Abhirami: "கமலுக்காக அப்படி மாறுவதை தவிர வேற வழியே இல்ல..”: விருமாண்டி அபிராமி சொன்ன சீக்ரெட்!

சென்னை: விருமாண்டி படத்தில் கமலுக்கு ஜோடியாக நடித்தவர் நடிகை அபிராமி.

குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் அறிமுகமான அபிராமி, தமிழ், மலையாளம், தெலுங்கு உட்பட பல மொழிகளில் நடித்துள்ளார்.

 Abhirami: Virumaandi heroine Abhirami opens up about her crush on Kamal

விருமாண்டி படத்தில் கமலுக்கு ஜோடியாக நடித்தது குறித்து மனம் திறந்துள்ள அபிராமி, இன்னொரு சீக்ரெட்டையும் ஷேர் செய்துள்ளார்.

கமல் குறித்து அபிராமி பேசிய வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

கமலுக்காக மாறுவதை தவிர வேறு வழி இல்லை: கோலிவுட்டின் உச்ச நடிகர்களில் ஒருவரான கமல்ஹாசன், விக்ரம் வெற்றிக்குப் பின்னர் மீண்டும் நடிப்பில் பிஸியாகிவிட்டார். தற்போது இந்தியன் 2, ப்ராஜக்ட் கே படங்களில் நடித்து வரும் அவர், அடுத்தடுத்து மேலும் 2 திரைப்படங்களில் கமிட்டாகியுள்ளார். கமலின் கேரியரில் மிக முக்கியமான திரைப்படம் விருமாண்டி.

2004ம் ஆண்டு வெளியான இந்தத் திரைப்படம் மிகப் பெரிய வெற்றிப் பெற்றது. கதை, திரைக்கதை, இளையராஜாவின் இசை, மேக்கிங், கமலின் நடிப்பு என அனைத்துவிதத்திலும் விருமாண்டி படத்தை இப்போதும் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். இந்தப் படத்தில் கமலுக்கு ஜோடியாக அபிராமி நடித்திருந்தார். அன்னலெட்சுமி என்ற கேரக்டரில் நடித்த அபிராமிக்கு விருமாண்டி பெரியளவில் பெயர் வாங்கிக் கொடுத்தது.

மலையாள நடிகையான அபிராமி, தமிழில் தோஸ்த் திரைப்படம் என்ட்ரி கொடுத்தார். தொடர்ந்து தமிழில் கார்மேகம், சமஸ்தானம் போன்ற படங்களில் நடித்த அவருக்கு, விருமாண்டி தான் லைஃப் டைம் செட்டில்மெண்ட் படமாக அமைந்தது. இந்நிலையில், இந்தப் படத்தில் நடித்தது குறித்து ஒரு பேட்டியில் பேசியுள்ள அபிராமி, கமல்ஹாசன் குறித்தும் மனம் திறந்துள்ளார்.

அதாவது, "கமல் சாருக்கு ரசிகையாவதை தவிர எனக்கு வேற வழியே இல்லை" எனக் கூறியுள்ள அபிராமி, அதன் பின்னணியையும் விவரித்துள்ளார். "தனது குடும்பத்தில் அனைவருமே கமல் சாரின் ரசிகர்கள் என்பதால், நானும் அப்படியே மாறிவிட்டேன். அம்மா, பெரியம்மா என அனைவருமே கமலின் தீவிர ரசிகர்கள். சிகப்பு ரோஜாக்கள் படத்தின் பாடல்களை அம்மாவும் பெரியம்மாவும் பாடிக் கொண்டே இருப்பார்கள்" என்றுள்ளார்.

மேலும், கமல் என்ற பெயர் எங்கள் குடும்பத்தில் ரொம்பவே ஸ்பெஷல் என்றும், அதனால் தான் குணா படம் வெளியான பின்னர் எனது திவ்யா என்ற பெயரை, அபிராமி என மாற்ற சொன்னார்கள். அப்படித்தான் நான் தொலைக்காட்சியில் நிகழ்ச்சித் தொகுத்து வழங்கும் போது அபிராமி என மாற்றிக் கொண்டதாக அவர் தெரிவித்துள்ளார். அதுமட்டும் இல்லாமல் கமல் சாரின் படங்கள் மட்டுமில்லாமல், அவரது பயோகிராபியும் தனக்கு மிகவும் பிடிக்கும் என அபிராமி கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X