Mark Antony: நாடோடிகள் அபிநயாவ ஞாபகமிருக்கா.. மார்க் ஆண்டனி படத்துல சும்மா மிரட்டியிருக்காங்க..!

சென்னை: காது கேட்கவில்லை என்றாலும் வாய் பேச முடியவில்லை என்றாலும் தனது நடிப்புத் திறமையால் ஒட்டுமொத்த ரசிகர்களையும் தனது நடிப்பை பற்றி பேச வைத்து வருபவர் நடிகை அபிநயா.

சசிகுமார் நடித்த நாடோடிகள் படத்தின் மூலம் அறிமுகமானவர். சூர்யா நடித்த ஏழாம் அறிவு திரைப்படத்தில் போதி தர்மருக்கு மனைவியாக நடித்திருப்பார். வீரம், தனி ஒருவன் உள்ளிட்ட தமிழ் படங்களில் நடித்துள்ள அபிநயா விஷால் நடிப்பில் இன்று வெளியான மார்ட் ஆண்டனி திரைப்படத்தில் விஷாலுக்கு ஜோடியாகவும் அம்மாவாகவும் நடித்து அசத்தியுள்ளார்.

Abhinaya shares Mark Antony shooting spot stills

மார்க் ஆண்டனியில் அபிநயா: இந்நிலையில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நடிகை அபிநயா, மார்க் ஆண்டனி படத்தின் ஷூட்டிங்கின் போது எடுத்துக்கொண்ட புகைப்படங்களை தற்போது அடுக்கியுள்ளார். தமிழ் சினிமாவில் பீரியட் போர்ஷனுக்கு ஒரு நல்ல நடிப்பை வெளிப்படுத்தக்கூடிய நடிகை தேவை என்றால் உடனடியாக அபிநயாவை டிக் செய்து விடுகின்றனர்.

Abhinaya shares Mark Antony shooting spot stills

விஷால் மற்றும் எஸ்.ஜே சூர்யாவுடன் நடித்து அனுப்பவும் மிகவும் அருமையாக இருந்தது என தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். மார்ட் ஆண்டனி மையக் கருவே அபிநயாவின் அம்மா கதாபாத்திரம் தான் என்பதால் படத்தைப் பார்த்த ரசிகர்கள் உங்கள் நடிப்பு சூப்பர், தொடர்ந்து தமிழ் படங்களில் நடியுங்கள் என பாராட்டி வருகின்றனர்.

Abhinaya shares Mark Antony shooting spot stills

ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படங்கள் வெளியீடு: நடிகர் விஷாலுடன் ஏற்கனவே பூஜை படத்தில் இணைந்து நடித்த அபிநயா தற்போது மார்க் ஆண்டனி திரைப்படத்திலும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது. முன்னதாக விஷாலுடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை வெளியிட்ட அபிநயா நீங்கள்தான் என்னுடைய ட்ரீம் ஹீரோ உங்களுடன் இணைந்து நடித்தது ரொம்பவே சந்தோஷம் எனக்கு குறிப்பிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

Abhinaya shares Mark Antony shooting spot stills

மார்க் ஆண்டனி திரைப்படத்தில் ஹீரோயின் வித்து வர்மாவை விட அபிநயாவுக்கு தான் ஸ்டாப் அதிகம் என ரசிகர்கள் கமெண்ட் போட்டு வருகின்றனர். தமிழ் படங்களில் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னட மொழி படங்களிலும் கிடைக்கும் வாய்ப்புகளை பயன்படுத்தி நடித்து வருகிறார் அபிநயா.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X