twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    அபிராமின்னு கூப்பிட சொன்னேன்... அஜித்துன்னு கூப்பிட சொன்னார்

    |

    சென்னை: பிக்பாஸ் வீட்டில் இருந்து வந்த பின்னர் தான் நடித்த நேர் கொண்ட பார்வை படத்தைப் பற்றி பல இடங்களில் பேசி வருகிறார் அபிராமி. அஜீத் ரசிகர்களுக்கு நன்றியும் கூறி வருகிறார். இந்த நிலையில்தான் சூட்டிங் ஸ்பாட்டில் தான் அஜீத் உடனான அனுபவங்களையும் கூறியுள்ளார்.

    நேர் கொண்ட பார்வை படத்தில் மூன்று பெண்களின் பாதிப்புகளைப் பற்றி கூறியிருப்பார்கள். சீரியஸ் கதாபாத்திரத்தில் நடித்த அந்த பெண்களுக்கு ரசிகர்களிடையே வரவேற்பும் உள்ளது. ஷ்ரத்தா ஸ்ரீநாத், அபிராமி, ஆண்ட்ரியா தாரியங் ஆகிய மூவருமே இந்த படத்தில் இஅற்புதமாக நடித்திருந்தனர்.

    Abhirami shares experience in Thala Ajith Nerkonda Paarvai

    நேர் கொண்ட பார்வை ரிலீஸ் ஆன நேரத்தில் அபிராமி பிக் பாஸ் வீட்டிற்குள் இருந்தார். போனவாரம்தான் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியே வந்தார். மல்டி பிளக்ஸ் தியேட்டரில் போய் படம் பார்த்த அவருக்கு அஜீத் ரசிகர்கள் கொடுத்த அன்பான வரவேற்பில் திக்குமுக்காடிப் போனார். உடனே நன்றி சொல்லி வீடியோ வெளியிட்டார்.

    நேர்கொண்ட பார்வை படப்பிடிப்பின் போது நேரிட்ட அனுபவங்களையும் அஜீத் உடனான அனுபவங்களைப் பற்றியும் பேட்டி கொடுத்து வருகிறார் அபிராமி.

    அப்போதுதான் படப்பிடிப்பில் எங்களின் முழு கவனமும் அஜீத் மீதே இருக்கும் என்று சொன்னார். நாங்க அஜீத்தை பார்த்துக்கொண்டே இருப்போம். அவர் நாங்க பார்ப்பதை பாத்து விடுவார் என்றும் கூறியிருக்கிறார்.

    Abhirami shares experience in Thala Ajith Nerkonda Paarvai

    பேசும் போதே அடிக்கடி ஜி ஜி என்று சொல்லுவார். எதற்கு ஜின்னு சொல்றீங்க. பேசாம அபிராமின்னு கூப்பிடுங்கன்னு சொன்னேன். அதற்கு அவரோ, மரியாதை எல்லாருக்கும் கொடுக்கணும் என்று சொல்வார். படம் ரிலீஸ் ஆகிறப்ப நான் இல்லை. என்னைய மிஸ் பண்ணதா சொன்னாங்க. அஜீத் கிட்ட மறுபடியும் பேச முடியுமா தெரியலை என்று கூறியுள்ளார் அபிராமி.

    English summary
    Actress Abhirami shares her experience in Thala Ajith's Nerkonda Paarvai
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X