பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியே வந்தவுடன் மோகன் அப்பாவை சந்தித்த அபிராமி
சென்னை: பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியே வந்த பிறகு அபிராமி மோகன் வைத்யாவை சந்தித்து பேசியுள்ளார்.
பிக் பாஸ் 3 வீட்டில் இருந்த அபிராமி வெளியேற்றப்பட்டார். சாக்ஷியை போன்றே பிக் பாஸ் வீட்டிற்கு சென்று பெயரை கெடுத்துக் கொண்டார் அபிராமி. முதல் நாளே கவின் மீது கிரஷ் என்று கூறி பார்வையாளர்களை அதிர வைத்தவர் அபிராமி.

அபிராமி மோகன் வைத்யாவை சந்தித்து பேசியுள்ளார். அப்பொழுது எடுக்கப்பட்ட புகைப்படங்களை ட்விட்டரில் வெளியிட்டு மோகன் அப்பாவுக்கு நன்றி என்று தெரிவித்துள்ளார். பிக் பாஸ் வீட்டில் இருந்தபோது நான் உங்கள் அனைவருக்கும் அப்பா என்று கூறி மோகன் வைத்யா பெண் போட்டியாளர்களை ஓடி, ஓடி கட்டிப்பிடித்ததை பார்வையாளர்களால் அவ்வளவு சீக்கிரத்தில் மறக்க முடியாது.
வெளியே வந்த மோகன் வைத்யாவிடம் கட்டிப்பிடி வைத்தியம் குறித்து கேட்கப்பட்டது. அதற்கு அவரோ நான் என்ன அந்த அளவுக்கா மோசமாக நடந்து கொண்டேன், இல்லை என்று கூறி வருத்தப்பட்டார். அவர் சென்ற பிறகு சாண்டி அவரை போன்றே வேடம் அணிந்து பெண் போட்டியாளர்களை விரட்டி, விரட்டி கட்டிப்பிடித்து கிண்டல் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

அபிராமி பிக் பாஸ் வீட்டில் இருந்தபோது நேர்கொண்ட பார்வை படம் ரிலீஸானது. இதையடுத்து அவர் நேற்று மாலை தியேட்டருக்கு சென்று நேர்கொண்ட பார்வை படத்தை பார்த்துள்ளார். அந்த படத்தில் அபிராமி ஃபமிதா பானுவாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

அபிராமியை தியேட்டரில் பார்த்த ரசிகர்கள் அவருடன் சேர்ந்து புகைப்படம் எடுத்துள்ளனர். தனக்கு அமோக ஆதரவு அளித்த ரசிகர்கள் அனைவருக்கும் நன்றி தெரிவித்துள்ளார் அபி.
நேர்கொண்ட பார்வை படத்திற்கு அமோக வரவேற்பு கிடைத்துள்ளதை பார்த்து அவர் மகிழ்ச்சியில் உள்ளார். அது மட்டும் அல்ல பிக் பாஸ் வீட்டில் இருந்து கிளம்பியபோது அபிராமி கமல் ஹாஸனுடன் சேர்ந்து எடுத்துக் கொண்ட புகைப்படம் அழகாக வந்துள்ளதை பார்த்தும் அவர் குஷியில் உள்ளார்.
பிக் பாஸ் நிகழ்ச்சியால் தனது கெரியர் நிச்சயம் பிக்கப் ஆகும் என்று நம்புகிறார் அபிராமி. பிக் பாஸ் உதவுகிறதோ இல்லையோ நேர்கொண்ட பார்வை நிச்சயம் உதவும் என்று நம்பலாம்.


Click it and Unblock the Notifications











