எனக்கும் என் பொண்டாட்டிக்கும் சண்டையா? டிவிட்டரில் பொங்கிய வாரிசு நடிகர்!
ஐஸ்வர்யா ராய்க்கும் கணவர் அபிஷேக் பச்சனுக்கும் மோதல் என வெளியான தகவலை அபிஷேக் பச்சன் மறுத்துள்ளார்.
Recommended Video

மும்பை ஐஸ்வர்யா ராய்க்கும் கணவர் அபிஷேக் பச்சனுக்கும் மோதல் என வெளியான தகவலை அபிஷேக் பச்சன் மறுத்துள்ளார்.
ஐஸ்வர்யாராய்க்கும், இந்தி சூப்பர் ஸ்டாரான அமிதாப்பச்சனின் மகனும் நடிகருமான அபிஷேக் பச்சனுக்கும் 2007 ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு ஆராத்யா என்ற பெண் குழந்தை உள்ளது.
ஐஸ்வர்யா ராய்க்கும், அபிஷேக்பச்சனுக்கும் சமீப காலமாக நல்ல உறவு இல்லை என்று தகவல் பரவியது. அபிஷேக்பச்சன் தாயாருக்கும் ஐஸ்வர்யாராய்க்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு மாமியார் மருமகள் சண்டை நடப்பதாகவும் தகவல் வெளியானது.

ஐஸ்வர்யாவுடன் மோதல்
இந்நிலையில் அபிஷேக் பச்சன் சகோதரி ஸ்வேதாவுக்கும் ஐஸ்வர்யா ராயை பிடிக்கவில்லை என்று பேசப்பட்டது. திருமணத்துக்கு பிறகு ஐஸ்வர்யாராய் தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார்.

தனிக்குடித்தனம்
வேறு நடிகர்களுடன் அவர் நெருக்கமாக நடிப்பதை அபிஷேக் பச்சன் விரும்பவில்லை என்றும் கூறப்பட்டது. மாமியார் மருமகள் சண்டை காரணமாக மும்பையில் புதிதாக வாங்கிய வீட்டுக்கு தனிக்குடித்தனம் செல்ல அபிஷேக் பச்சனிடம் ஐஸ்வர்யாராய் வற்புறுத்தியதாகவும் கூறினர்.

வைரலான வீடியோ
இந்த நிலையில் அபிஷேக் பச்சனுக்கும், ஐஸ்வர்யாராய்க்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்து விட்டதாக இணையதளம் ஒன்றில் செய்தி வெளியானது. இருவரும் லண்டனுக்கு சென்று திரும்பியபோது மும்பை விமான நிலையத்தில் சண்டை போட்டதாக வீடியோ ஒன்றும் வெளியானது.

பொங்கிய அபிஷேக் பச்சன்
இதுகுறித்து அபிஷேக் பச்சன் தனது டிவிட்டர் பக்கத்தில் பதில் அளித்துள்ளார். அதாவது‘‘தயவு செய்து தவறான தகவலை வெளியிட வேண்டாம். தொடர்ந்து ஏதாவது போஸ்ட் போட வேண்டும் என்ற தேவை இருப்பதை நான் புரிந்துகொள்கிறேன்.

பொறுப்போடு நடந்துகொள்ளுங்கள்
ஆனால் தவறான தகவலை வெளியிடாமல் பொறுப்புணர்வுடன் உண்மை தகவலை மட்டும் வெளிப்படுத்துங்கள்''இவ்வாறு அபிஷேக் பச்சன் தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











