twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    'பெரிய நடிகர்கள் படம் ரெண்டு மூணு வாரம்தான் ஓடுது.. மத்த நேரங்கள்ல படங்களுக்கு எங்கே போறது?'

    By Shankar
    |

    Abhirami Ramanathan exposes the stuff of big star's movies
    இப்போதெல்லாம் பெரிய நடிகர்களின் படங்கள் இரண்டு மூன்று வாரங்கள்தான் ஓடுகின்றன. மற்ற நாட்களில் கை கொடுப்பவை சின்ன படங்கள்தான் என்று பேசினார் திரையரங்க உரிமையாளர் சம்மேளனத் தலைவர் அபிராமி ராமநாதன்.

    துவார் சந்திரசேகரின் எப்சிஎஸ் நிறுவனம் தயாரித்துள்ள படம் பாக்கணும் போல இருக்கு. எஸ்பி ராஜ்குமார் இயக்கத்தில், புதுமுகங்கள் பரதன், கீதிகா, பரோட்டா சூரி, கஞ்சா கருப்பு உள்ளிட்டோர் நடித்துள்ள படம் இது. அருள்தேவ் இசையமைத்துள்ளார்.

    படத்தின் பாடல் மற்றும் ட்ரைலர் வெளியீட்டு விழா பிரசாத் லேப் தியேட்டரில் நடந்தது. இயக்குநரும் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளருமான சீமான், திரையரங்க உரிமையாளர் சம்மேளனத் தலைவர் அபிராமி ராமநாதன், நடிகை நமீதா உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

    விழாவில் பேசிய அபிராமி ராமநாதன், "இப்போதெல்லாம் சின்னப் படங்கள்தான் தியேட்டர்களை வாழ வைக்கின்றன. பெரிய நடிகர்களின் படங்களெல்லாம் இப்போது ரெண்டு மூணு வாரங்கள்கூட தாக்குப் பிடிக்கிறதில்ல. அப்புறம் படங்களுக்கு எங்கே போறது.. மிஞ்சிப் போனால் ஒரு ஆண்டுக்கு 12 பெரிய படங்கள் வரும். மீதி நாட்களில் கைகொடுப்பவை சிறு முதலீட்டுப் படங்களே.

    இவற்றுக்கு தியேட்டர்கள் தர நாங்கள் தயாராகவே உள்ளோம். ஆனால் ஒரேயடியாக கூட்டமாக வராமல், உங்களுக்குள் ஒரு திட்டமிடலோடு வாருங்கள். சீமான் போன்றவர்களிடம் ஆலோசனை பெற்று ஒரு திட்டம் வகுத்து வாருங்கள். சின்னப் படங்கள் நல்ல லாபம் சம்பாதிக்க முடியும்," என்றார்.

    English summary
    Abhirami Ramanathan, President of Theater owners association says that big star's movies are nowadays run away from theaters in just a couple of weeks.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X