twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    'அதுதான் பாஸ் பண்ணிவிட்டுருவோமே..' ஆன்லைன் தேர்வில் குளறுபடி.. பிக் பாஸ் நடிகை ஆவேசப் புகார்!

    By
    |

    சென்னை: ஆன்லைன் தேர்வில் சென்னைப் பல்கலைக்கழகம் குளறுபடி செய்துவிட்டதாக பிரபல நடிகை புகார் கூறியுள்ளார்.

    விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் கலந்துகொண்டதன் மூலம் பிரபலமானவர் அபிராமி வெங்கடாச்சலம்.

    சன் டிவியில் ஸ்டார் வார்ஸ், ஜீ டிவியில் டான்ஸ் ஜோடி டான்ஸ் உள்பட சில நிகழ்ச்சிகளில் பங்கேற்றுள்ள இவர், முன்னாள் மிஸ் தமிழ்நாடு.

     நயன்தாராவை தொடர்ந்து கோவா போக பிளான் போட்ட மாஸ்டர் ஹீரோயின்.. பங்கமாய் அட்வைஸ் செய்த ரசிகர்கள்! நயன்தாராவை தொடர்ந்து கோவா போக பிளான் போட்ட மாஸ்டர் ஹீரோயின்.. பங்கமாய் அட்வைஸ் செய்த ரசிகர்கள்!

    நேர்கொண்ட பார்வை

    நேர்கொண்ட பார்வை

    ஆனந்த் ஷங்கர் இயக்கிய நோட்டா படம் மூலம் சினிமாவில் அறிமுகமான இவர், அடுத்து களவு திரைப்படத்தில் கலையரசனுக்கு ஜோடியாக நடித்தார். பின்னர். அஜித்தின் நேர்கொண்ட பார்வை படத்தில் பாத்திமா பானு என்ற கேரக்டரில் நடித்தார். கவுதம் மேனன் இயக்கத்தில் விக்ரம் நடித்துள்ள துருவநட்சத்திரம் படத்திலும் நடித்து இருக்கிறார்.

    இரண்டாம் ஆண்டு

    இரண்டாம் ஆண்டு

    மலேசிய தமிழ்ப் படம் ஒன்றிலும் ஆரி அர்ஜுனா நடிக்கும் படத்திலும் கமிட் ஆகி இருக்கும் அபிராமிக்கு அபி, அம்மு, அபிராமி வெங்கடாச்சலம் ஆகியவை செல்லப்பெயர்கள். இவர் முதுகலை பரதநாட்டியம் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். இந்நிலையில் சென்னைப் பல்கலைக்கழகம் மீது அவர் புகார் கூறியுள்ளார்.

    தாங்கிக்கொண்டேன்

    தாங்கிக்கொண்டேன்

    இதுபற்றி அவர் வெளியிட்டுள்ள வீடியோவில் கூறியிருப்பதாவது: நான் எம்.ஏ. டான்ஸ், ஃபைனல் இயர் படித்து வருகிறேன். பல்கலைக்கழகத்துல என்ன டீட்டெய்ல் கேட்டாலும் எனக்கு பதில் கிடைக்காது. படிக்கணுங்கறதுக்காக அவங்க பண்ணின அவமானத்தை தாங்கிக்கொண்டேன். கடந்த 2 நாட்களுக்கு முன் இதற்கான தேர்வு நடந்தது.

    வேண்டிய மெயில்

    வேண்டிய மெயில்

    காலை 10 மணிக்கு மெயிலில் வினாத்தாள் வரும். பதில் எழுதி, பிடிஎப் பைலாக அனுப்ப வேண்டும் என்றார்கள். லேப்டாப் முன் காத்திருந்தும் வரவில்லை. இதே தேர்வை எழுதிய தோழியிடம் வினாத்தாளை வாட்ஸப்பில் வாங்கி பதில் எழுதி அனுப்பினேன். பிறகு 2.30 மணிக்கு வினாத்தாள் அனுப்பினார்கள். இதுபற்றி கேட்டபோது, நீங்கள் அனுப்ப வேண்டிய மெயில் இதுதான் என்று புதிய மெயில் ஐடியை கொடுத்தார்கள்.

    புதிதாக எழுதுங்கள்

    புதிதாக எழுதுங்கள்

    அப்படின்னா, நான் ஏற்கனவே அனுப்பிய மெயில் என்ன ஆச்சு? என்றேன். அதை டெலிட் செய்துவிட்டோம், புதிதாக எழுதுங்கள் என்றார்கள். கஷ்டப்பட்டு படித்து எழுதுவதை அவ்வளவு எளிதாக டெலிட் செய்துவிட்டோம் என்று அவர்கள் ஈசியாக சொல்வதை எப்படி ஏற்றுக் கொள்வது? கேட்டால், அதுதான் எல்லாரையும் பாஸ் பண்ணிவிட்டுருவோமே என்கிறார் ஒருவர்.

    பிரச்னை முடிஞ்சிடுச்சு

    பிரச்னை முடிஞ்சிடுச்சு

    இதே போல உங்களுக்கும் நடந்திருந்தால் மனதைத் தளர விடாதீர்கள். தொடர்ந்து கேள்வி கேளுங்கள். இவ்வாறு கூறியிருந்தார். இது பரபரப்பானது. இந்நிலையில் அவர் வெளியிட்டுள்ள மற்றொரு வீடியோவில், நான் பேசிய வீடியோவை நிறைய பேர் ஷேர் பண்ணியிருந்தீங்க. நன்றி. இப்போ அந்தப் பிரச்னை முடிஞ்சிடுச்சு என்று கூறியுள்ளார்.

    English summary
    Abirami venkatachalam has complained, University of Madras has messed up the online exam.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X