அபிராமி 50.. பொன்னாடை போர்த்தி.. ரஜினியை விழாவிற்கு அழைத்தார்!

சென்னை : அபிராமி ராமநாதன், ரஜினியை இன்று அவரின் இல்லத்தில் சந்தித்துப் பொன்னாடை போர்த்தி விழாவிற்கு வருமாறு அழைப்பிதழ் வழங்கியுள்ளார்.

தமிழ் திரையுலகில் உள்ள அனைவருக்கும் மற்றும் தமிழ் திரைப்பட ரசிகர்கள் அனைவருக்கும் தெரிந்த நபர் தான் அபிராமி ராமநாதன். இவர் ரஜினிகாந்த் நடித்த அனைத்து படங்களும் திரையிட்டு உள்ளார்.

Abhirami Ramanathan met Rajini

இவர் சினிமா தயாரிப்பாளர் மற்றும் திரையரங்க உரிமையாளர் மற்றும் திரைப்பட விநியோகஸ்தர் என பன்முகத் தன்மை கொண்டவர். சென்னையில் உள்ள அபிராமி மெகா மாலின் உரிமையாளர். இவர் பல விருதுகளை குவித்துள்ளார். குறிப்பாக தமிழக அரசால் வழங்கப்படும் கலைமாமணி விருதை பெற்றுள்ளார்.

அபிராமி மெகா மால் சென்னை புரசைவாக்கத்தில் அமைந்துள்ள ஒரு பேரங்காடி ஆகும். கடந்த வருடம் தனது மெகா மாலை சீரமைத்தார். தற்போது, சீரமைக்கப்பட்டு மீண்டும் பல வசதிகள் உடன் திறக்கப்பட உள்ளதாக தெரிவித்தார்.

Abhirami Ramanathan met Rajini

மேலும், 1000 பேர்கள் அமரும் வசதியுடன் திரையரங்கம் திறக்க பட உள்ளதாகவும் தெரிவித்தார். 2000 பேர் படுத்துக்கு கொண்டு படம் பார்க்கும் வகையில் ஒரு திரையரங்கம் கட்டப்பட்டு வருகிறது என்றும் அதன் உடன் உணவு மற்றும் பல வசதிகள் செய்து கொடுப்பதாகவும் கூறியுள்ளார்.

தற்போது அபிராமி 50 என்று ஒரு விழா நடத்தப்பட உள்ளதாகவும் அதற்கு ரஜினியை அழைத்து உள்ளார் அபிராமி ராமநாதன் ரஜினியை இன்று அவரின் இல்லத்தில் சந்தித்துப் பொன்னாடை போர்த்தி விழாவிற்கு வருமாறு அழைப்பிதழ் வழங்கினார். அப்போது ரஜினி அவரிடம் தர்பார் படத்தின் வசூல் மற்றும் பலவற்றை கேட்டு அறிந்து இருப்பார் என்று கருதப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X