முதல் படத்தை பார்க்க அப்பா இல்லையே: வாரிசு நடிகரை பார்த்து ஃபீல் பண்ணும் திரையுலகினர்
Recommended Video
பெங்களூர்: மறைந்த கன்னட நடிகர் அம்பரீஷின் மகன் அபிஷேக் நடித்துள்ள முதல் படம் அடுத்த மாதம் ரிலீஸாக உள்ளது.
அண்மையில் மறைந்த நடிகர் அம்பரீஷ், நடிகை சுமலதாவின் மகன் அபிஷேக் பெற்றோர் வழியில் நடிகராகியுள்ளார். அவர் நடித்துள்ள அமர் என்கிற படம் வரும் மே மாதம் 31ம் தேதி வெளியாக உள்ளது.
படப்பிடிப்பு துவங்கியபோது இருந்த அம்பரீஷ் படத்தை பார்க்க உயிருடன் இல்லை.

அம்பரிஷ்
தன்னுடைய முதல் படம் ரிலீஸாகும்போது அப்பா இல்லையே என்ற வருத்தம் அபிஷேக்கிற்கு உள்ளது. மகன் நடிகராகியுள்ளதை பார்க்க அம்பி இல்லையே என்று கூறி சாண்டல்வுட்காரர்களும் வருத்தப்படுகிறார்கள்.

ஆசை
அபிஷேக் படங்களில் நடிக்க வேண்டும் என்று நாங்கள் ஒருபோதும் அவரிடம் கூறியது இல்லை. பெற்றோராக, அவருக்கு சிறந்த கல்வியை அளித்துள்ளோம். ஆனால் அவருக்கு நடிப்பு மீது ஈர்ப்பு ஏற்பட்டது. கன்னட திரையுலகில் உள்ள இளசுகளை பார்த்து ஆசை வந்தது போன்று என அம்பரீஷ் பேட்டி ஒன்றில் தெரிவித்தார்.

அபிஷேக்
என் மகன் என்பதால் கன்னட திரையுலகில் அபிஷேக்கிற்கு சிவப்புக் கம்பள வரவேற்பு கிடைக்கும். ஆனால் தனக்கென்று ஒரு பெயரை அவர் தான் சம்பாதிக்க வேண்டும். இயக்குநரை மதிக்க வேண்டும் என்பது தான் நான் என் மகனுக்கு அளித்த அறிவுரை ஆகும் என்று அம்பரீஷ் முன்பு தெரிவித்தார்.

அம்மா
லோக்சபா தேர்தலில் மாண்டியா தொகுதியில் சுயேட்சையாக போட்டியிட்ட தனது அம்மா சுமலதாவுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்தார் அபிஷேக் என்பது குறிப்பிடத்தக்கது. சுமலதாவுக்காக நடிகர்கள் தர்ஷன், யஷ் ஆகியோரும் வாக்கு சேகரித்தனர்.


Click it and Unblock the Notifications











