twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    அபிராமி எப்படிப்பட்டவர்?: தல பட நடிகை சொல்வதை நம்புவதா, வேண்டாமா?

    By Siva
    |

    சென்னை: பிக் பாஸ் 3 போட்டியாளர் அபிராமி பற்றி ஷ்ரத்தா ஸ்ரீநாத் கருத்து தெரிவித்துள்ளார்.

    ஹெச். வினோத் இயக்கத்தில் அஜித், வித்யா பாலன், ஷ்ரத்தா ஸ்ரீநாத் உள்ளிட்டோர் நடித்துள்ள நேர்கொண்ட பார்வை படம் வரும் 8ம் தேதி ரிலீஸாக உள்ளது. அந்த படத்தில் நீதிக்காக போராடும் மூன்று பெண்களில் ஒருவராக நடித்துள்ளார் அபிராமி.

    ஆம், பிக் பாஸ் 3 வீட்டில் இருக்கும் அதே அபிராமி தான்.

    அபிராமி

    அபிராமி

    அபிராமி பிக் பாஸ் வீட்டிற்கு சென்றபோது தல படத்தில் நடித்த பெண் என்று ரசிகர்கள் அவர் மீது மரியாதை வைத்திருந்தனர். ஆனால் முதல் நாளே கவின் மீது காதல் என்று கூறி ரசிகர்களை வியக்க வைத்தார். மேலும் அவர் நடந்து கொள்ளும் விதத்தை பார்த்த அஜித் ரசிகர்கள் அய்யோ இந்த பொண்ணா நம்ம தல படத்தில் நடித்துள்ளார் என்று நொந்து கொண்டிருக்கிறார்கள்.

    வெறுப்பு

    வெறுப்பு

    பிக் பாஸ் போட்டியாளர்களில் சாக்ஷியை மட்டும் அல்ல அபிராமியையும் பார்வையாளர்கள் பலருக்கும் பிடிக்கவில்லை. அபிராமி பலமுறை நாமினேட் செய்யப்பட்டும் தப்பித்துவிட்டார். சக போட்டியாளர்களும் அபிராமி மீது அதிருப்தியில் தான் உள்ளனர். ஒரே வீட்டில் இருப்பதால் வேறு வழியில்லாமல் பொறுத்துக் கொண்டிருக்கிறார்கள்.

    வாழ்த்து

    வாழ்த்து

    நாட்கள் செல்லச் செல்ல அபிராமி நல்லவிதமாக மாறி வருவதாகவும் பார்வையாளர்கள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் ஷ்ரத்தா ஸ்ரீநாத்திடம் அபிராமி பற்றி கேட்கப்பட்டது. அதற்கு அவர், நான் பிக் பாஸ் நிகழ்ச்சி பார்ப்பது இல்லை. ஆனால் அபிராமியை இன்ஸ்டாகிராமில் பின் தொடர்கிறேன். எனக்கு தெரிந்த வரை அபிராமி ஒரு சந்தோஷமான ஆள். ஏதாவது அநீதி நடந்தால் தைரியமாக பேசுவார். ஆனால் பிக் பாஸ் நிகழ்ச்சியில் என்ன நடக்கிறது என்று எனக்கு தெரியாது என்றார்.

    முகென் ராவ்

    முகென் ராவ்

    அபிராமி சக போட்டியாளரான முகென் ராவுடன் நட்பாக பழகி வருகிறார். முகென் ரொம்ப உண்மையாக இருக்கிறார். இந்த மாதிரி ஒரு நண்பன் கிடைப்பது எளிது அல்ல. அதனால் அவரை அவமதித்து விட வேண்டாம். இந்த நட்பு வாழ்நாள் முழுவதும் தொடரும் என்று பார்வையாளர்கள் அபிராமிக்கு புத்திமதி தெரிவித்துள்ளனர்.

    English summary
    Shraddha Srinath said in an interview that her Nerkonda Paarvai co-star cum Bigg Boss 3 contestant Abhirami is a happy person.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X