ஐஸ்வர்யா ராயுடன் விவாகரத்தா?.. அதெல்லாம் குப்பை.. கோபமாக பேசிய அபிஷேக் பச்சன்.. மனுஷன் காண்டாகிட்டாரு

மும்பை: நடிகை ஐஸ்வர்யா ராயும், நடிகர் அபிஷேக் பச்சனும் காதலித்து கடந்த 2007ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார்கள். அவர்களுக்கு ஆராத்யா என்ற மகள் இருக்கிறார். சுமூகமாக போய்க்கொண்டிருக்கும் அவர்கள் திருமண வாழ்க்கையில் பிரச்னை வந்திருப்பதாகவும்; விவாகரத்து செய்யவிருக்கிறார்கள் என்றும் கடந்த சில காலமாகவே பேச்சுக்கள் ஓடி பாலிவுட் மட்டுமின்றி மற்ற திரைத்துறை ரசிகர்களுக்கும் ஷாக்கை கொடுத்துவருகிறது.

உலக அழகி பட்டம் வென்ற ஐஸ்வர்யா ராய் தமிழில் அறிமுகமானாலும்; அவரது முழு கவனமும் ஹிந்தியில்தான் இருந்தது. அங்கு அவருக்கு கிடைத்த பயங்கரமான ரெஸ்பான்ஸால் ஒட்டுமொத்த இந்தியர்களும் அவரது ரசிகர்களாக மாறினார்கள். கான் நடிகர்களோடு ஜோடி போட்டு நடித்து தனக்கான தனி சாம்ராஜ்ஜியத்தை மும்பையில் நிறுவிய அவர்; தமிழில் ரொம்பவே செலக்ட்டிவ்வான கதைகளில் மட்டுமே நடித்தார். அப்படி நடித்த படங்கள் எல்லாம் நல்ல வரவேற்பை பெற்றன.

அபிஷேக்குடன் திருமணம்: இதற்கிடையே அவரது கரியர் பீக்கில் இருந்தபோது நடிகர் சல்மான் கானை காதலித்தார். இரண்டு பேரும் திருமணம் செய்துகொள்வார்கள் என்று எதிர்பார்த்த சூழலில்; அந்த உறவு பிரேக் அப் ஆகிவிட்டது. அதற்கு முழு காரணம் சல்மான்தான் என்று சொல்லப்படுவதுண்டு. அவரைத் தொடர்ந்து விவேக் ஓபராயுடனான காதலும் பாதியில் முடிய; மூன்றாவதாக அபிஷேக் பச்சனை காதலித்து கடந்த 2007ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார்கள். அவர்களுக்கு ஆராத்யா என்ற மகள் இருக்கிறார்.

Abhishek Bachchan Breaks Silence on Aishwarya Rai Divorce Rumors Calls It Complete Rubbish
Photo Credit:

தொடர்ந்து பரவும் விவாகரத்து வதந்தி: அவர்களது திருமண வாழ்க்கை சுமூகமாக போய்க்கொண்டிருக்கிறது. ஆனால் அபிஷேக் வீட்டுக்குள் பிரச்னை; அதனால் தனது மகளை அழைத்துக்கொண்டு தன்னுடைய தாய் வீட்டில் ஐஸ்வர்யா செட்டில் ஆகிவிட்டார்; இந்த பிரச்னைக்கெல்லாம் விதை போட்டதே அபிஷேக்கின் தாயான ஜெயா பச்சன்தான் என்றும் செய்திகள் கிளம்பின. ஆனால் அதனை திட்டவட்டமாக ஜெயா மறுத்தார். மேலும் தங்களுக்குள் பிரச்னை எதுவும் இல்லை என்பதை ஐஸ்வர்யா ராய் தன்னுடைய நடவடிக்கைகளால் தொடர்ந்து உணர்த்தினாலும் இந்த வதந்தி நின்றபாடில்லை.

அபிஷேக் பச்சன் பேட்டி: இந்நிலையில் தொடர்ந்து பரவும் இந்த வதந்திக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக ஒரு பேட்டியில் பேசியிருக்கிறார் அபிஷேக் பச்சன். அவர் அளித்த பேட்டி ஒன்றில், "எங்களை பற்றி வரும் விவாகரத்து தொடர்பான செய்திகள் முற்றிலும் பொய்யானது. அது ஒரு ரப்பிஷ்ஷான விஷயம். நானும் ஐஸ்வர்யாவும் காதலித்தபோது எங்கள் திருமணம் எப்போது என்று பேசினார்கள். இப்போது விவாகரத்து பற்றி பேசிக்கொட்னிருக்கிறார்கள். இதெல்லாம் குப்பையான ஒன்று.

நாங்கள் யார் என்று எங்களுக்கு தெரியும்: என்னை பற்றி ஐஸ்வர்யா ராய்க்கும், ஐஸ்வர்யா ராய் பற்றி எனக்கும் நன்றாக தெரியும். நாங்கள் மகிழ்ச்சியான குடும்பத்தில் மகிழ்ச்சியாக இருக்கிறோம். அதுதான் முக்கியம். கிசுகிசுவில் உண்மை இருந்தால்தானே அது எங்களை பாதிக்கும். அதேசமயம் எங்கள் குடும்பத்தை பற்றி பேசினால் கண்டிப்பாக நான் சும்மா இருக்கமாட்டேன். இந்த பொய்யை, வேண்டுமென்றே உருவாக்கப்பட்ட குப்பையையும் பொறுத்துக்கொள்ளமாட்டேன். இதோடு இதற்கு முற்றுப்புள்ளி வைத்துவிடுங்கள்" என்றார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X