Aishwarya rai daughter: கேட்டாலே தலை சுற்றும் ஐஸ்வர்யா ராய் மகளின் ஸ்கூல் பீஸ்!
சென்னை: பாலிவுட் நட்சத்திர தம்பதிகளான ஐஸ்வர்யா ராய் மற்றும் அபிஷேக் பச்சனின் மகள் ஆராத்யாவின் பள்ளி கட்டணம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது.
நடிகர் அபிஷேக் பச்சன் மற்றும் நடிகை ஐஸ்வர்யா ராய் இருவருக்கும் 2007ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது.

இருவருக்கும் 2011ஆம் ஆண்டு ஒரு பெண் குழந்தை பிறந்தது. அக்குழந்தைக்கு ஆராத்யா பச்சன் என பெயர்வைக்கப்பட்டுள்ளது.
ஐஸ்வர்யா ராயின் மகள்: அமிதாப் பச்சனின் பேத்தியும் அபிஷேக் பச்சன் மற்றும் ஐஸ்வர்யா ராயின் மகளான ஆராத்யா பச்சனுக்கு 12 வயதாகிறது. அடிக்கடி அம்மா ஐஸ்வர்யா ராயுடன் விருது விழாக்களுக்கும், சினிமா விழாக்களுக்கும் குழந்தையாக இருந்ததில் இருந்தே பெற்றோருடன் கலந்து கொண்டு வருகிறார்.

பள்ளிக்கட்டணம்: இந்நிலையில், ஆராத்யாவின் பள்ளி கட்டணம் குறித்த தகவல் சோஷியல் மீடியாவில் வெளியாகி பேசுபொருளாகி உள்ளது. அதில், மும்பையில் திருபானி அம்பானி சர்வதேச பள்ளியில் ஐஸ்வர்யா மகள் ஆராத்யா 8ம் வகுப்பு படித்து வருகிறார். அங்கு எல்கேஜி முதல் ஏழாம் வகுப்பு வரை கட்டணம் ஒரு லட்சத்து 70 ஆயிரம் ரூபாய் என்றும், அதேபோல் எட்டாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை கட்டணம் நான்கு லட்சத்து 48 ஆயிரம் ரூபாயாகவும், பிளஸ் ஒன் மற்றும் பிளஸ் டூக்கான பள்ளி கட்டணம் ஒன்பது லட்சத்து 15 ஆயிரம் ரூபாய் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.

தலையே சுத்துதே: ஷாருக்கான், சைப் அலிகானின் குழந்தைகள் அங்குதான் படித்து வருவதாகவும், கிரிக்கெட் வீரர் டோனியின் மகள் ரீவா படிக்கும் பள்ளியில் இரண்டு லட்சத்து 75 ஆயிரம் ரூபாய் வசூலிப்பதாக வெளியான தகவல் இணையத்தில் பரவி நெட்டிசன்களை தலைசுற்றலுக்கு உள்ளாக்கி உள்ளது.
நீதிமன்றத்தில் வழக்கு: அண்மையில், ஐஸ்வர்யா ராயின் மகள் ஆராத்யாவின் உடல்நலம் சரியில்லை என்றும் அவருக்கு அரிய வகை நோய் உள்ளதாகவும் யூடியூப் சேனல்கள் சமீபத்தில் வதந்தி ஒன்றை பரப்பின. தவறான உள்நோக்கத்துடன் இப்படியொரு வதந்தியை பரப்பிய சுமார் 10 யூடியூப் சேனல்கள் மீது ஆராத்யா வழக்கு தொடர்ந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











