கு முக்கியமான வேடம். அவர் சம்பந்தப்பட்ட காட்சிகள் மும்பையில் படமாக்கப்பட்டதாக அவருடைய தந்தை கூறியுள்ளார்.

தனுஷ் உடன் நடனம்
அபிநயாவுக்கு தனுஷுடன் ஒரு பாடல் காட்சி உள்ளது. அதனை விரைவில் படமாக்க உள்ளனர். பால்கி இயக்கும் ஷமிதாப்பில் தனுஷுடன் அமிதாப், அக்ஷரா நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.

விஞ்ஞானியாக அபிநயா
அபிநயா தற்போது ஜெயம் ரவியின் தனி ஒருவன் படத்தில் விஞ்ஞானியாகவும், ஹரியின் பூஜையில் விஷாலின் முறைப்பெண்ணாகவும் நடித்து வருகிறார். இதுதவிர வேறு இரு படங்களுக்கும் அவர் கால்ஷீட் தந்துள்ளார்.

மலையாளத்தில் அபிநயா
மலையாளத்தில் ஃபஹத் பாசிலுடன் 'ஒன் பை டூ' படத்திலும், தமிழில் மீராகதிரவன் இயக்கும் 'விழித்திரு' படத்திலும் நடித்திருக்கிறார் அபிநயா.


Click it and Unblock the Notifications











