Aishwarya Rai: அதுக்கு வேற ஆளைப் பாருங்க.. விவாகரத்து வதந்திகளை சிக்ஸருக்கு விளாசிய அபிஷேக் பச்சன்
மும்பை: நடிகை ஐஸ்வர்யா ராய் மற்றும் அவரது கணவரும் நடிகருமான அபிஷேக் பச்சனுக்கும் இடையில் விவாகரத்து நடைபெறவுள்ளதாக கடந்த சில மாதங்களாகவே தகவல்கள் உலா வருகின்றது. ஆனால் இது தொடர்பாக ஐஸ்வர்யா ராய் தரப்பில் இருந்தோ, அபிஷேக் பச்சன் தரப்பில் இருந்தோ அதில் வராததால், இந்த செய்திகள் இப்போதுவரை கிசுகிசுக்களாகவே உலா வருகின்றது. இப்படியான நிலையில் தனது விவாகரத்து குறித்த வதந்திகளுக்கு பட்டும் படாமலும் பதில் அளித்துள்ளார் அபிஷேக் பச்சன். அவரது நடிப்பில் வெளியாகியுள்ள ஐ வாண்ட் டூ டாக் என்ற படத்தின் ப்ரோமோசனின்போது இது தொடர்பாக அவர் பேசியுள்ளார்.
1994ஆம் ஆண்டு உலக அழகி பட்டம் வென்றவரும் நடிகையுமான ஐஸ்வர்யா ராய்க்கும் பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் மகனும் நடிகருமான அபிஷேக் பச்சனுக்கும் கடந்த 2007ஆம் ஆண்டு ஏப்ரல் 20ஆம் தேதி திருமணம் நடைபெற்றது. இந்தியாவே திரும்பிப் பார்க்கும் வகையில் நடைபெற்ற இந்தத் திருமணத்தில் இந்தியா முழுவதும் இருந்து பல நட்சத்திரங்களும் அரசியல் தலைவர்களும் கலந்து கொண்டு இவர்களை வாழ்த்தினர். இவர்கள் இருவருக்கும் ஆராத்யா பச்சன் என்ற மகள் உள்ளார்.

இந்நிலையில் கடந்த சில மாதங்களாகவே இவர்கள் இருவருக்கும் இடையில் விவாகரத்து ஏற்படவுள்ளதாகவும் அதற்கு முக்கிய காரணமே அபிசேக் பச்சன் தான் எனவும் ஹிந்தி ஊடகங்களில் கிசுகிசுக்கள் அதிகம் உலா வருகின்றது. குறிப்பாக இந்த கிசுகிசுக்களை உண்மையோ என யோசிக்க வைக்கும் வகையில் ஒரே பொது நிகழ்ச்சியில் இருவரும் கலந்து கொண்டாலும், இருவரும் தனித்தனியே கலந்து கொள்கின்றர். மேலும் ஐஸ்வர்யா ராய்யுடன் அவரது மகள் எப்போதும் உள்ளார். அதேபோல் அபிஷேக் பச்சன் பாலிவுட் நடிகை நிம்ரத் கவுர் உடன் டேட்டிங்கில் இருக்கின்றார் என்ற கிசுகிசுக்களும் உலா வருவதால் ரசிகர்கள் கவலையில் உள்ளனர். இந்தியத் திரையுலகில் மிகவும், சூப்பரான ஜோடியாக பார்க்கப்படும் இவர்கள் இருவரும் பிரியவுள்ளனர் என்ற கிசுகிசுக்களே ரசிகர்களை கவலைக்குள் தள்ளிவிட்டது.
விவாகரத்து: இந்நிலையில் தனது நடிப்பில் வெளியாகியுள்ள, ஐ வாண்ட் டூ டாக் படத்தின் ப்ரோமோசனில் கலந்து கொண்ட அபிஷேப் பச்சனிடம் இது தொடர்பாக மறைமுகமாக கேள்வி கேட்கப்பட்டது. அதாவது, உங்களை நோக்கி வரும் வதந்திகள், அவதூறுகளை எப்படிக் கையாளுகின்றீர்கள், அதெற்கெல்லாம் நீங்கள் ரியாக்ட் செய்வதே இல்லையே என்பது போன்ற கேள்வி கேட்கப்பட்டது.

கெட்டவன்: இந்த கேள்விக்கு அபிஷேக் பச்சன் அளித்த பதில் அவரது ரசிகர்களை மட்டும் இல்லாமல், ஐஸ்வர்யா ராய் ரசிகர்களையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அதாவது, அவர் அந்தக் கேள்விக்கு பதில் அளிக்கையில்," கெட்டவன் கெட்டவனாக இருப்பதை நிறுத்தவில்லை என்றால், நல்லவன் நல்லவனாக இருப்பதை ஏன் நிறுத்தவேண்டும்?. நான் மிகவுமே பாசிட்டிவான ஆள். என்னால் நெகட்டிவாக இருக்க முடியாது, நெகட்டிவிட்டியுடனும் இருக்க முடியாது. என்னைப் பற்றி வரக்கூடிய நெகட்டிவிட்டி கருத்துக்களுக்கு எல்லாம் பதில் சொல்லிக் கொண்டு இருந்தால் நான் அவர்களுக்கு பதில் சொல்வதிலேயே என் வாழ்க்கையை இழந்துவிடுவேன். நான் அப்படிப்பட்ட ஆள் கிடையாது" என பதில் அளித்தார்.

முற்றுப்புள்ளி: இவரது இந்த பதில் பாலிவுட்டில் தற்போது வேகமாக பரவி வருகின்றது. குறிப்பாக தனது விவாகரத்து தொடர்பாக பகிரப்பட்டு வரும் வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் அபிசேக் பச்சன் பேசியது கவனம் பெற்றுள்ளது. அதேநேரத்தில் அண்மையில் ஐஸ்வர்யா ராயின் பிறந்த நாளுக்கு அபிஷேக் பச்சன் வாழ்த்து கூட சொல்லவில்லை என ஊடகங்களில் செய்திகள் வெளியானது.


Click it and Unblock the Notifications











