அமிதாப் குடும்பத்திற்கு கொரோனா தொற்ற இவர்தான் காரணமாமே.. தீயாய் பரவும் தகவல்!
சென்னை: அமிதாப் பச்சன் குடும்பத்திற்கு கொரோனா தொற்று பரவ காரணம் அபிஷேக் பச்சன் என தகவல் வெளியாகியுள்ளது.
Recommended Video
பிரபல பாலிவுட் நடிகரான அமிதாப் பச்சன் மற்றும் அவரது மகன் அபிஷேக் பச்சன் ஆகியோருக்கு கொரோனா தொற்று இருப்பது கடந்த சனிக்கிழமை தெரிய வந்தது.
இதனை நடிகர் அமிதாப் பச்சன் தனது டிவிட்டர் வாயிலாக உறுதிப்படுத்தினார். அவர்கள் இருவரும் மும்மை நானாவதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

ஹோம் குவாரண்டைன்
இந்நிலையில் அமிதாப் பச்சனின் மருமகளும் அபிஷேக் பச்சனின் மனைவியுமான நடிகை ஐஸ்வர்யா ராய் மற்றும் அவரது மகள் ஆரத்யா ஆகியோருக்கு கொரோனா தொற்று இருப்பது நேற்று உறுதி செய்யப்பட்டது. அமிதாப் பச்சன் மற்றும் அபிஷேக் பச்சன் ஆகியோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் ஐஸ்வர்யா ராயும் ஆரத்யாவும் வீட்டிலேயே தனிமைப் படுத்தப்பட்டுள்ளனர்.

வெளியே வரவில்லை
அதேநேரத்தில் அமிதாப் பச்சனின் மனைவியான ஜெயா பச்சனுக்கு கொரோனா இல்லை என தெரிய வந்தது. கொரோனா பரவ தொடங்கிய நாள் முதலே, நடிகர் அமிதாப் பச்சன் வீட்டை விட்டு வெளியே வரவில்லை. வீட்டிற்குள்தான் முடங்கிக் கிடந்தார். சமூக வலைதளங்களில்தான் நேரத்தை கழித்து வந்தார்.

எப்படி கொரோனா?
அவரது நண்பரான ரிஷி கபூர் இறந்த போது கூட அவரது குடும்பத்தினர் சார்பில் அபிஷேக் பச்சன்தான் இறுதிச்சடங்கில் கலந்து கொண்டார். இவ்வளவு பாதுகாப்பாக இருந்த நடிகர் அமிதாப் பச்சனுக்கு எப்படி கொரோன பரவியது என்பது பெரும் கேள்வி குறியாக இருந்தது.

வெப் சினிமாவுக்கு டப்பிங்
இந்நிலையில் நடிகர் அபிஷேக் பச்சன் மூலமாகதான் அமிதாப் வீட்டிற்குள் கொரோனா நுழைந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. அபிஷேக்பச்சன், Breath: into the shadows என்ற வெப் சினிமாவில் நடித்து வருகிறார். அதற்கு டப்பிங் பேசுவதற்கு சவுண்ட் விஷன ஸ்டூடியோவுக்கு சென்றதாக தெரிகிறது.

அபிஷேக் மூலம்?
ஒரு நாள் முழுவதும் அந்த ஸ்டூடியோவில் நடிகர் அபிஷேக் பச்சன் இருந்ததாக தெரிகிறது. மேலும் ஸ்டூடியோவுக்கு வெளியே சில போட்டோகிராஃபர்களையும் அவர் சந்தித்தாக தெரிகிறது. அங்கிருந்துதான் அபிஷேக் பச்சன் கொரோனாவை வீட்டிற்கு கொண்டு வந்ததாக கூறப்படுகிறது.

ரசிகர்கள் பிரார்த்தனை
அபிஷேக் பச்சன் மற்றும் அவரது குடும்பத்திற்கு கொரோனா உறுதிப்படுத்தப்பட்டதை தொடர்ந்து சவுண்ட் விஷன் ஸ்டுடியோ மூடப்பட்டுள்ளது. இதனிடையே நடிகர் அமிதாப் பச்சன் மற்றும் அவரது குடும்பத்தினர் விரைவில் குணமடைந்து வீடு திரும்ப வேண்டும் என்று ரசிகர்கள் பிரார்த்தனை செய்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











